உள்ளடக்கத்துக்குச் செல்

செரி டாமன்சாரா பாராட் எம்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°11′52.36″N 101°36′30.25″E / 3.1978778°N 101.6084028°E / 3.1978778; 101.6084028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 PY06  செரி டாமன்சாரா பாராட்
Rapid_KL_Logo | எம்ஆர்டி நிலையம்
நிலையத்தின் வெளிப்புறக் காட்சி.
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Stesen MRT Sri Damansara Barat
சீனம்: 斯里白沙罗西站
அமைவிடம்பண்டார் செரி டாமன்சாரா, சிலாங்கூர்  மலேசியா
ஆள்கூறுகள்3°11′52.36″N 101°36′30.25″E / 3.1978778°N 101.6084028°E / 3.1978778; 101.6084028
உரிமம் எம்ஆர்டி நிறுவனம்
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்
பிரசரானா மலேசியா
தடங்கள்12  புத்ராஜெயா 
நடைமேடை1 தீவு மேடை
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்பேருந்து போக்குவரத்து ரேபிட் பேருந்து: T106 
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்மட்ட நிலை
தரிப்பிடம்Parking இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு PY06 
வரலாறு
திறக்கப்பட்டது PY06  16 சூன் 2022
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
டாமன்சாரா டாமாய்
குவாசா டாமன்சாரா
 

புத்ராஜெயா வழித்தடம்
 
டாமன்சாரா சென்ட்ரல்
புத்ராஜெயா சென்ட்ரல்
அமைவிடம்
Map

செரி டாமன்சாரா பாராட் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Sri Damansara Barat MRT Station; மலாய்: Stesen MRT Sri Damansara Barat) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, பண்டார் செரி டாமன்சாரா நகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும்.

கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் முதலாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் இந்த நிலையம் 2022 சூன் 16 அன்று செயல்படத் தொடங்கியது.  PY05  டாமன்சாரா டாமாய் எம்ஆர்டி நிலையத்திற்கும்;  PY07  செரி டாமன்சாரா சென்ட்ரல் நிலையத்திற்கும் இடையில் இந்த நிலையம் அமைந்துள்ளது; மற்றும் இந்த நிலையத்தின் குறியீடு  PY06  ஆகும்.[1] கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள பெரும்பாலான எம்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் அடுக்குமாடி அமைப்பைக் கொண்டது.

வரலாறு

[தொகு]

இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு முன்மொழியப்பட்ட சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பில் (தற்போது புத்ராஜெயா வழித்தடம்) செரி டாமன்சாரா பாராட் எம்ஆர்டி நிலையம் ஒரு பகுதியாக இருக்கும் என 15 செப்டம்பர் 2016 அன்று எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது. அந்த வகையில் செரி டாமன்சாரா பாராட் எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தின் வடக்குப் பகுதியில் ஓர் உயர்த்தப்பட்ட நிலையமாக அமைக்கப்பட்டது. இந்த நிலையக் கட்டமைப்பின் கட்டுமானத்திற்கான தொடக்கக்காலக் குறியீடு  S06  என அறிவிக்கப்பட்டது.

செரி டாமன்சாரா பாராட் எம்ஆர்டி நிலையம் எம்ஆர்டி S201 ஒப்பந்தத்தின் (Package S201)[2] கீழ் உள்ளது. இணைப்புவழி, நடைமேடை மற்றும் நிலையக் கதவுகள் உள்ளிட்டவை நிலையக் கட்டமைப்பின் கட்டுமானத்திலும் உள்ளன. 2017-ஆம் ஆண்டில் RM 213.3 மில்லியன் மதிப்பளவிலான நிலையக் கட்டுமானம்; சன்வே கட்டுமான நிறுவனத்திடம் (Sunway Construction Sdn Bhd) வழங்கப்பட்டது. செரி டாமன்சாரா பாராட் எம்ஆர்டி நிலையத்தின் கட்டுமானப் பெயர் கிழக்கு செரி டாமன்சாரா (Sri Damansara East) ஆகும்.

செரி டாமன்சாரா பாராட் எம்ஆர்டி நிலையம் சூன் 16, 2022 அன்று பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டு, செயல்பாடுகளைத் தொடங்கியது.[3][4] மேலும் அதே காலக்கட்டத்தில்,  PY01  குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் தொடங்கி  PY13  கம்போங் பத்து எம்ஆர்டி நிலையம் வரையிலான 12 புத்ராஜெயா வழித்தடத்தின் பிற நிலையங்களும் செயல்படத் தொடங்கின.

புத்ராஜெயா வழித்தடம்

[தொகு]

புத்ராஜெயா வழித்தடம் (Putrajaya Line) என்பது மலேசியா, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள எம்ஆர்டி (Mass Rapid Transit) தொடருந்து வழித்தடம் ஆகும்.

இந்த 12 புத்ராஜெயா வழித்தடம் மலேசிய நாட்டின் மூன்றாவது முழு தானியங்கி; மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து வழித்தடமாக அறியப்படுகிறது. முன்பு இந்த வழித்தடம் எம்ஆர்டி சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தடம் (MRT Sungai Buloh–Serdang–Putrajaya Line) (SSP Line) என அறியப்பட்டது.

நிலைய இருப்பிடம்

[தொகு]

இந்த நிலையம் ஓர் உயர்மட்ட நிலையமாகும். தரை மட்டத்திலிருந்து இரண்டு நிலைகளைக் கொண்டு உயர்த்தப்பட்ட நிலைய வடிவமைப்பைக் கொண்டது. முதல் நிலை இணைப்புவழி தளமாகும்; இரண்டாம் நிலை மேல் தளத்தில் இரட்டை வழித்தடங்களும்; இரண்டு நடைமேடைகளும் உள்ளன. இந்த நிலையம் சிலாங்கூர் மாநிலத்தில் பெட்டாலிங் ஜெயாவின் வடக்கு மண்டலமான பண்டார் செரி டாமன்சாரா பகுதியின் கோலா சிலாங்கூர் சாலையில் அமைந்துள்ளது.

