உள்ளடக்கத்துக்குச் செல்

செர்சோனசசு

Coordinates: 44°36′42″N 33°29′36″E / 44.61167°N 33.49333°E / 44.61167; 33.49333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்சோனசசு
மாற்று பெயர் செர்சோனசசு, செர்சன்
இடம் ககாரின் ராயன், செவஸ்தோபோல்
பிராந்தியம் டௌரிகா
ஒருங்கிணைப்புகள் 44°36′42′′N 33°29′36′′E./44.61167 ° N 33.49333 ° E / 44.; 33.4933344.61167; 33.49333
வகை குடியேற்றம்
ஒரு பகுதி செர்சோனசசு தேசிய பாதுகாப்பு வளாகம்
பகுதி 30 எக்டேர் (74 ஏக்கர்)
வரலாறு
கட்டுபவர் இராக்கிளா பொன்டிகாவில்
இருந்து வந்து குடியேறியவர்கள்
நிறுவப்பட்டது கிமு 6ஆம் நூற்றாண்டு
கைவிடப்பட்டது. கிபி 1400ஆம் ஆண்டில்
காலங்கள் பாரம்பரிய கிரேக்கம் முதல்
இடைக்காலத்தின் பிற்பகுதி வரை
கலாச்சாரங்கள் கிரேக்கம், உரோமை, பைசாந்தியம்
தளக் குறிப்புகள்
அகழ்வாராய்ச்சி தேதி 1827
மேலாண்மை டௌரிக செர்சோனசசு தேசிய பாதுகாப்பு மையம்
இணையதளம் www.chersonesos.org
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்
அதிகாரப்பூர்வ பெயர்  டௌரிக செர்சோனசசு பண்டைய நகரம்
ஒரு பகுதி டௌரிக செர்சோனசசு பண்டைய
நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்
அளவுகோல்கள் கலாச்சாரம் (ii) (v)
குறிப்பு 1411
கல்வெட்டு 2013 (37வது அமர்வு)
பகுதி 42.8 எக்டேர் (0.165 சதுர மைல்)
இடையக மண்டலம்  207.2 எக்டேர் (0.800 சதுர மைல்)
இணையதளம் chersonesos-sev.ru

செர்சோனசசு (இலத்தீன்: Chersonesus) என்பது ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கிரிமிய தீபகற்பத்தின் தென்மேற்குப் பகுதியில் நிறுவப்பட்ட ஒரு பண்டைக் கிரேக்க குடியேற்றமாகும். கிரேக்க நாட்டின் பித்தினியாவின் இராக்கிளா பொன்டிகாவிலிருந்து வந்த மக்கள் கிமு 6 ஆம் நூற்றாண்டில் இந்த குடியேற்றத்தை நிறுவினர்.

இந்த பண்டைய நகரமானது கிரிமிய தீபகற்பத்தில் தற்போதைய செவஸ்தோபோல் நகரின் அருகில் கருங்கடலின் கரையில் அமைந்துள்ளது. இந்த இடம் தற்போது கெர்சோன்சு என்று குறிப்பிடப்படுகிறது. இந்த தளம் டௌரிக செர்சோனசசு தேசிய பாதுகாப்பு பகுதியின் ஒரு அங்கமாகும். கிரேக்க மொழியில் செர்சோனசசு என்ற பெயருக்கு "தீபகற்பம்" என்று பொருள், இது இந்த குடியேற்றம் நிறுவப்பட்ட இடத்தை பொருத்தமாக விவரிக்கிறது.

பாரம்பரிய காலத்தின் போது செர்சோனசசு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் குழு மற்றும் சபையால் ஆளப்பட்ட ஒரு சனநாயகமாக செயல்பட்டது. மூன்றாம் நூற்றாண்டு முதல் அனைத்து குடிமக்களாலும் எடுக்கப்பட்ட ஒரு சத்தியப்பிரமாணத்தின் வடிவம் இன்று வரை நடைமுறையில் உள்ளது. 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) இந்த இடத்தை உலக பாரம்பரிய தளமாக பட்டியலிட்டது.[1] இந்த தொல்லியல் தளத்திலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் அத்துமீறி பல நவீன கட்டிடங்கள் கட்டப்பட்டதாலும், இத்தகைய வளர்ச்சிகளைத் தடுக்க போதுமான நிதி இல்லாததாலும் செர்சோனசசு தளம் அழிவை சந்தித்து வருகின்றது.

