செருக்களவஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செருக்களவஞ்சி என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். செருக்களம் என்பது போர்க்களம் என்னும் பொருள் உடையது. போர்க்களத்தில் நிகழும் கொடூரங்களை ஆசிரியப் பாவினாலும், வஞ்சிப்பாவினாலும் கூறும்படி அமைந்ததே செருக்களவஞ்சி ஆகும். [1].

போரில் அறுபட்டு வீழ்ந்த மனிதர், குதிரைகள், யானைகள் முதலானவற்றின் உடலங்களிலிருந்து, தசையையும், இரத்தத்தையும், பேய், பிசாசுகளும், கழுகு, நாய், காகம் முதலானவையும் எமது எமது என்று தின்று ஆரவாரம் செய்யும். பூதங்கள் இசைபாடி ஆடிக் களிக்கும் என்று செருக்களவஞ்சியில் கூறப்படுவன பற்றிப் பிரபந்த தீபிகை என்னும் பாட்டியல் நூல் விளக்குகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869

உசாத்துணைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செருக்களவஞ்சி&oldid=1340702" இருந்து மீள்விக்கப்பட்டது