செரி டாமன்சாரா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம்
PY07 செரி டாமன்சாரா சென்ட்ரல் | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நிலையத்தின் வெளிப்புறக் காட்சி. | ||||||||||||||||
| பொது தகவல்கள் | ||||||||||||||||
| வேறு பெயர்கள் | Sri Damansara Sentral MRT Station Stesen MRT Sri Damansara Sentral சீனம்: 斯里白沙罗中环站 | |||||||||||||||
| அமைவிடம் | பெர்சியாரான் டாகாங், செரி டாமன்சாரா | |||||||||||||||
| ஆள்கூறுகள் | 3°11′55″N 101°37′16.6″E / 3.19861°N 101.621278°E | |||||||||||||||
| உரிமம் | ||||||||||||||||
| இயக்குபவர் | ||||||||||||||||
| தடங்கள் | 12 புத்ராஜெயா | |||||||||||||||
| நடைமேடை | 2 பக்க மேடை | |||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
| இணைப்புக்கள் | ||||||||||||||||
| கட்டமைப்பு | ||||||||||||||||
| கட்டமைப்பு வகை | உயர்மட்ட நிலை | |||||||||||||||
| தரிப்பிடம் | ||||||||||||||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||
| மற்ற தகவல்கள் | ||||||||||||||||
| நிலையக் குறியீடு | PY07 | |||||||||||||||
| வரலாறு | ||||||||||||||||
| திறக்கப்பட்டது | PY07 16 சூன் 2022 | |||||||||||||||
| சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| ||||||||||||||||
செரி டாமன்சாரா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Sri Damansara Sentral MRT Station; மலாய்: Stesen MRT Sri Damansara Sentral) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, பண்டார் செரி டாமன்சாரா நகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும்.
கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் முதலாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் இந்த நிலையம் 2022 சூன் 16 அன்று செயல்படத் தொடங்கியது. PY06 செரி டாமன்சாரா பாராட் எம்ஆர்டி நிலையத்திற்கும்; PY08 செரி டாமன்சாரா தீமோர் நிலையத்திற்கும் இடையில் இந்த நிலையம் அமைந்துள்ளது; மற்றும் இந்த நிலையத்தின் குறியீடு PY07 ஆகும்.[1] கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள பெரும்பாலான எம்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் அடுக்குமாடி அமைப்பைக் கொண்டது.
வரலாறு
[தொகு]இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு முன்மொழியப்பட்ட சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பில் (தற்போது புத்ராஜெயா வழித்தடம்) செரி டாமன்சாரா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம் ஒரு பகுதியாக இருக்கும் என 15 செப்டம்பர் 2016 அன்று எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது. அந்த வகையில் செரி டாமன்சாரா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தின் வடக்குப் பகுதியில் ஓர் உயர்த்தப்பட்ட நிலையமாக அமைக்கப்பட்டது. இந்த நிலையக் கட்டமைப்பின் கட்டுமானத்திற்கான தொடக்கக்காலக் குறியீடு S06 என அறிவிக்கப்பட்டது.
செரி டாமன்சாரா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம் எம்ஆர்டி S201 ஒப்பந்தத்தின் (Package S201)[2] கீழ் உள்ளது. இணைப்புவழி, நடைமேடை மற்றும் நிலையக் கதவுகள் உள்ளிட்டவை நிலையக் கட்டமைப்பின் கட்டுமானத்திலும் உள்ளன. 2017-ஆம் ஆண்டில் RM 213.3 மில்லியன் மதிப்பளவிலான நிலையக் கட்டுமானம்; சன்வே கட்டுமான நிறுவனத்திடம் (Sunway Construction Sdn Bhd) வழங்கப்பட்டது. செரி டாமன்சாரா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையத்தின் கட்டுமானப் பெயர் கிழக்கு செரி டாமன்சாரா (Sri Damansara East) ஆகும்.
செரி டாமன்சாரா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம் சூன் 16, 2022 அன்று பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டு, செயல்பாடுகளைத் தொடங்கியது.[3][4] மேலும் அதே காலக்கட்டத்தில், PY01 குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் தொடங்கி PY13 கம்போங் பத்து எம்ஆர்டி நிலையம் வரையிலான 12 புத்ராஜெயா வழித்தடத்தின் பிற நிலையங்களும் செயல்படத் தொடங்கின.
நிலைய அமைவு
[தொகு]இந்த நிலையம் சிலாங்கூர்-கூட்டரசு பிரதேச எல்லையில் பண்டார் மஞ்சலாரா மற்றும் தேசா பார்க் நகரத்திற்கு (Desa Park City) அருகில்
கெப்போங்-கோலா சிலாங்கூர் நெடுஞ்சாலை;
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 மற்றும்
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை ஆகியவற்றின் சந்திப்புப் புள்ளிக்கு (Meeting Point) அடுத்ததாக உள்ளது.
அத்துடன் பண்டார் செரி டாமன்சாராவின் தொழில்துறை பகுதிக்குள் மற்றும்
டூத்தா–உலு கிள்ளான் விரைவுச்சாலைக்கு (Duta–Ulu Klang Expressway) அருகிலும் அமைந்துள்ளது.