வரலாறு

[தொகு]

கிரேக்க காலம்

[தொகு]
கிரிமியாவில் உள்ள செர்சோனசசிலிருந்து கிடைத்த கிரேக்க நாணயம் (கிமு 2 ஆம் நூற்றாண்டு)

கிமு ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளுக்கு இடையே, கிரேக்க நாட்டின் பித்தினியாவின் இராக்கிளா பொன்டிகாவிலிருந்து வந்த மக்கள் கருங்கடல் கரையில் தென்மேற்கு கிரிமியாவில் (நவீன செவஸ்தோபோல் நகரின் அருகில்) செர்சோனசசு என்ற கடல் துறைமுகத்தை நிறுவினார். இது பூர்வீக டௌரியர்கள் வசித்த பிரதேசத்தின் விளிம்பில் ஆழ்கடல் துறைமுகங்களைக் கொண்ட ஒரு நல்ல தளமாக இருந்தது. பாரம்பரிய காலத்தின் போது செர்சோனசசு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் குழு மற்றும் சபையால் ஆளப்பட்ட ஒரு சனநாயகமாக செயல்பட்டது. மூன்றாம் நூற்றாண்டு முதல் அனைத்து குடிமக்களாலும் எடுக்கப்பட்ட ஒரு சத்தியப்பிரமாணத்தின் வடிவம் இன்று வரை நடைமுறையில் உள்ளது.[2][3] கிமு நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, இது ஒரு சிறிய நகரமாக இருந்தது. பின்னர் இந்த நகரமானது வடமேற்கு கிரிமியாவில் உள்ள நிலங்களுக்கு விரிவடைந்து, ஏராளமான கோட்டைகளை உள்ளடக்கிய ஒரு பெருநகரமாக வளர்ந்தது.

பூர்வீக சித்தியர்கள் மற்றும் டௌரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொண்ட பிறகு, தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரையில் ஒட்டி நகரம் விரிவடைய தொடங்கியது. இருப்பினும் பாதுகாப்பிற்காக கிமு 110 இல் ஆறாம் மித்ரடேட்சு மற்றும் அவரது தளபதி டியோபாண்டசு ஆகியோரின் உதவியை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கிமு 1 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து கிபி 370 வரை உரோமை அரசுக்கு உட்பட்டு, உட்பட்டதால், பாதுகாப்பிற்காக இங்கு ஒரு காவற்படை நிறுவப்பட்டது. பின்னர் இந்த நகரத்தை ஊன்கள் கைப்பற்றினர்.[4]

பைசாந்திய காலம்

[தொகு]

இந்த நகரமானது இடைக்காலத்தில் பைசாந்தியப் பேரரசின் வசம் இருந்தது.[4] இந்த ஆட்சியின் கீழ் பாதுகாப்பிற்காக ஒரு சிறிய ஏகாதிபத்திய காவற்படை அமைக்கப்பட்டது, மேலும் ஒரு சுயாட்சி முறை அமல்படுத்தப்பட்டது. பெரும்பாலும் பைசாந்தியப் பேரரசு இந்த நகரை இரண்டு காரணங்களுக்காக பயன்படுத்தியது. இது எல்லையை ஒட்டி வாழ்ந்த அரசுக்கு எதிரான பழங்குடியினரை கண்காணிப்பதற்கும், அரசாங்கத்துக்கு எதிரானவர்களை நாடுகடத்த மாற்றும் சிறைவைக்க படும் ஒரு இடமாக இருந்தது.[4] இங்கு சிறைவைக்கப்பட்ட பிரபலமான கைதிகளில் முதலாம் கிளமெண்ட் திருத்தந்தை, முதலாம் மார்ட்டின் திருத்தந்தை மற்றும் பதவி நீக்கம் செய்யப்பட்ட பேரரசர் இரண்டாம் சசுடினியன் ஆகியோர் அடங்குவர்.[5]

