செருகோல்புழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செருகோல்புழா (Cherukolpuzha) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தில் உள்ள பதனம்திட்டா மாவட்டத்தின் உள்ள ஒரு சிற்றூராகும்.

இங்கு பம்பை ஆற்றின் கரையில் நடக்கும் அய்ருர் செருகோல்புழா என்ற இந்து சமய பேரவைக் கூட்டம் ஒரு முக்கியமான சமயக் கூட்டமாகும். இந்தக் கூட்டத்தில் இந்துசமயம் குறித்த சொறுபொழிவுகளை சமய அறிஞர்கள் மேற்கொள்வார்கள்.

செருகோல்புழாவுக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம் திருவல்லா தொடருந்து நிலையமாகும் இது சுமார் 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள வானூர்தி நிலையம், திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையமாகும் இது சுமார் 121 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செருகோல்புழா&oldid=3029379" இருந்து மீள்விக்கப்பட்டது