நிலைய இருப்பிடம்
[தொகு]இந்த நிலையம் ஓர் உயர்மட்ட நிலையமாகும். தரை மட்டத்திலிருந்து இரண்டு நிலைகளைக் கொண்டு உயர்த்தப்பட்ட நிலைய வடிவமைப்பைக் கொண்டது. முதல் நிலை இணைப்புவழி தளமாகும்; இரண்டாம் நிலை மேல் தளத்தில் இரட்டை வழித்தடங்களும்; இரண்டு நடைமேடைகளும் உள்ளன.
இந்த நிலையம் சிலாங்கூர் மாநிலத்தில் பெட்டாலிங் ஜெயாவின் வடக்கு மண்டலமான பண்டார் செரி டாமன்சாரா பகுதியின் பண்டார் செரி டாமன்சாரா தொழில்துறை பகுதிக்குள்
டூத்தா–உலு கிள்ளான் விரைவுச்சாலைக்கு அருகிலும் அமைந்துள்ளது.
நிலைய அமைப்பு
[தொகு]| L2 எம்ஆர்டி நடைமேடை |
புத்ராஜெயா தெற்கு திசை | → 12 புத்ராஜெயா → புத்ராஜெயா சென்ட்ரல் (செரி டாமன்சாரா சென்ட்ரல்) |
| → மத்திய நடைபாதை, தொடருந்து கதவு வலதுபுறம் திறக்கும் ← மத்திய நடைபாதை, தொடருந்து கதவு வலதுபுறம் திறக்கும் | ||
| புத்ராஜெயா வடக்கு திசை | ← 12 புத்ராஜெயா ← குவாசா டாமன்சாரா (டாமன்சாரா டாமாய்) | |
| L1 | இணைப்புவழி | கட்டணப் பகுதி, பயணச்சீட்டு இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம் |
| G | தரை நிலை | வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம், பணியாளர்களின் வாகனங்கள் நிறுத்துமிடம், ஊட்டி பேருந்து முனையம் |
இந்த நிலையம் அடுக்கு மாடிகளைக் கொண்ட நிலையமாகும். மேலும் புத்ராஜெயா தொடருந்து சேவைக்காக, இந்த நிலையத்தின் மேல் பகுதியில் ஒரு நடுத்தர நடைமேடை உள்ளது.
பயண முனையங்களுக்குச் செல்ல நிலையத்தின் மேல் பகுதியில் 2 தளங்கள் உள்ளன.
- தளம் 1 - புத்ராஜெயா சென்ட்ரல்
- தளம் 2 - குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
[தொகு]| நுழைவாயில் | இலக்கு | தோற்றம் | ||
|---|---|---|---|---|
| A | டகாங் சாலை (தெற்கு) ஊட்டி பேருந்து நிறுத்தம் |
|||
| B | டகாங் சாலை (வடக்கு) ஊட்டி பேருந்து நிறுத்தம் (→) வாடகை தனியார் வாகனங்கள் நிறுத்தம் (→) டாத்தாரான் செரி பெர்டானா |
|||
பேருந்து சேவைகள்
[தொகு]| பேருந்து | தொடக்கம் | இலக்கு | |
|---|---|---|---|
| PY07 செரி டாமன்சாரா சென்ட்ரல் | தாமான் வங்சா பெர்மாய் (→) பண்டார் செரி டாமன்சாரா | ||
| PY07 செரி டாமன்சாரா சென்ட்ரல் | பண்டார் மஞ்சலாரா | ||
| PY07 செரி டாமன்சாரா சென்ட்ரல் | டேசா பார்க்சிட்டி | ||
காட்சியகம்
[தொகு]செரி டாமன்சாரா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (2022)
மேலும் காண்க
[தொகு]- புத்ராஜெயா சென்ட்ரல்
- டாமன்சாரா டாமாய் எம்ஆர்டி நிலையம்
- கம்போங் செலாமாட் எம்ஆர்டி நிலையம்
- செரி டாமன்சாரா பாராட் எம்ஆர்டி நிலையம்
- குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wahab, Farid (16 June 2022). "First Putrajaya MRT stretch opens today". The Star. https://www.thestar.com.my/metro/metro-news/2022/06/16/first-putrajaya-mrt-stretch-opens-today.
- ↑ "Package S201: Construction and Completion of Elevated Stations and Other Associated Works at Damansara Damai, Sri Damansara West and Sri Damansara East". www.mymrt.com.my. 25 October 2017. Retrieved 30 September 2025.
- ↑ "Suncon bags RM661m new jobs". The Malaysia Reserve (in ஆங்கிலம்). 3 April 2017. Retrieved 29 November 2022.
- ↑ "Awarded Contracts for MRT Putrajaya Line". mymrt.com.my (in ஆங்கிலம்). Malaysia: MRT Corp. Retrieved 29 November 2022.
- ↑ "Damansara Damai MRT Station Feeder Bus T107 | mrt.com.my". mrt.com.my. Retrieved 30 September 2025.
- ↑ "Damansara Damai MRT Station Feeder Bus T108 | mrt.com.my". mrt.com.my. Retrieved 30 September 2025.
- ↑ "Damansara Damai MRT Station Feeder Bus T109 | mrt.com.my". mrt.com.my. Retrieved 30 September 2025.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Sri Damansara Sentral MRT station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- Klang Valley Mass Rapid Transit