தியோபேநச்சு மற்றும் பிறரின் கூற்றுப்படி, செர்சோனசு ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு கசார் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கி.பி. 705 மற்றும் 840 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நகரத்தின் ஆட்சி பாபாகுக் என்று அழைக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டன.[6]

833 ஆம் ஆண்டில், நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை நேரடியாகக் கட்டுப்படுத்த பேரரசர் தியோபிலசு, பெட்ரோனாசு காமடெரோசு என்ற பிரபுவை அனுப்பினார். இது 980கள் வரை பைசாந்திய பேரரசின் கைகளில் இருந்தது, பின்னர் இது கீவின் உருசிய பேராசராகிய விளாதிமிரால் கைப்பற்றப்பட்டது. பிறகு அன்னா போர்பிரோசேனெட்டாவை திருமணம் செய்து கொள்ளும் போது விளாடிமிர் இந்த நகரத்தை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டார். மேலும் இந்த திருமண உடன்படிக்கைக்கு ஒரு முன் நிபந்தனையாக, விளாடிமிர் 988 இல் இங்கு கத்தோலிக்கத்திற்கு மாறினார். இந்த நிகழ்வுகள் கிரேக்க ஆதாரங்களில் பதிவு செய்யப்படாததால், இந்த பதிவு உண்மையில் 1043 ஆம் ஆண்டு நடந்த பைசாந்திய-உருசிய போரை குறிப்பிடுவதாக வரலாற்றாசிரியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

நான்காவது சிலுவைப் போருக்குப் பிறகு செர்சோனசசு தியோடோரோ என்ற பெயரில் பைசாந்திய பேரரசான திரெபிசோண்டாவின் ஒரு மாகாணமாக இருந்தது. 1461 ஆம் ஆண்டு நடந்த திரெபிசோண்டா முற்றுகைக்குப் பிறகு தியோடோரா சுதந்திரம் அடைந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த நகரம் செனோர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. மேலும் 1299 இல், இந்த நகரம் நோகாய் கானின் மங்கோலியப் படைகளால் சூறையாடப்பட்டது. பைசாந்திய ஆதாரங்கள் இந்த நகரை கடைசியாக 1396 இல் குறிப்பிடுகின்றன, மேலும் தொல்பொருள் சான்றுகளின் அடிப்படையில் இந்த நகரம் அடுத்த சில தசாப்தங்களில் கைவிடப்பட்டதாக கருதப்படுகிறது.

திருச்சபை வரலாறு

[தொகு]

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இங்கு ஒரு உருசிய மரபுவழி தேவாலயமான புனித விளாடிமிர் தேவாலயம் (1892 ஆம் ஆண்டு கட்டுமானம் நிறைவுற்றது) அமைக்கப்பட்டது. இது ஒரு சிறிய மழையின் மீது பைசாந்திய கட்டிக்கலை பாணியில் கட்டப்பட்டது.[7][8]

தொல்லியல் தளம்

[தொகு]
செர்சோனசசில் உள்ள புனித விளாடிமிர் தேவாலயம் 19 ஆம் நூற்றாண்டில் பைசாந்திய மறுமலர்ச்சி கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது.
செர்சோனசசில் உள்ள ஓர் பெரிய மணி
செர்சோனசசு (1935)

செர்சோனசசின் பண்டைய இடிபாடுகள் தற்போது செவாஸ்டோபோலின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளன. இவை 1827 ஆம் ஆண்டில் தொடங்கி உருசிய அரசாங்கத்தால் அகழ்வாராய்ச்சியின் போது தோண்டப்பட்டவையாகும். இந்த இடம் இன்று ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது. இது உக்ரானிய அரசால் ஒரு தொல்பொருள் பூங்காவாக பாதுகாக்கப்படுகிறது. இந்த இடத்திலுள்ள கட்டிடங்கள் பெரும்பாலும் கிரேக்க, ரோமானிய மற்றும் பைசாந்திய பண்பாடுகளை பிரதிபலிக்கின்றன. இந்த நகரத்தின் சுற்றுச்சுவர் சுமார் 3.5 கிலோமீட்டர் (2.2 மைல்) நீளமும், 3.5 முதல் 4 மீட்டர் அகலமும், 8 முதல் 10 மீட்டர் உயரமும் கொண்டைவையாக, பல உயரத்தில் கோபுரங்களுடன் இருந்தன. இதன் பரப்பளவு  ஏறத்தாழ 30 எக்டேர்கள் (74 ஏக்கர்கள்) பரப்பளவை உள்ளடக்கியது. நகரத்தில் இருந்த முக்கிய கட்டிடங்களில் ஒரு ரோமானிய நாடக அரங்கம் மற்றும் ஒரு கிரேக்க கோயில் ஆகியவை அடங்கும்.[9]

