உள்ளடக்கத்துக்குச் செல்

செருவயல் கே. இராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செருவயல் கே. ராமன்
Cheruvayal K. Raman
பத்தாவது விப்கயார் திரைப்பட விழா விழாவில் செருவயல் ராமன்
பிறப்புவயநாடு மாவட்டம், கேரளம், இந்தியா
விருதுகள்Padma Shri ribandபத்மசிறீ

செருவயல் கே. இராமன் (Cheruvayal Raman) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இந்தியப் பழங்குடி விவசாயியாவார்.[1][2] ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த [3]பாரம்பர்ய விவசாயியான இவர் அரிய விதைகளின் பாதுகாவலர் என்று அழைக்கப்படுகிறார். விவசாய அறிவியல் அல்லது தாவரவியல் போன்ற மரபு சார்ந்த அறிவியலைப் பற்றிய அறிவு இல்லாமல், கம்மனா கிராமத்தில் உள்ள தனது சிறிய பண்ணையில் 55 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட நெல் வகைகளைப் பாதுகாப்பதில் பெயர் பெற்றார்.[4] இந்தியாவின் பாரம்பர்ய விதைகளைப் பேணி காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற சிறப்பு இவருக்கு கிடைத்தது. இராமன் தனது மாமா கொடுத்த 40 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். 2023 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இந்திய அரசாங்கம் இவருக்கு நாட்டின் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது.[5] நெல்லச்சான் அல்லது நெல்லின் தந்தை என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ലേഖകൻ, മനോരമ (2020-09-20). "അപൂർവ വിത്തുകളുടെ കാവൽക്കാരൻ, 150 വർഷം പഴക്കമുള്ള വീട്; വിസ്മയമാണ് രാമേട്ടൻ". ManoramaOnline (in மலையாளம்). Retrieved 2023-01-26.
  2. S, Lekshmi Priya (2019-04-18). "Kerala's 'Guardian of Native Paddy' Lives in a 150-YO Home Made of Mud & Bamboo!". The Better India. Retrieved 2023-01-26.
  3. எம்.குமரேசன் (2018-10-09), "துபாயில் உயிருக்குப் போராடும் பாரம்பர்ய விதைப் பாதுகாவலர் செருவயல் ராமன்!", https://www.vikatan.com/, retrieved 2024-09-19 {{citation}}: External link in |website= (help)
  4. Shaji, K A (2022-08-11). "Meet Cheruvayal Raman of Kerala, the country's lone 'living paddy gene bank'". The South First. Retrieved 2023-01-26.
  5. Manoj, E.M. (2023-01-25). "Septuagenarian tribal farmer from Wayanad wins Padma Shri". The Hindu. Retrieved 2023-01-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செருவயல்_கே._இராமன்&oldid=4139577" இலிருந்து மீள்விக்கப்பட்டது