செருலியன் மீன்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செருலியன் மீன்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
அல்செடினிடே
பேரினம்:
இனம்:
அ. கோயருலெசென்சு
இருசொற் பெயரீடு
அல்சிடோ கோயருலெசென்சு
(வெயிலோட், 1818)

செருலியன் மீன்கொத்தி (Cerulean kingfisher)(அல்சிடோ கோயருலெசென்சு) என்பது இந்தோனேசியாவின் சில பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட அல்செடினினே என்ற துணைக் குடும்பத்தில் உள்ள ஒரு மீன் கொத்தி ஆகும். இதன் உடல் முழுவதும் உலோக நீல தோற்றத்துடன், சிறு நீல மீன்கொத்தி போலவே காணப்படும். ஆனால் இதில் ஆரஞ்சு நிறத்திற்குப் பதிலாக வெள்ளை நிறத்தில் உள்ளது.

இந்த சிற்றினம் சில நேரங்களில் சிறிய நீல மீன்கொத்தி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்தோனேசியா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இந்த பெயர் அல்சிடோ அத்திசை குறிக்கிறது.[2]

வகைப்பாட்டியல்[தொகு]

செருலியன் மீன்கொத்தி முதல் முறையான 1818-ல் பிரெஞ்சு பறவையியல் வல்லுநரான லூயிஸ் ஜீன் பியர் வைலோட்டால் விவரிக்கப்பட்டது. இவர் அல்சிடோ கோருலெசென்சு என்ற இருசொல் பெயரை உருவாக்கினார். கோருலெசென்சு என்ற சிற்றினப் பெயரானது "நீலம்" எனப் பொருள் படக்கூடிய இலத்தீன் கருலெசென்சு என்பதிலிருந்து தோன்றியது. ஒற்றைச் சிற்றினப் பேரினத்தின் கீழ் இது உள்ளது.[3]

விளக்கம்[தொகு]

செருலியன் மீன்கொத்தியின் நீளம் 13 செ.மீ. ஆகும். மேல் பகுதிகள் நீல நிற பட்டைகளுடன் கழுத்தின் ஒவ்வொரு பக்கங்களில் வெள்ளைத் திட்டுடன் காணப்படும். நீலநிற-மார்பகப் பட்டையுடன் கீழ்ப்பகுதி வெண்மையானது. அலகு கருப்பாகவும், கால்கள் அடர் பழுப்பு நிறமாகவும் காணப்படும். பெண் மந்தமான மற்றும் சற்று பச்சை நிற இறகுகளுடன் குறுகிய மார்பக பட்டைகளுடன் காணப்படும்.[4]

பரவல் மற்றும் வாழ்விடம்[தொகு]

இந்தோனேசியாவில் உள்ள சுமாத்திரா, சாவகம், காங்கேயன் தீவுகள், பாலி, உலோம்போ மற்றும் சும்பாவா ஆகிய பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட மீன்கொத்தி, ஓடைகள், கால்வாய்கள், வெள்ளம் சூழ்ந்த நெல் வயல்கள் மற்றும் அலை முகத்துவாரங்களுக்கு அருகில் தாழ்வான பகுதிகளில் வசிக்கின்றது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Alcedo coerulescens". IUCN Red List of Threatened Species 2016: e.T22683117A92976544. https://www.iucnredlist.org/species/22683117/92976544. பார்த்த நாள்: 25 September 2021. 
  2. Salim Ali (ornithologist); Sidney Dillon Ripley (2001). "Bird Number 722-724". Handbook of the Birds of India and Pakistan. 4 (Second ). New Delhi: Oxford University Press. பக். 72–78. 
  3. Gill, F.; Donsker, D., eds. (2017). "Rollers, ground rollers & kingfishers". World Bird List Version 7.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 28 May 2017.
  4. 4.0 4.1 Fry, C. H.; Fry, K.; Harris, A. (1992). Kingfishers, Bee-eaters, and Rollers. London: Christopher Helm. பக். 210–211. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7136-8028-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செருலியன்_மீன்கொத்தி&oldid=3520877" இலிருந்து மீள்விக்கப்பட்டது