உள்ளடக்கத்துக்குச் செல்

செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°02′33″N 101°42′19″E / 3.042449°N 101.705226°E / 3.042449; 101.705226
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 PY31 
செர்டாங் ராயா உத்தாரா
| எம்ஆர்டி
செர்டாங் ராயா உத்தாரா நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Serdang Raya Utara
அமைவிடம்தாமான் செர்டாங் ராயா, செரி கெம்பாங்கான் சிலாங்கூர்  மலேசியா
ஆள்கூறுகள்3°02′33″N 101°42′19″E / 3.042449°N 101.705226°E / 3.042449; 101.705226
உரிமம் எம்ஆர்டி நிறுவனம்
பிரசரானா
இயக்குபவர் ரேபிட் கேஎல்
தடங்கள்12  புத்ராஜெயா 
நடைமேடை2 (1 தீவு நடைமேடை)
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்T561  T562  T563 
ரேபிட் பேருந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட நிலை
தரிப்பிடம்Parking உண்டு (கட்டணம்)
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடு PY31 
வரலாறு
திறக்கப்பட்டது புத்ராஜெயா  16.03.2023
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
சுங்கை பீசி
குவாசா
 
புத்ராஜெயா வழித்தடம்
 
செலாத்தான்
புத்ராஜெயா
அமைவிடம்
Map

செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Serdang Raya Utara MRT Station; மலாய்: Stesen MRT Serdang Raya Utara) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், செரி கெம்பாங்கான், தாமான் செர்டாங் ராயா புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். தாமான் செர்டாங் ராயா பகுதிகளுக்குச் சேவை செய்யும் இந்த நிலையம், புத்ராஜெயா வழித்தடத்தின் 2-ஆவது கட்டத் திறப்பின் ஒரு பகுதியாக, மார்ச் 16, 2023 அன்று முறைப்படி திறக்கப்பட்டது.

தற்போது  PY29  சுங்கை பீசி நிலையத்திற்கும்  PY32  செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையம்  PY31  எனும் நிலையக் குறியீட்டைக் கொண்டுள்ளது.[1] கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான எம்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் அடுக்கு மாடி அமைப்பைக் கொண்டுள்ளது.

வரலாறு

[தொகு]

இந்த நிலையம், கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); 12 புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் 2023 மார்ச் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது.[1] இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பில் செர்டாங் ராயா உத்தாரா நிலையமும் ஒரு பகுதியாக அமையும் என 2016 செப்டம்பர் 15-ஆம் தேதி எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது.

முன்பு செயல்பாட்டில் இருந்த சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பு தற்போது 12 புத்ராஜெயா வழித்தடம் என அழைக்கப்படுகிறது. இந்த  PY31  செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட நிலையமாக உருவாக்கப்பட்டது.[1]

கட்டுமானங்கள்

[தொகு]

டிஆர்சி எனர்ஜி (TRC Synergy) எனும் நிறுவனத்துடன் மலேசிய அரசாங்கம் செய்து கொண்ட கட்டுமான உடன்படிக்கையின் கீழ் செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம் அடுக்குமாடி நிலையில் உருவாக்கப்பட்டது. 2017 செப்டம்பர் மாதம் கையெழுத்தான அந்த உடன்படிக்கையின் கீழ்  PY31  செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையக் கட்டுமான கட்டமைப்புகள் டிஆர்சி எனர்ஜி நிறுவனத்திடம் வழங்கப்பட்டன. இந்தக் கட்டுமான கட்டமைப்பிற்கு தொகுப்பு V205 (Pakej V205) என பெயர் வைக்கப்பட்டது.

கட்டுமான கட்டமைப்புகளில் நிலையங்களின் இணைப்புவழிகள், நடைமேடைகள், நிலையக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புக் கட்டுமானப் பணிகள் அடங்கும். அவற்றுள்  PY31  செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையத்தின் கட்டமைப்புக் கட்டுமானப் பணிகளும் உள்ளடங்கும்.[2][3][4]

அத்துடன், V205 கட்டுமானத் தொகுப்பில்  SP16   PY29  சுங்கை பீசி நிலையம்; மற்றும்  PY30  தாமான் தெக்னோலஜி எம்ஆர்டி நிலையக் கட்டுமானமும் அடங்கும். அதே டிஆர்சி எனர்ஜி நிறுவனத்திடம் நவம்பர் 2016-இல் RM 858.18 மில்லியனுக்கு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.[5]

செயல்பாடு

[தொகு]

 PY31  செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம், பொதுமக்களுக்கு மார்ச் 16, 2023 அன்று திறக்கப்பட்டது.  KC03   PY14  பத்து கன்டோன்மன் கொமுட்டர் நிலையம் தொடங்கி  PY41  புத்ராஜெயா சென்ட்ரல் வரையிலான பிற புத்ராஜெயா வழித்தட நிலையங்களுடன் இணைந்து இந்த நிலையமும் செயல்படத் தொடங்கியது.

