உள்ளடக்கத்துக்குச் செல்

செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°01′16″N 101°42′33″E / 3.021213°N 101.709075°E / 3.021213; 101.709075
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 PY33 
செர்டாங் ஜெயா
| எம்ஆர்டி
செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்மலாய்: Stesen MRT Serdang Jaya
சீனம்: 沙登再也站
அமைவிடம்செரி கெம்பாங்கான் சிலாங்கூர்  மலேசியா
ஆள்கூறுகள்3°01′16″N 101°42′33″E / 3.021213°N 101.709075°E / 3.021213; 101.709075
உரிமம் எம்ஆர்டி நிறுவனம்
பிரசரானா
இயக்குபவர் ரேபிட் கேஎல்
தடங்கள்12  புத்ராஜெயா 
நடைமேடை1 தீவு நடைமேடை
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்T564  ரேபிட் பேருந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட நிலை
தரிப்பிடம்Parking உண்டு (கட்டணம்)
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடு PY33 
வரலாறு
திறக்கப்பட்டதுபுத்ராஜெயா வழித்தடம் 16.03.2023
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
செர்டாங் செலாத்தான்
குவாசா
 
புத்ராஜெயா வழித்தடம்
 
யூபிஎம் எம்ஆர்டி
புத்ராஜெயா
அமைவிடம்
Map

செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Serdang Jaya MRT Station; மலாய்: Stesen MRT Serdang Jaya) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், செரி கெம்பாங்கான், செர்டாங், தாமான் செர்டாங் ஜெயா புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். செர்டாங் பகுதிகளுக்குச் சேவை செய்யும் இந்த நிலையம், புத்ராஜெயா வழித்தடத்தின் 2-ஆவது கட்டத் திறப்பின் ஒரு பகுதியாக, மார்ச் 16, 2023 அன்று முறைப்படி திறக்கப்பட்டது.

தற்போது  PY32  செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலையத்திற்கும்  PY34  யூபிஎம் எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையம்  PY33  எனும் நிலையக் குறியீட்டைக் கொண்டுள்ளது.[1] கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான எம்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் அடுக்கு மாடி அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும்  KB05  செர்டாங் தொடருந்து நிலையம், இந்த செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

வரலாறு

[தொகு]

கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); 12 புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் 2023 மார்ச் 16-ஆம் தேதி இந்த நிலையம் திறக்கப்பட்டது.[1] இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா (SSP) வழித்தட அமைப்பில் செரி கெம்பாங்கான் நிலையமும் ஒரு பகுதியாக அமையும் என 2016 செப்டம்பர் 15-ஆம் தேதி எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையத்தின் பழைய பெயர் செரி கெம்பாங்கான் நிலையம் ஆகும்.[2]

இந்த நிலையத்தின் கட்டமைப்பிற்கான தொடக்கக் குறியீடு  S28  என வரையறுக்கப்பட்டது.[3] சில ஆண்டுகளுக்குப் பிறகு, கட்டுமானத்தின் போது பயன்படுத்தப்பட்ட நிலையப் பெயரான செரி கெம்பாங்கான் (Seri Kembangan) என்பது தற்போதைய நிலையப் பெயரான செர்டாங் ஜெயா எனும் பெயருக்கு மாற்றப்பட்டது.

முன்பு செயல்பாட்டில் இருந்த சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பு தற்போது 12 புத்ராஜெயா வழித்தடம் என அழைக்கப்படுகிறது.[1] இந்த  PY32  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட நிலையமாக உருவாக்கப்பட்டது.

கட்டுமானங்கள்

[தொகு]

செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலையத்தின் கட்டுமானம் S206 உடன்படிக்கையின் கீழ் செயல் படுத்தப்பட்டது. S206 உடன்படிக்கை என்பது தொடருந்து நிலையங்களின் இணைப்புவழிகள், நடைமேடைகள், நிலையக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புக் கட்டுமானப் பணிகளை உள்ளடக்கியது. நிலையங்களின் கட்டமைப்பு பணிகளுக்கான தொகை மொத்தம் RM 32.14 பில்லியன் அகமத் சாக்கி நிறுவனத்திடம் (Ahmad Zaki Sdn. Bhd) வழங்கப்பட்டது.

S206 உடன்படிக்கை, நிலையங்களின் கட்டமைப்புகள் மற்றும் அவை தொடர்பான வேலைகளை உள்ளடக்கியது. அவற்றுள் தாமான் செர்டாங் ராயாவில் (Taman Serdang Raya) உள்ள  PY32  செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலையம்; மற்றும் மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின்  PY34  யூபிஎம் எம்ஆர்டி நிலையம் ஆகியவற்றின் கட்டுமான வேலைகளும் அடங்கும்.[4][5]

காடாங் பொறியியல் நிறுவனம்

[தொகு]