வடக்கு செரி டாமன்சாரா நகரம், கேஐபி தொழில்துறை பூங்கா (KIP Industrial Park), தோகோ தொழில்துறை பூங்கா (Togo Industrial Park), பெட்ரோனாஸ் பண்டார் செரி டாமன்சாரா (Petronas Bandar Sri Damansara), செரி செம்பாக்கா குடியிருப்பு வளாகம் (Sri Cempaka Apartment), செரி மெனாந்தி குடியிருப்பு வளாகம் (Sri Menanti Apartment), செரி டாமன்சாரா கோபுரம் போன்ற பகுதிகளுக்கும்; மற்றும் சில புறநகர்ப் பகுதிகளுக்கும் இந்த நிலையம் சேவை செய்கிறது.

நிலைய அமைப்பு

[தொகு]
L2
எம்ஆர்டி நடைமேடை
புத்ராஜெயா தெற்கு திசை 12  புத்ராஜெயா புத்ராஜெயா சென்ட்ரல் (செரி டாமன்சாரா சென்ட்ரல்)
→ மத்திய நடைபாதை, தொடருந்து கதவு வலதுபுறம் திறக்கும் ஊனமுற்றவர் அணுகல்
← மத்திய நடைபாதை, தொடருந்து கதவு வலதுபுறம் திறக்கும் ஊனமுற்றவர் அணுகல்
புத்ராஜெயா வடக்கு திசை 12  புத்ராஜெயா குவாசா டாமன்சாரா (டாமன்சாரா டாமாய்)
L1 இணைப்புவழி கட்டணப் பகுதி, பயணச்சீட்டு இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம் ஊனமுற்றவர் அணுகல்
G தரை மட்டம் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம், பணியாளர்களின் வாகனங்கள் நிறுத்துமிடம், ஊட்டி பேருந்து முனையம் ஊனமுற்றவர் அணுகல்

இந்த நிலையம் அடுக்கு மாடிகளைக் கொண்ட நிலையமாகும். மேலும் புத்ராஜெயா தொடருந்து சேவைக்காக, இந்த நிலையத்தின் மேல் பகுதியில் ஒரு நடுத்தர நடைமேடை உள்ளது.

பயண முனையங்களுக்குச் செல்ல நிலையத்தின் மேல் பகுதியில் 2 தளங்கள் உள்ளன.

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

[தொகு]
நுழைவாயில் இலக்கு தோற்றம்
A செம்பாக்கா சாலை SD 12/5 ஊனமுற்றவர் அணுகல் பேருந்து போக்குவரத்து
ஊட்டி பேருந்து நிறுத்தம் (→) வாடகை தனியார் வாகனங்கள் நிறுத்தம் (→) பெட்ரோனாஸ் பண்டார் செரி டாமன்சாரா
B பெர்சியாரான் இன்டாசிரி ஊனமுற்றவர் அணுகல்
ஊட்டி பேருந்து நிறுத்தம் (→) வாடகை தனியார் வாகனங்கள் நிறுத்தம் (→) கேஐபி தொழில்துறை பூங்கா, தோகோ தொழில்துறை பூங்கா
C செம்பாக்கா சாலை SD 12/5
ஊட்டி பேருந்து நிறுத்தம் (→) வாடகை தனியார் வாகனங்கள் நிறுத்தம் (→) செரி செம்பாக்கா குடியிருப்பு வளாகம், செரி மெனாந்தி குடியிருப்பு வளாகம், கோலா சிலாங்கூர் சாலை, பெர்சியாரான் செம்பாக்கா
-
குறிப்பு      தற்காலிகமாக இடைநிறுத்தம்

பேருந்து சேவைகள்

[தொகு]
டாமன்சாரா டாமாய் எம்ஆர்டி நிலையத்தின் பேருந்து சேவைகள்
பேருந்து தொடக்கம் இலக்கு பயணவழி
T106 [5]  PY06  செரி டாமன்சாரா பாராட் எம்ஆர்டி (→) நுழைவாயில் B ↺ பண்டார் செரி டாமன்சாரா இண்டா அடுக்குமாடி குடியிருப்பு (→) இடாமான் அடுக்குமாடி குடியிருப்பு (→) இம்பியான் அடுக்குமாடி குடியிருப்பு (→) சவுஜானா அடுக்குமாடி குடியிருப்பு (→) வான் சென்ட்ரல் பேருந்து மையம் ↺  PY06  செரி டாமன்சாரா பாராட் எம்ஆர்டி

காட்சியகம்

[தொகு]

செரி டாமன்சாரா பாராட் எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (2022)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wahab, Farid (16 June 2022). "First Putrajaya MRT stretch opens today". The Star. https://www.thestar.com.my/metro/metro-news/2022/06/16/first-putrajaya-mrt-stretch-opens-today. 
  2. "Package S201: Construction and Completion of Elevated Stations and Other Associated Works at Damansara Damai, Sri Damansara West and Sri Damansara East". www.mymrt.com.my. 25 October 2017. Retrieved 30 September 2025.
  3. "Suncon bags RM661m new jobs". The Malaysia Reserve (in ஆங்கிலம்). 3 April 2017. Retrieved 29 November 2022.
  4. "Awarded Contracts for MRT Putrajaya Line". mymrt.com.my (in ஆங்கிலம்). Malaysia: MRT Corp. Retrieved 29 November 2022.
  5. "Damansara Damai MRT Station Feeder Bus T106 | mrt.com.my". mrt.com.my. Retrieved 30 September 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]