அமைவு

[தொகு]

செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம் சிலாங்கூரில் உள்ள மாவட்டங்களில் ஒன்றான உலு லங்காட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. E37 கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலையின் சுங்கை பீசி சுங்கச் சாவடி; E2 கிழக்கு–மேற்கு இணைப்பு விரைவுச்சாலை; மற்றும் E2 மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடம் ஆகியவற்றுக்கு அருகில் இந்த நிலையம் அமைந்துள்ளது.[6]

கட்டமைப்பு

[தொகு]

ரேபிட் கேஎல் வெளியிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து வரைபடத்தின் அடிப்படையில்,  PY31  செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம் தெரு மட்டத்தில், வாகன நிறுத்துமிட வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.[7]

 PY31  செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளைக் கொண்டுள்ளது.[5] அதாவது மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுப் பாதைகள்; நிலையத்தைச் சுற்றியுள்ள தரை மேற்பரப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தொடு தொகுதிகள்; அவர்களுக்கு ஏற்ற கழிவறைகள்; சக்கர நாற்காலி பயனர்களுக்கான தாழ்நிலை மின்தூக்கி பொத்தான்கள்; மின்தூக்கி பொத்தான்களில் பிரெய்லி எழுத்து பொத்தான்கள் மற்றும் சக்கர நாற்காலி பயனர்களுக்கான தாழ்நிலை சேவை மையங்கள் போன்றவை அடங்கும்.[7]

கூடுதலாக, பொது கழிவறை வசதிகள், ஆண்கள் பெண்களுக்கான வழிபாட்டு அறைகள் (Surau), வாடிக்கையாளர் சேவை மையங்கள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் படிக்கட்டுகள் ஆகியவை பயனர்களின் தேவைகளையும் வசதியையும் நிறைவு செய்ய அமைக்கப்பட்டு உள்ளன. நிலைய நுழைவு மட்டத்தில் உள்ள தற்சேவை பயணச் சீட்டு இயந்திரங்கள் மூலம் பயனர்கள் பயணச் சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.[7]

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

[தொகு]

இந்த நிலையத்தில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன.[8]

 புத்ராஜெயா  — செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம்
நுழைவாயில் அமைவிடம் இலக்கு தோற்றம்
A உத்தாமா சாலை வாகன நிறுத்தல்/பயணம், ஊட்டி பேருந்து நிறுத்தம், வாடகை வாகன சவாரி அழைப்பு (→) உத்தாமா சாலை (கிழக்கு பக்கம்) (→) தாமான் செர்டாங் ராயா 6 (→) தாமான் செர்டாங் ராயா 7 (→) தாமான் செர்டாங் ராயா 9 (→) செர்டாங் ராயா பிளாசா (→) செர்டாங் ராயா அல்-இசுலா பள்ளிவாசல் (→) தாமான் புத்ரா இண்டா
B ஒன் சவுத் சாலை (OS) வாடகை வாகன சவாரி அழைப்பு (→) OS சாலை (கிழக்குப் பகுதி) (→) தாமான் செர்டாங் பெர்டானா

பேருந்து சேவைகள்

[தொகு]
செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையத்தின் பேருந்து சேவைகள்
பேருந்து தொடக்கம் இலக்கு
T561   PY31  செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A புக்கிட் செர்டாங் (→) SR 6/1 சாலை (→) SR 7/2 சாலை (→) PBS 14/1 சாலை (→) BS 11/14 சாலை (→) கஸ்தூரி சாலை (→) கெமரா சாலை
T562   PY31  செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A செர்டாங் பெர்தானா (→) உத்தாமா சாலை (→)  PY32  செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலையம் நுழைவாயில் A
T563   PY31  செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A  SP17  புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையம் (→) 217 புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலை (→) மலேசிய தொழில்நுட்ப பூங்கா (→)  சா ஆலாம் விரைவுச்சாலை (→)  SP18  செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் (→) புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம்

காட்சியகம்

[தொகு]

செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (ஏப்ரல் 2023)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Klang Valley Integrated Transit Map" [Peta Transit Berintegrasi Lembah Klang] (PDF). MyRapid (in ஆங்கிலம்). Suruhanjaya Pengangkutan Awam Darat. 2021. Retrieved 20 February 2022.
  2. "WCT to build two elevated MRT stations for RM199.5m" [WCT akan membina dua stesen MRT bertingkat dengan harga RM199.5m]. The Edge Market (in ஆங்கிலம்). 20 September 2017. Retrieved 16 December 2022.
  3. "MRT Corp award RM200m job to WCT" [MRT Corp menganugerahkan kerja RM200m ke WCT]. New Starits Times (in ஆங்கிலம்). 19 November 2022. Retrieved 16 December 2022.
  4. "MRT Corp: All elevated station contracts for SSP Line awarded" (in en). The Star (Malaysia). 6 November 2016. https://www.thestar.com.my/business/business-news/2017/11/06/mrt-corp---all-elevated-station-contracts-for-ssp-line-awarded. 
  5. 5.0 5.1 "Awarded Contracts for MRT Putrajaya Line" [Penganugerhan Kontrak untuk MRT Laluan Putrajaya]. mymrt.com.my (in ஆங்கிலம்). Malaysia: MRT Corp. Retrieved 29 November 2022.
  6. "Latest Update: MRT 2 Route Map of all Stations (Sungai Buloh – Serdang – Putrajaya Line)" [Kemas Kini Terkahir: Peta Semua Stesen Laluan MRT2 (Sungai Buloh - Serdang - Putrajaya)]. chatpropertymalaysia.com (in ஆங்கிலம்). Chat Property Malaysia. 14 May 2015. Retrieved 20 February 2022.
  7. 7.0 7.1 7.2 "Maklumat mengenai Stesen MRT Taman Naga Emas". www.mymrt.com.my. Mass Rapid Transit Corporation (MRT Corp) Sdn. Bhd. Retrieved 29 November 2022.
  8. "Stesen MRT Serdang Raya Selatan" [Serdang Raya Selatan MRT Station]. www.mymrt.com.my. Mass Rapid Transit Corporation (MRT Corp) Sdn. Bhd. Retrieved 29 November 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]