உள்ளடக்கத்துக்குச் செல்

செரி பெட்டாலிங்

ஆள்கூறுகள்: 3°04′09″N 101°41′25″E / 3.069135°N 101.6903216°E / 3.069135; 101.6903216
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செரி பெட்டாலிங்
Sri Petaling
கோலாலம்பூர்
புறநகர் பகுதி
ராடின் பாகுஸ் சாலை
ராடின் பாகுஸ் சாலை
Map
ஆள்கூறுகள்: 3°04′09″N 101°41′25″E / 3.069135°N 101.6903216°E / 3.069135; 101.6903216
நாடு மலேசியா
மாநிலம் கோலாலம்பூர்
தொகுதிசெபுத்தே மக்களவைத் தொகுதி
அமைவு1981
நேர வலயம்மலேசிய நேரம் 08:00
அஞ்சல் குறியீடு
57000[1]
தொலைபேசி+60-3-9057
போக்குவரத்துப் பதிவெண்கள்W; V
செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையத்தில் ஒரு நடைமேடைப் பகுதி
செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம்

செரி பெட்டாலிங் அல்லது பண்டார் பாரு செரி பெட்டாலிங் (ஆங்கிலம்; மலாய்: Sri Petaling அல்லது Bandar Baru Sri Petaling) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தில் உள்ள ஒரு புறநகர் பகுதி ஆகும்.

கோலாலம்பூர் மாநகரின் தெற்கே, செபுத்தே மக்களவைத் தொகுதிக்குள் அமைந்துள்ள இந்த புறநகர் பகுதி, எப்பி கார்டன் (Happy Garden), தாமான் ஒயூஜி (Taman OUG), கூச்சாய் லாமா மற்றும் புக்கிட் ஜாலில் ஆகிய நகரங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.

அணுகல்

[தொகு]

புத்ராஜெயா, சைபர்ஜெயாவில் உள்ள அரசாங்கத் துறைகளுக்கான அணுகலும் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்குச் செல்வதற்கான எளிய வசதிகளும் செரி பெட்டாலிங்கில் உள்ளன. இந்த நகர்ப்புறத்திற்கு அருகில் சிப்பாங் பன்னாட்டு சுற்றுகை, கோலாலம்பூர் மாநகர மையம், பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா, டாமன்சாரா அயிட்ஸ் மற்றும் பூச்சோங், சா ஆலாம், கிள்ளான் ஆகிய இடங்கள் உள்ளன.

வரலாறு

[தொகு]

1977-ஆம் ஆண்டில் பண்டார் பாரு செரி பெட்டாலிங் நகரத்தின் கட்டுமானங்கள் முன்மொழியப்பட்டன. 1981-ஆம் ஆண்டில் பெட்டாலிங் கார்டன் பெர்காட் (Petaling Garden Berhad) எனும் சொத்து மேம்பாட்டு நிறுவனம் கட்டுமானங்களைத் தொடங்கியது.[2]

1980 - 1990-களின் நடுப்பகுதி வரை, இந்த இடம் ஒரு குப்பைக் கிடங்காக இருந்தது. அதனால் இந்தப் பகுதி 'குப்பைப் பகுதி' என்று பரவலாக அறியப்பட்டது. பின்னர் குப்பைகளைக் கொட்டுவது கட்டம் கட்டமாக நிறுத்தப்பட்டது. இந்த இடம் தூய்மையாக்கப்பட்ட பின்னர் வீடுமனை கட்டுமானங்கள் தொடங்கின.

மேலும் அதே இடத்தில் 1998-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக (1998 Commonwealth Games) விளையாட்டு துணை வளாகமும் உருவாக்கப்பட்டது; பின்னர் காலத்தில் இந்த இடம் அதிக அளவிலான வாகனங்கள் நிறுத்துமிடமாகவும் மாறியது.

விரைவுச்சாலைகள்

[தொகு]

1980-களின் முற்பகுதியில் செரி பெட்டாலிங்கில் மக்கள் தொகை அதிகமாக இல்லை. ஏனெனில் அது கோலாலம்பூர் நகரத்திலிருந்து சற்றே தொலைவில் இருந்தது; மற்றும் சற்று தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் இருந்தது. 1980-களின் பிற்பகுதியில் மக்கள் தொகை அதிகரித்தது. அடுத்த பத்தாண்டுகளில், வளர்ச்சி தொடர்ந்தது; மற்றும் மக்கள் தொகையும் அதிகரித்தது. 1997-இல், இந்த நகர்ப்பகுதிக்கு அருகில் சா ஆலாம் விரைவுச்சாலை (KESAS) திறக்கப்பட்டது. 2007-இல், மாஜு விரைவுச்சாலையும் (MEX) திறக்கப்பட்டது.

இந்த அதிவேக விரைவுச்சாலைகள்; இங்கு வசிக்கும் மக்களை கோலாலம்பூர் மாநகர மையம், புத்ராஜெயா, சைபர்ஜெயா மற்றும் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் போன்ற முக்கியமான இடங்களை இணைக்கிறது.

போக்குவரத்து

[தொகு]

இந்த நகர்ப்பகுதி கோலாலம்பூர் மாநகர மையத்திலிருந்து தெற்கே 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது; மற்றும் கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை, சா ஆலாம் விரைவுச்சாலை (KESAS), பந்தாய் புதிய விரைவுச்சாலை (NPE), கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 (MRR2), மாஜு விரைவுச்சாலை (MEX) போன்ற நெடுஞ்சாலைகளிலிருந்து எளிதில் அணுகக்கூடிய நிலையிலும் உள்ளது.

செரி பெட்டாலிங் நகர்ப்பகுதி செரி பெட்டாலிங் வழித்தடத்தில்  SP17  புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையம்;  SP18  செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் என இரண்டு இலகுரக எல்ஆர்டி தொடருந்து நிலையங்களைக் கொண்டுள்ளது. தவிர புத்ராஜெயா வழித்தடத்தில்  PY28  தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி நிலையத்தையும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bandar Baru Sri Petaling, Kuala Lumpur - Postcode - 57000 - Malaysia Postcode". postcode.my. Retrieved 4 October 2025.
  2. Tan, Thiam Hock. "Cashing in on the Damansara and Petaling brand names". The Star (Malaysia). Retrieved 2021-07-08.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரி_பெட்டாலிங்&oldid=4358089" இலிருந்து மீள்விக்கப்பட்டது