இந்த நகரத்தின் கட்டுப்பாட்டில் இருந்த  சுற்றியுள்ள நிலப்பரப்பு இப்போது தரிசு நிலமாக உள்ளது, இதில் ஆங்காங்கே பழைய கட்டிங்கள் மற்றும் தற்காப்பு கோபுரங்களின் இடிபாடுகள் உள்ளன. தொல்லியல் நிபுணர்களின் கூற்றுப்படி, உள்ளூர் மக்கள் பெரும்பாலும் பண்ணை வேலைகளைச் செய்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன. அகழ்வாராய்ச்சியில் மீட்கப்பட்ட கல்லறைகள் கிரேக்க நடைமுறைகளிலிருந்து வேறுபட்ட அடக்கம் செய்யும் நடைமுறைகளைக் குறிக்கின்றன. ஒவ்வொரு கல்லும் ஒரு தனிநபரின் கல்லறையைக் குறிப்பதாக இருக்கிறது, மேலும் புதைகுழிகளில் துணிகள், ஆயுதங்கள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த கல்லறைகளில் பாதிக்கும் மேற்பட்டவை குழந்தைகளின் எலும்புகளைக் கொண்டுள்ளன. இது இந்த நகரம் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டதற்கான சான்றாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

1935 ஆம் ஆண்டு தோண்டியெடுக்கப்பட்ட ஓர் பழைய தேவாலயம் இந்த இடத்தின் பிரபலமான கட்டிகளில் ஒன்றாகும். இதன் சரியான பெயர் தெரியாததால் இது பொதுவாக "1935 தேவாலயம்" என கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டைக் கொண்டு அழைக்கப்படுகிறது. ஆரம்ப நாட்களிலில் இருந்த ஒரு சிறிய கோவிலுக்கு பதிலாக பின்னாட்களில் இது கட்டப்பட்டு இருக்கலாம்  என வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது. இந்த தேவாலயம் பொதுவாக செர்சோனசோசை குறிக்கும் ஒரு உருவமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த படம் ஒரு உக்ரேனிய பணத்தாளில் காணப்படுகிறது.[10][11]

2017 ஆண்டில், தொல்லியல் வல்லுநர்கள் கிரேக்க கடவுள்களின் உருவங்கள் பதிக்கப்பட்ட ஒரு பண்டைய பலிபீடத்தை கண்டுபிடித்தனர்.[12][13] 2022 ஆம் ஆண்டில், ஆராய்ச்சியாளர்கள் செர்சோனசசின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு கல்லறையில் இருந்து கிடைத்த மனித எலும்புக்கூடுகளை பகுப்பாய்வு செய்தனர், இது ஆரம்ப காலத்தைச் (கிமு 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுக்கு இடையில்) சேர்ந்ததாக மதிப்பிடப்பட்டது. இறந்தவர்களில் பெரும்பாலோர் வளைந்த நிலையில் கால்களை மடித்த நிலையில் புதைக்கப்பட்திருந்தனர். சில கல்லறைகள் மட்டுமே கைகள் மற்றும் கால்களை நேராக வைத்து முதுகு நீட்டப்பட்ட நிலையில் இருந்தன. இந்த ஆராய்ச்சியில் பெரும்பாலான நபர்கள் மரபணு ரீதியாக ஒருவருக்கொருவர் ஒத்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். வட கருங்கடல் பிராந்தியத்தில் அடக்கம் செய்யும் நிலை இறந்தவரின் வம்சாவளியால் தீர்மானிக்கப்பட்டது, உள்ளூர் டௌரியரகள் வளைந்த நிலையிலும் மற்றும் கிரேக்க காலனித்துவவாதிகள் நேராகவும் அடக்கம் செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.[14]

