உள்ளடக்கத்துக்குச் செல்

செருவதூர் மகாதேவர் கோயில்

ஆள்கூறுகள்: 10°39′31″N 76°04′19″E / 10.6584883°N 76.0719567°E / 10.6584883; 76.0719567
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செருவதூர் மகாதேவர் கோயில்
கோவில் நுழைவு வாயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:திருச்சூர்
அமைவு:குன்னம்குளம்
ஆள்கூறுகள்:10°39′31″N 76°04′19″E / 10.6584883°N 76.0719567°E / 10.6584883; 76.0719567
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரள பாணி

செருவதூர் மகாதேவர் கோவில்(Cheruvathur Mahadeva Temple) கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் குன்னங்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.இக்கோவிலின் முதன்மை தெய்வமான சிவனின் கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.இக்கோவிலின் மூலவர் சிலையைப் பரசுராம முனிவர் நிறுவியதாக நாட்டுப்புறக்கதைகள் கூறுகின்றன.[1] இக்கோவில் கேரளாவில் உள்ள 108 முக்கிய சிவத்தலங்களில் ஒன்றாகும்.[2] கேரளாவிலுள்ள பெரும்பாலான இந்துக் கோவில்களின் தோற்றம் குறித்து பல புராணக்கதைகள் கூறப்படுகின்றன. அவற்றுள் செருவதூர் மகாதேவர் குறித்த மிகவும் பிரபலமான புராணக்கதைகளில் ஒன்று கேரளாவில் பரசுராமரால் நிறுவப்பட்டதாக கூறப்படும் 108 சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று என்பதாகும்.[3] இக்கோவிலின் மகாதேவர் செருவத்தூரப்பன் என்று அழைக்கப்படுகிறார்.கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலின் கருவறை வட்ட வடிவத்தில் செப்புக்கூரையுடன் உள்ளது.

அமைந்துள்ள இடம்[தொகு]

இக்கோவில் குன்னம்குளம் நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் செருவதூரில் அமைந்துள்ளது.[4]

கோவில் படங்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Name of Hara encompass; World be free from Suffering - Cheruvathur - Mahadeva Temple". www.shaivam.org.
  2. "108 Shiva temples of Kerala - Worshiped by Parasurama Information". www.vaikhari.org.
  3. "Welcome to Kerala Temples-108 Siva Temples". www.thekeralatemples.com.
  4. "Cheruvathur - Mahadeva Temple - Name of Hara encompass; World be free from Suffering". www.shaivam.org.