செரி விஜய மகாதேவி
செரி விஜய மகாதேவி (ஆங்கிலம்: Sri Wijaya Mahadewi of Bali; இந்தோனேசியம்: Śri Wijaya Mahadewi; என்பவர் பாலி இராச்சியத்தின் வர்மதேவ மரபு வழியில் ஓர் அரசி ஆவார். பாலி இராச்சியத்தின் அரசர்கள் வரிசையில் இவர் ஆறாவது இடத்தில் உள்ளார். இவரின் ஆட்சிக்காலம் கிபி 983-989.[1]
பாலியின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதல் பெண் அரசி இவரே ஆகும். இவர் 905 சக ஆண்டு அல்லது கிபி 938-இல் ஆட்சி செய்யத் தொடங்கினார்.
செரி விஜய மகாதேவி, பண்டைய மாதரம் இராச்சியத்தைச் சேர்ந்த முப்பு சிந்தோக் என்பவரின் (Mpu Sindok) மகளாக இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் சிலர் மதிப்பிடுகின்றனர்.
கோப்லெக் கல்வெட்டு
[தொகு]ஆயர் தாபார் கிராமத்திற்குள் அமைந்துள்ள இந்திரபுரா கோயிலின் பாதுகாவலராக ஆயர் தாபார் மக்களுக்கு செரி விஜய மகாதேவி அனுமதி அளித்துள்ளார். அது கோப்லெக் கல்வெட்டில் பதிவாகி உள்ளது.
செரி விஜய மகாதேவி அரசியைப் பற்றிய வரலாற்றுச் சான்றாக உள்ள ஒரே கல்வெட்டு, கோப்லெக் கல்வெட்டு (Gobleg inscription Pura Desa II) (905 சக ஆண்டு) ஆகும்.
இந்திரபுர கோயில்
[தொகு]இந்த அரசி, ஆயர் தாபார் கிராமப் பகுதியில் உள்ள புக்கிட்துங்கலில் உள்ள இந்திரபுர கோயிலின் (Indrapura Temple) பாதுகாவலர்களாக இருந்த ஆயர் தாபார் கிராம மக்களுக்கு, மாப்பரின் பந்தாக்க சயன கல்வெட்டை (Mabharin Pandaksayan Na) புதுப்பிக்க அனுமதி அளித்தார்.
செரி விஜய மகாதேவி அரசி வர்மதேவ மரபு வழியைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் அந்த மரபுவழி அடையாளத்தைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது பல முரண்பட்ட கோட்பாடுகளுக்கு இட்டுச் செல்கிறது. அரசியின் பட்டத்தில் செரி விஜயா என்ற சொல் தொடர் பயன்படுத்தப்பட்டு இருப்பதின் காரணமாக ஆய்வுகள் செய்யப்பட்டன.
கிழக்கு ஜாவானிய இராச்சியம்
[தொகு]அதைப் பற்றி பி.வி. வான் இசுடீன் காலன்பெல்ஸ் (P.V. van Stein Callenfels) (1924:30) என்பவர் ஆய்வுகள் செய்தார். செரி விஜய மகாதேவி, சுமாத்திராவின் சிறீ விஜய இராச்சியத்திலிருந்து வந்திருக்கலாம் என்று அவர் கருதுகிறார். அதாவது, சிறீ விஜயத்தின் அதிகாரம் பாலி வரை விரிவடைந்ததைக் காட்டுவதாக அவர் கூறுகிறார்.
1950 ஆம் ஆண்டில், "தி இசுடாம்பூம் வான் ஆயர்லாங்கா" (De Stamboom van Erlangga) என்ற தலைப்பிலான தன்னுடைய கட்டுரையில், ஜே.எல். மோயன்ஸ் (J.L. Moens) என்பவர், செரி விஜய மகாதேவியை கிழக்கு ஜாவானிய இராச்சியத்துடன் இணைக்கிறார்.[2]
இறப்பு
[தொகு]செரி விஜய மகாதேவி 911 சக ஆண்டில் (கி.பி 989) இறந்ததாகக் கருதப்படுகிறது. பின்னர் பாலியின் ஆட்சிப் பொறுப்பை குணப்பிரிய தருமபத்தினி; உதயனா வருமதேவன் தம்பதியினர் ஏற்றுக் கொண்டனர்.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Marwati Djoened Poesponegoro, Nugroho Notosusanto: Sejarah nasional Indonesia: untuk SMP. Departemen Pendidikan dan Kebudayaan, 1984
- ↑ Dawan, Lanang (14 May 2011). "ŚRI WIJAYA MAHADEWI". PEMECUTAN-BEDULU-MAJAPAHIT. Retrieved 19 November 2019.
- ↑ Shastri, Narendra Dev Pandit (1963-01-26). Sejarah Bali Dwipa. Bhuvana Saraswati.
சான்றுகள்
[தொகு]- Poesponegoro, Marwati Djoened; Notosusanto, Nugroho (2008). Sejarah Nasional Indonesia II: Zaman kuno. PT Balai Pustaka. ISBN 9789794074084.
- Setiawan, I Ketut (2008). Brigitta Hauser-Schäublin, I Wayan Ardika. ed. "Socio-Political Aspect of Julah". Burials, Texts and Rituals: Ethnoarchaeological Investigations in North Bali, Indonesia (Bali: Universitätsverlag Göttingen). doi:10.17875/gup2019-1239. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783940344120. https://books.google.com/books?id=K7AcwO4jxFIC&pg=PA219.
- Shastri, Narendra Dev. Pandit (1963). Sejarah Bali Dwipa. Denpasar, Bali: Bhuana Saraswati.