2007 ஆம் ஆண்டில், உக்ரைனின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக செர்சோனசசு அறிவிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று, உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் யூரி யெக்கானுரோவ், உருசியாவின் கருங்கடல் கடற்படை கப்பல்களை மற்றொரு இடத்திற்கு மாற்றும்படி கூறினார். கருங்கடல் கடற்படைக் கப்பல்களின் இருப்பிடம் அருகே இருப்பது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இந்த இருப்பு சேர்க்கப்படுவதற்கு தடையாக இருந்தது.[15] பின்னர் 2013 ஆம் ஆண்டில், செர்சோசசு பண்டைய நகரம் ஓர் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டது. இந்த உலக பாரம்பரிய தளம் செர்சோனசசு நகரத்தை உள்ளடக்கிய ஏழு இடங்களை கொண்டுள்ளது.[16] 2014 கிரிமியன் நெருக்கடி போது, கிரிமியன் தீபகற்பம் உருசியாவால் கைப்பற்றப்பட்டது. இதற்கு பிறகும், யுனெஸ்கோ தொடர்ந்து கிரிமியாவையும் அதன் பாரம்பரிய தளங்களையும் உக்ரைனுக்கு சொந்தமானதாக கருதி அவற்றை அங்கீகரிப்பதாகக் கூறியுள்ளது.[17]

பிரச்சனைகளும் சர்ச்சைகளும்

[தொகு]

இந்த தொல்லியல் தளத்திலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் அத்துமீறி பல நவீன கட்டிடங்கள் கட்டப்பட்டதாலும், இத்தகைய வளர்ச்சிகளைத் தடுக்க போதுமான நிதி இல்லாததாலும் செர்சோனசசு தளம் அழிவை சந்தித்து வருகின்றது.[18] 2010 இல், உலக பாரம்பரிய நிதியம் வெளியிட்ட "நமது மறைந்து வரும் பாரம்பரியத்தை காப்பாற்றுதல்" என்ற அறிக்கையில், சரிசெய்ய முடியாத இழப்பு மற்றும் அழிவுக்கான விளிம்பில் உள்ள 12 உலகளாவிய தளங்களில் ஒன்றாக செர்சோனசசுவை அடையாளம் கண்டது.[19]

