செருசேரி நம்பூதிரி
செருசேரி நம்பூதிரி | |
|---|---|
| பிறப்பு | சுமார் 1375 கி.பி. செருசேரி இல்லம், கனத்தூர் கிராமம், கோலாத்துநாடு, (நவீன, கேரளம், இந்தியா) |
| இறப்பு | சுமார் 1475 கி.பி. |
| அடக்கத்தலம் | கோழிக்கோடு |
| தொழில் | கவிஞர் |
| மொழி | மலையாளம் |
| தேசியம் | |
| கல்வி | ஆசிரியர் |
| கருப்பொருள் | கவிதை |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | கிருஷ்ண கதை |
செருசேரி நம்பூதிரி (Cherusseri Namboothiri) இந்திய மாநிலமான கேரளாவின் வடக்கு மலபார் பிராந்தியத்திலுள்ள கோலத்துநாட்டைச் சேர்ந்த 15 ஆம் நூற்றாண்டின் மலையாளக் கவிஞர் ஆவார். இவர் கோலாத்திரி வம்சத்தைச் சேர்ந்த உதய வர்மனின் அரசவைக் கவிஞராகவும், மலையாள இலக்கியத்தின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் ‘கிருஷ்ண கதை’ என்ற கவிதை நூலின் ஆசிரியராகவும் இருந்தார்.
வரலாறு
[தொகு]செருசேரி நம்பூதிரி கிபி 1375 முதல் 1475 வரை வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இவர் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ளவடகரையிலுள்ள கோலாத்துநாடு அல்லது கோலாத்திரி தேசத்தில் உள்ள கனத்தூர் கிராமத்தில் பிறந்தார்.[1] ‘கிருஷ்ண கதை’யின் தொடக்கக் கவிதைகளில் உள்ள சில வரிகள், இவர் அப்போது கோலாத்துநாட்டை ஆட்சி செய்த மன்னர் உதய வர்மனின் அரண்மனையில் அரசவைக் கவிஞராக இருந்ததை தெளிவுபடுத்துகின்றன.
கிருஷ்ண காவியம்
[தொகு]‘கிருஷ்ண கதை’ என்பது உதய வர்மனின் உத்தரவின் பேரில் எழுதப்பட்ட நீண்ட கவிதைத் தொகுபாகும். கிருஷ்ண கதை பெரும்பாலும் சமசுகிருதம் மற்றும் தமிழ் சொற்களைக் கைவிட்டு, தூய மலையாளத்தில் எழுதப்பட்டுள்ளது. எனவே, மலையாள வரலாற்றில் கிருஷ்ண காவியம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இது மலையாளத்தின் முதல் மகா காவியம் எனவும் கருதப்படுகிறது. மலையாளத்தில் கதை பாணியிலான கவிதைகளை உருவாக்கியவராக செருசேரி அறியப்படுகிறார். ‘கிருஷ்ண கதை’ என்பது பாகவதத்தின் 10 வது புராணம் அடிப்படையில் கிருஷ்ணரின் சிறுவயது குறும்புகள் பற்றிய விரிவான விளக்கமாகும்.[2][3] சொந்த மொழியின் மீது தெளிவான விருப்பம் கொண்டிருப்பதன் மூலம் இவரது கவிதைகள் கேரள மக்களிடையே பிரபலமடைந்தன.[4] நவீன மலையாள இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சனின் ஆத்யாத்மராமாயணம் போலவே இந்த படைப்பும் கேரள மக்களால் மதிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pattu Movement in Malayalam Poetry". www.keralaculture.org (in ஆங்கிலம்). Retrieved 2019-04-07.
- ↑ Nalini Natarajan; Emmanuel Sampath Nelson (1996). Handbook of Twentieth-century Literatures of India. Greenwood Publishing Group. pp. 181–. ISBN 978-0-313-28778-7.
- ↑ Sujit Mukherjee (1998). A Dictionary of Indian Literature: Beginnings-1850. Orient Blackswan. pp. 189–. ISBN 978-81-250-1453-9.
மேலும் வாசிக்க
[தொகு]- Paniker, K. Ayyappa (1997). Medieval Indian Literature: Surveys and selections (in ஆங்கிலம்). Sahitya Akademi. p. 310. ISBN 978-81-260-0365-5.
- Datta, Amaresh, ed. (1987). Encyclopaedia of Indian Literature: A-Devo (in ஆங்கிலம்). Sahitya Akademi. p. 677. ISBN 978-81-260-1803-1.
வெளி இணைப்புகள்
[தொகு]- Sovi's World (2017-06-15). "Cherusseri". YouTube. Archived from the original on 2021-12-21. Retrieved 2019-04-07.