செர்டாங்
செர்டாங் அல்லது செர்டாங், சிலாங்கூர் (ஆங்கிலம்; மலாய்: Serdang அல்லது Serdang Selangor) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள ஒரு பழைமையான நகரம் ஆகும். தற்போது செரி கெம்பாங்கான் என அழைக்கப்படுகிறது.
செர்டாங் நகரம் பழைய செர்டாங் மற்றும் புதிய செர்டாங் (Serdang Baharu) என பிரிவுகளாக இருந்தது. கோலாலம்பூருக்கு தெற்கே 15 கிமீ தொலைவில் சுங்கை பீசி விரைவுச்சாலைக்கு அருகில் அமைந்து இருந்த இந்த நகரத்திற்கு கிழக்கே பாலக்கோங்; வடக்கே செரி கெம்பாங்கான் ஆகிய நகரங்கள் உள்ளன.
1960-ஆம் ஆண்டுகளில் ஒரு புதுக்கிராமமாக இருந்த பழைய செர்டாங் கிராமம், தற்போது செரி கெம்பாங்கான் என்று அழைக்கப்படுகிறது. ஒரு பெரிய நகரமாக வளர்ச்சி கண்டுள்ள இந்த நகர்ப்புறக் கிராமம்;
மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் மத்திய பகுதியின் வடக்கு முனையில் அமைந்துள்ளது.[1]
சுங்கை பீசி விரைவுச்சாலைக்கு அருகில் உள்ள இந்த நகரம்; KB05 செர்டாங் தொடருந்து நிலையம் மூலமாகச் சேவை செய்யப்படுகிறது.
வரலாறு
[தொகு]1950-ஆம் ஆண்டில் செர்டாங் ஒரு மலாயா புதுக்கிராமமாக நிறுவப்பட்டது. அப்போது நாட்டில் மலாயா பொதுவுடைமைவாதிகளின் அச்சுறுத்தல் இருந்தது.[2]
அதன் காரணமாக கோலாலம்பூர் சுங்கை பீசி பகுதியில் வசித்த மலேசிய சீனக் கிராம மக்கள் ஒரு மையப்படுத்தப்பட்ட இடத்திற்கு மாற்றப் பட்டனர். மலாயா அவசரகாலத்தின் போது அமல்படுத்தப்பட்ட பிரிக்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகச் செர்டாங் புதுக்கிராமம் நிறுவப்பட்டது.[3][4]
செர்டாங் கிராமப் பகுதி
[தொகு]செர்டாங் கிராமத்தின் தொடக்கக்காலத்தில், அங்கு 50 வீடுகள் மட்டுமே இருந்தன. அனைத்து வீடுகளும் புதிதாக கட்டப்பட்டவை. ஏனெனில் பிரித்தானியர்கள் வெற்று நிலங்களை மட்டுமே வழங்கி இருந்தார்கள்.
செர்டாங் கிராமப் பகுதி காடுகள் மற்றும் ரப்பர் தோட்டங்களுக்கு மையத்தில் இருந்தது. அடிக்கடி ஆபத்துகள் ஏற்பட்டன. ஒரு கட்டத்தில் அங்கு வாழ்ந்த 15,000 மக்களில் பெரும்பாலோர் ஈயச் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் ரப்பர் மரம் சீவுபவர்கள்; சொற்ப வருமானத்தைப் பெற்றனர்.
ஒரு கட்டத்தில், செர்டாங் புதுக் கிராமம், காலணி தயாரித்தல் போன்ற குடிசைத் தொழில்களுக்கு பெயர் பெற்று விளங்கியது. 1950-1970-ஆம் ஆண்டுகளில் வரை செர்டாங் கிராமத்தில் வாழ்ந்த மக்களின் ஒரே பொழுதுபோக்கு வடிவமாக சினிமா மட்டுமே இருந்தது.
அரசு ஊழியர்கள்
[தொகு]செர்டாங் கிராமத்தில் இப்போது 2,500 வீடுகள் உள்ளன. அவற்றில் அசல் மர வீடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன, மக்கள் தொகை 150,000 என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இவர்களில் பெரும்பாலோர் தொழில்முனைவோர், வணிகர்கள், தொழில் வல்லுநர்கள், புத்ராஜெயாவில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் சைபர்ஜெயாவில் உள்ள பிற பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகும்.
காலநிலை
[தொகு]செர்டாங் நகர்ப்புறத்தின் கிழக்குப் பகுதியில் தித்திவாங்சா மலைகள் மற்றும் மேற்கில் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவுக் கூட்டம் உள்ளன.