இதற்கிடையில், புத்ராஜெயா வழித்தடத்தின் உயர்த்தப்பட்ட தொடருந்து பாலங்களின் கட்டுமானம் V206 உடன்படிக்கையின் கீழ் கட்டப்பட்டன. இந்தக் கட்டுமானம்  PY32  செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலையம் வழியாக மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் (UPM)  PY34  யூபிஎம் எம்ஆர்டி நிலையம் வரை நீடிக்கிறது. இந்த உடன்படிக்கை மார்ச் 2017-இல் காடாங் பொறியியல் நிறுவனத்துடன் (Gadang Engineering (M) Sdn. Bhd) செய்துகொள்ளப்பட்டது. அதன் மொத்தச் செலவு RM 952.09 மில்லியன் ஆகும்.[3][6] இந்த நிலையத்தின் கட்டுமானம் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) திட்டத்தின் கீழ் உள்ளது.[4]

செயல்பாடு

[தொகு]

 PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 2023 மார்ச் 16-ஆம் திகதி திறக்கப்பட்டது.  KC03   PY14  பத்து கன்டோன்மன் கொமுட்டர் நிலையம் தொடங்கி  PY41  புத்ராஜெயா சென்ட்ரல் வரையிலான பிற புத்ராஜெயா வழித்தட நிலையங்களுடன் இணைந்து இந்த நிலையமும் செயல்படத் தொடங்கியது.

அமைவு

[தொகு]

செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம் சிலாங்கூரில் உள்ள மாவட்டங்களில் ஒன்றான பெட்டாலிங் மாவட்டத்தின் (முக்கிம்) செர்டாங் நகரத்தில் ஜாலான் ராயா சத்து எனும் சாலையில் (Jalan Raya Satu) அமைந்துள்ளது. செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் உள்ள இடங்கள்:

  • தாமான் செர்டாங் ஜெயா
  • தாமான் கெம்பாங் சாரி
  • செரி கெம்பாங்கான் தொழில்துறைப் பகுதி (Kawasan Perindustrian Seri Kembangan)
  • தாமான் சின்மா (Taman Jinma),
  • கம்போங் பாரு செரி கெம்பாங்கான் 11 (சீனர் புதிய கிராமப் பகுதி) (Kampung Baru Seri Kembangan 11),
  • கம்போங் பாரு செரி கெம்பாங்கான் 12 (Kampung Baru Seri Kembangan 12)[7]

கட்டமைப்பு

[தொகு]

ரேபிட் கேஎல் வெளியிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து வரைபடத்தின் அடிப்படையில்,  PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம் தெரு மட்டத்தில், வாகன நிறுத்துமிட வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.[8]

 PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளைக் கொண்டுள்ளது.[3] அதாவது மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுப் பாதைகள்; நிலையத்தைச் சுற்றியுள்ள தரை மேற்பரப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தொடு தொகுதிகள்; அவர்களுக்கு ஏற்ற கழிவறைகள்; சக்கர நாற்காலி பயனர்களுக்கான தாழ்நிலை மின்தூக்கி பொத்தான்கள்; மின்தூக்கி பொத்தான்களில் பிரெய்லி எழுத்து பொத்தான்கள் மற்றும் சக்கர நாற்காலி பயனர்களுக்கான தாழ்நிலை சேவை மையங்கள் போன்றவை அடங்கும்.[8]

பயனர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக; பொது கழிவறை வசதிகள், ஆண்கள் பெண்களுக்கான வழிபாட்டு அறைகள் (Surau), வாடிக்கையாளர் சேவை மையங்கள், படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. நிலையத்தின் நுழைவாயில் மட்டத்தில் உள்ள தற்சேவை பயணச் சீட்டு இயந்திரங்கள் மூலம் பயனர்கள் பயணச் சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.[8]

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

[தொகு]

இந்த நிலையத்தில் A B என இரண்டு நுழைவாயில்கள் உள்ளன.[8]

 புத்ராஜெயா  — செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம்
நுழைவாயில் அமைவிடம் இலக்கு தோற்றம்
A ராயா சாலை 1
ஊனமுற்றவர் அணுகல் பேருந்து போக்குவரத்து Hentian untuk kenderaan peribadi, e-panggilan dan teksi
நகரப் பேருந்துகளுக்கான நிறுத்தம்; வாடகை வாகன சவாரி அழைப்பு (→) செரி கெம்பாங்கான் காவல் நிலையம் (→) செரி கெம்பாங்கான் தீயணைப்பு மீட்பு நிலையம் (→) பிகேஎன்எஸ் அடுக்குமாடி வீடுகள் (→) செரி கெம்பாங்கான் தொழில்துறை பகுதி
B ராயா சாலை 1
ஊனமுற்றவர் அணுகல் Hentian untuk kenderaan peribadi, e-panggilan dan teksi
வாடகை வாகன சவாரி அழைப்பு (→) தாமான் கெம்பாங் சாரி (Taman Kembang Sari) (→) கம்போங் பாரு செரி கெம்பாங்கான் (→) தாமான் செர்டாங் ஜெயா (→) தாமான் செர்டாங் ஜெயா சமூக மண்டபம் (→) முத்தியாரா அடுக்குமாடி வீடுகள் @ செர்டாங் (→) டாத்தாரான் முத்தியாரா

