செருமேனைடு
செருமேனைடு (germanide) என்பது செருமானியமும் மின்னேர் தனிமம் ஒன்றும் இணைந்த ஓர் இரட்டைச் சேர்மம் ஆகும். செருமேனைடு வரிசைச் சேர்மங்கள் யாவும் அதனுடன் தொடர்புடைய சிலிசைடுகளுடன் இணைவதற்கு வழக்கமாக பின்பற்றும் இணைதிறன் விதிகளைப் பின்பற்றுவதில்லை. கார உலோகங்கள் மற்றும் காரமண் உலோகங்களின் செருமேனைடுகள் அமிலம் மற்றும் தண்ணீரால் உடனடியாகச் சிதைக்கப்பட்டு செருமேனியம் ஐட்ரைடுகளைத் தருகின்றன. பெரும்பாலான தாண்டல் உலோகங்களின் செருமேனைடுகள் அமிலங்கள் மற்றும் காரங்களின் செயல்பாட்டைத் தடுக்கின்றன. பகுதிப் பொருட்களை உருகுதல் அல்லது அழுத்தத்துடன் வெப்பப்படுத்தல் முறைகளின் மூலம் செருமேனைடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.[1][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Germanides definition of Germanides in the Free Online Encyclopedia". Encyclopedia2.thefreedictionary.com. 2011-10-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "germanide - Wiktionary". En.wiktionary.org. 2011-04-09. 2011-10-08 அன்று பார்க்கப்பட்டது.