செர்டாங் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலையைக் கொண்டுள்ளது ஆண்டு முழுவதும் வெப்பமாகவும் வெயிலாகவும் இருக்கும். அதே சமயத்தில் அக்டோபர் முதல் மார்ச் வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெய்யும். அதனால் வெப்பநிலை நிலையானதாக இருக்கும்.
| தட்பவெப்ப நிலைத் தகவல், சுபாங் ஜெயா (செர்டாங்கில் இருந்து ஏறக்குறைய 5 கி.மீ. தொலைவு) | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 36 (97) |
37 (99) |
37 (99) |
36 (97) |
36 (97) |
36 (97) |
36 (97) |
36 (97) |
35 (95) |
35 (95) |
35 (95) |
35 (95) |
37 (99) |
| உயர் சராசரி °C (°F) | 32.1 (89.8) |
32.9 (91.2) |
33.2 (91.8) |
33.1 (91.6) |
32.9 (91.2) |
32.7 (90.9) |
32.3 (90.1) |
32.3 (90.1) |
32.1 (89.8) |
32.1 (89.8) |
31.6 (88.9) |
31.5 (88.7) |
32.4 (90.3) |
| தாழ் சராசரி °C (°F) | 22.5 (72.5) |
22.8 (73) |
23.2 (73.8) |
23.7 (74.7) |
23.9 (75) |
23.6 (74.5) |
23.2 (73.8) |
23.1 (73.6) |
23.2 (73.8) |
23.2 (73.8) |
23.2 (73.8) |
22.9 (73.2) |
23.2 (73.8) |
| பதியப்பட்ட தாழ் °C (°F) | 18 (64) |
20 (68) |
20 (68) |
21 (70) |
21 (70) |
20 (68) |
19 (66) |
20 (68) |
20 (68) |
21 (70) |
21 (70) |
19 (66) |
18 (64) |
| மழைப்பொழிவுmm (inches) | 192 (7.56) |
181 (7.13) |
251 (9.88) |
292 (11.5) |
191 (7.52) |
133 (5.24) |
136 (5.35) |
155 (6.1) |
197 (7.76) |
258.5 (10.177) |
297 (11.69) |
246.9 (9.72) |
2,530.4 (99.622) |
| சராசரி மழை நாட்கள் (≥ 1.0 mm) | 11 | 12 | 14 | 16 | 13 | 9 | 10 | 11 | 13 | 16 | 18 | 15 | 158 |
| சூரியஒளி நேரம் | 186.0 | 194.9 | 207.7 | 198.0 | 207.7 | 195.0 | 201.5 | 189.1 | 165.0 | 170.5 | 153.0 | 161.2 | 2,229.6 |
| Source #1: Jabatan Meteorologi Malaysia – Subang 1961–2010 | |||||||||||||
| Source #2: World Meteorological Organisation (United Nations, 1971–2000) — Source #3: Hong Kong Observatory (sun only, 1961–1990)[5] | |||||||||||||
செர்டாங் தமிழ்ப்பள்ளி
[தொகு]1950-ஆம் ஆண்டுகளில் செரி கெம்பாங்கான் எனும் அப்போதைய செர்டாங் பகுதியில் ஏறக்குறைய 5 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. நில மேம்பாடு, தொழில்துறை கட்டுமானங்கள் போன்றவற்றால் பல ரப்பர் தோட்டங்கள் அப்புறப்படுத்தப் பட்டன. அதனால் இங்கு இருந்த தமிழப்பள்ளிகளும் மூடப்பட்டன. இப்போது ஒரே ஒரு தமிழ்ப்பள்ளிதான் உள்ளது.
| இடம் | மலேசிய மொழியில் பெயர் |
தமிழ் மொழியில் பெயர் |
மாணவர்கள் | ஆசிரியர்கள் |
|---|---|---|---|---|
| செர்டாங் | SJK(T) FES Serdang Seri Kembangan[6][7] |
செர்டாங் தமிழ்ப்பள்ளி | 229 | 27 |
போக்குவரத்து
[தொகு]செர்டாங் மூன்று முக்கிய சுங்கச் சாவடிகளின் சந்திப்பில் அமைந்துள்ளது:
மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (தெற்கு வழித்தடம்)
சுங்கை பீசி விரைவுச்சாலை
கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை
மாஜு விரைவுச்சாலை (Maju Expressway) இந்த நகரத்தின் மேற்கு எல்லைக்கு அருகில் செல்கிறது.
சா ஆலாம் விரைவுச்சாலை (Shah Alam Expressway - KESAS) மற்றும்
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 (MRR2) ஆகிய சாலைகளின் சந்திப்புகள் அருகிலேயே உள்ளன.
தெற்கு சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் இருந்து பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, செர்டாங் நகரம்; கோலாலம்பூர் மாநகரத்தின் "தெற்கு நுழைவாயில்" என்று கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Serdang, Selangor, Malaysia". Find Latitude and Longitude (in ஆங்கிலம்). Retrieved 25 October 2025.
- ↑ My Side of History by Chin Peng (Media Masters; Singapore, 2003)
- ↑ Newsinger, John (2015). British Counterinsurgency. Basingstoke: Palgrave Macmillan. p. 48. ISBN 978-0-230-29824-8.
- ↑ "Old villagers return to their hometown to gather and celebrate. Sungai Way Village is 70 years old". www.sinchew.com.my.
- ↑ "கோலாலம்பூர் மாநகருக்கான காலநிலை தகவல், மலேசியா". Hong Kong Observatory. Archived from the original on 2010-08-13. Retrieved 2010-10-28.
- ↑ "SJK TAMIL FES SERDANG". செர்டாங் தமிழ்ப்பள்ளி - SJK TAMIL FES SERDANG (in ஆங்கிலம்). Retrieved 13 May 2022.
- ↑ "S.J.K TAMIL SERDANG, UNIPUTRAPOS 43400 SERDANG, SELANGOR". www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 13 May 2022.
