செருமானியப் பன்னாட்டுப் பள்ளி, சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செருமானிய பன்னாட்டுப் பள்ளி, சென்னை

செருமானிய பன்னாட்டுப் பள்ளி, சென்னை (German International School Chennai) சென்னையின் புறநகர்ப்பகுதியான பாலவாக்கத்தில் பன்னாட்டு மாணவர்களும் பயிலுமாறு அமைந்துள்ள துவக்கப்பள்ளியும் இடைநிலைப் பள்ளியுமாகும்.[1] இந்தப் பள்ளி 2010ஆம் ஆண்டு சென்னையிலுள்ள செருமானிய கிளைத் தூதரகம் மற்றும் கோத்தே கழகத்தின் துணையுடன் நீலாங்கரையில் நிறுவப்பட்டது. பின்னர் பாலவாக்கத்திற்கு விரிவாக்கப்பட்டு 2014ஆம் ஆண்டிலிருந்து தங்குவிடுதி வசதியையும் அளிக்கத் துவங்கியுள்ளது.[2][3] ஒன்றாவது வகுப்பிலிருந்து எட்டாவது வகுப்பு வரை செருமனியில் பின்பற்றப்படும் துரிங்கிய பாடத்திட்டத்தின்படியும் 9ஆவது, 10ஆவது வகுப்புகளில் பன்னாட்டளவில் பின்பற்றப்படும் பன்னாட்டு இடைநிலைக் கல்விக்கான பொதுச் சான்றிதழ் (IGCSE) பாடதிட்டத்தின்படியும் கல்வி வழங்கப்படுகின்றது.[4] ஆங்கிலம், செருமன் இருமொழிகளில் கல்வி பயில்விக்கப்படுகின்றது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Contact Info." German International School Chennai. Retrieved on February 11, 2015. "4/391 Ram Garden Anna Salai Palavakkam Chennai 600 041"
  2. "History". German International School Chennai. Archived from the original on 23 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 11 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Ramya, M. (24 February 2014). "Boarding facilities inaugurated at German International School in Chennai". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 11 June 2014.
  4. "Welcome". German International School Chennai. Archived from the original on 2015-05-03. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)