பேருந்து சேவைகள்

[தொகு]
செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையத்தின் பேருந்து சேவைகள்
பேருந்து தொடக்கம் இலக்கு
T565   PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A தாமான் சுங்கை பீசி இண்டா (→) செரி கெம்பாங்கான் சாலை (→) தின் மைன்சு பேரங்காடி (→) எஸ்பி இண்டா சாலை 4 (→) எஸ்பி இண்டா சாலை 2 (→)  முகிபா சாலை T571  T569  T590  SJ04  SJ05 
T569   PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A  KG30  பத்து 11 செராஸ் எம்ஆர்டி நிலையம் (→) தாமான் தாமிங் சாரி (→) செரி கெம்பாங்கான் சாலை (→) தின் மைன்சு மால் (→) பாலக்கோங் (→) தாமான் புக்கிட் பெலிம்பிங் (→) தாமான் சுங்கை பீசி இண்டா (→) T571  T569  T416  T417  590  SJ04  SJ05 
540  ரேபிட் கேஎல்  KB05  செர்டாங் தொடருந்து நிலையம் புத்ரா பெர்மாய் குதிரை சவாரிப் பூங்கா (→) செரி கெம்பாங்கான் சாலை  PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம் நுழைவாயில் A (→) (புத்ரா பெர்மாய்) (→) 12/1 சாலை (→) புத்ரா பெர்மாய் சாலை (→) இண்டா சாலை (→) பிங்கிரான் புதரா சாலை (→)  PY36  தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையம் 541  SJ05  T542  T543  T571 
SJ04  இஸ்மார்ட் சிலாங்கூர்  KB05  செர்டாங் தொடருந்து நிலையம் செர்டாங் மருத்துவமனை (→) செரி கெம்பாங்கான் சாலை (→)  PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம் நுழைவாயில் A (→) (செர்டாங் மருத்துவமனை) (→) 12/1 சாலை (→) ராயா சாலை 5 (→) ராயா சாலை 6 (→) செரி செர்டாங் சாலை (→) யூபிஎம் பள்ளிவாசல் (→) மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் (→) மலேசிய வேளாண் ஆய்வு மேம்பாட்டு நிறுவனம் 540  T568  SPG04 
SJ05  இஸ்மார்ட் சிலாங்கூர் புத்ரா பெர்மாய் குதிரை சவாரிப் பூங்கா புக்கிட் செர்டாங் வீட்டு மனைகள் (→)  PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம் நுழைவாயில் A (→) (புத்ரா பெர்மாய்) 541  T543  T561 

காட்சியகம்

[தொகு]

செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (ஏப்ரல் 2023)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Klang Valley Integrated Transit Map" [Peta Transit Berintegrasi Lembah Klang] (PDF). MyRapid (in ஆங்கிலம்). Suruhanjaya Pengangkutan Awam Darat. 2021. Retrieved 20 February 2022.
  2. MRT Malaysia (15 September 2016). "MRT Sungai Buloh-Serdang-Putrajaya (SSP) Line Alignment Video" [Video Jajaran Laluan MRT Sungai Buloh–Serdang–Putrajaya (SSP).]. Retrieved 29 November 2022 – via Youtube.
  3. 3.0 3.1 3.2 "Awarded Contracts for MRT Putrajaya Line" [Penganugerhan Kontrak untuk MRT Laluan Putrajaya]. mymrt.com.my (in ஆங்கிலம்). Malaysia: MRT Corp. Retrieved 29 November 2022.
  4. 4.0 4.1 SunBiz (8 March 2019). "Uni Wall APS secures RM32.14m MRT subcontract from Ahmad Zaki". thesundaily.my (in ஆங்கிலம்). The Sun. Retrieved 8 March 2023.
  5. "MRT Corp: All elevated station contracts for SSP Line awarded" (in en). The Star (Malaysia). 6 November 2016. https://www.thestar.com.my/business/business-news/2017/11/06/mrt-corp---all-elevated-station-contracts-for-ssp-line-awarded. 
  6. "MRT Corp awards RM2.73bil contracts to four companies". The Star (in ஆங்கிலம்). Star Media Group. 10 March 2017. Retrieved 8 March 2023.
  7. "Latest Update: MRT 2 Route Map of all Stations (Sungai Buloh – Serdang – Putrajaya Line)" [Kemas Kini Terkahir: Peta Semua Stesen Laluan MRT2 (Sungai Buloh - Serdang - Putrajaya)]. chatpropertymalaysia.com (in ஆங்கிலம்). Chat Property Malaysia. 14 May 2015. Retrieved 20 February 2022.
  8. 8.0 8.1 8.2 8.3 "Maklumat mengenai Stesen MRT Taman Naga Emas". www.mymrt.com.my. Mass Rapid Transit Corporation (MRT Corp) Sdn. Bhd. Retrieved 29 November 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]