சூலை 29, 2015 அன்று செவாசுதபோல் மாகாண ஆளுநர் செர்சி மென்யேலோ, செர்சோனசோசு பாதுகாப்பு அமைப்பின்  இயக்குநரான ஆண்ட்ரி குலசினை சர்ச்சைக்குரிய வகையில் நீக்கினார். பின்னர் இவர் செர்சோனசசில் உள்ள புனித விளாடிமிர் ரஷ்ய தேவாலயத்தின் தலைமை மதகுருவான செர்சி கல்யூட்டாவை இதன் புதிய இயக்குநராக நியமித்தார். இந்த நடவடிக்கையை எதிர்த்து பாதுகாப்புத்துறை ஊழியர்கள் அனைவரும் புதிய இயக்குநரின் கீழ் பணியாற்ற மறுத்தனர். 2014 ஆம் ஆண்டு கிரிமியாவை உருசிய இணைத்த உடன், உருசிய அதிபர் விளாடிமிர் புடினால் செர்சி மென்யேலோ ஆளுநராக நியமிக்கப்பட்டவர் என்பதால் அரசியல் அர்த்தங்கள் காரணமாக இந்த மோதல் ஊடகங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தது.[20] பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணிகளுக்கு ஆளுநர் மென்யய்லோ ஒப்புதல் அளித்ததால் மென்யாய்லோவிற்கும் குலாகினுக்கும் மோதல் ஆரம்பித்ததாகவும், பின்னர்  பாதுகாக்கப்பட்ட பகுதியில் சாலை கட்டுமானத் திட்டம் குறித்து குலாகின் புகார் அளித்தபோது இந்த மோதல் வலுத்தது என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர். பின்னர் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் அழுத்தத்தால் செர்சி கல்யூட்டா பதவி விலகினார்.[21]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Claus, Patricia (2022-12-01). "Ancient Greek City of Chersonesus in Crimea Founded 2,500 Years Ago". greekreporter.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-09.
  2. Vladimir F. Stolba, The Oath of Chersonesos and the Chersonesean Economy in the Early Hellenistic Period, in: Z.G. Archibald, J.K. Davies & V. Gabrielsen (eds.), Making, Moving and Managing.
  3. "Syll. 360: The oath of the citizens of Chersonesos". attalus.org. Archived from the original on January 19, 2018. பார்க்கப்பட்ட நாள் May 20, 2015.
  4. 4.0 4.1 4.2  ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: Minns, Ellis Hovell (1911). "Chersonese". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 6. Cambridge University Press. 
  5.  ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: Minns, Ellis Hovell (1911). "Chersonese". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 6. Cambridge University Press. 
  6. Brook, Kevin Alan (2006-09-27). The Jews of Khazaria. Rowman & Littlefield Publishers. p. 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781442203020.
  7. Konrad Eubel, Hierarchia Catholica Medii Aevi, vol.
  8. Annuario Pontificio 2013 (Libreria Editrice Vaticana 2013 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-209-9070-1), p. 868
  9.  ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: Minns, Ellis Hovell (1911). "Chersonese". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 6. Cambridge University Press. 
  10. "Ancient Chersoneses in Crimea: Dilettante travel". பார்க்கப்பட்ட நாள் 1 April 2012.
  11. Valentine Gatash (2 June 2007). "Will the Basilica disappear into the sea". Archived from the original on 10 August 2022. பார்க்கப்பட்ட நாள் 1 April 2012.
  12. Russia: Ancient altar with figures of Greek gods found in Sevastopol
  13. Ancient Greek Altar Discovered In Crimea
  14. Rathmann, Hannes; Stoyanov, Roman; Posamentir, Richard (January 2022). "Comparing individuals buried in flexed and extended positions at the Greek colony of Chersonesos (Crimea) using cranial metric, dental metric, and dental nonmetric traits". International Journal of Osteoarchaeology 32 (1): 49–63. doi:10.1002/oa.3043. பன்னாட்டுத் தர தொடர் எண்:1047-482X. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/oa.3043. 
  15. "Yekhanurov Calls On Russia's Black Sea Naval Fleet To Move Its Automobile Depot From Khersones Tavriiskyi National Reserve". Ukrainian News Agency. February 13, 2009 இம் மூலத்தில் இருந்து July 28, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090728220748/http://www.ukranews.com/eng/article/180556.html. 
  16. "The Ancient City of Tauric Chersonese and its Chora". UNESCO World Heritage Centre. பார்க்கப்பட்ட நாள் 3 Nov 2018.
  17. "ЮНЕСКО и впредь будет считать Крым территорией Украины | УНИАН". Archived from the original on 2018-11-05. பார்க்கப்பட்ட நாள் 2014-04-10.
  18. "Managing the Archaeological Heritage at the National Preserve of Tauric Chersonesos: Problems and Perspectives". Ukrainian Museum. October 2006 இம் மூலத்தில் இருந்து 2017-10-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171012035312/http://www.ukrainianmuseum.org/news_061001chersonesos.html. 
  19. "GHF". Global Heritage Fund. Archived from the original on 2012-08-20. பார்க்கப்பட்ட நாள் 2012-08-31.
  20. "Decree of the President of the Russian Federation dated April 14, 2014 No. 242 "On the acting duties of the Governor of the city of Sevastopol". Archived from the original on 18 April 2014. பார்க்கப்பட்ட நாள் 25 August 2022.
  21. "Khersones returns to the bosom of the Ministry of Culture"". Archived from the original on 2016-10-22. பார்க்கப்பட்ட நாள் 2016-02-15.

நூலியல்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்சோனசசு&oldid=3918182" இலிருந்து மீள்விக்கப்பட்டது