செரி செர்டாங் சட்டமன்றத் தொகுதி
| செரி செர்டாங் (N29) | |
|---|---|
| Seri Serdang (N29) State Constituency in Selangor | |
| வாக்காளர்களின் எண்ணிக்கை | 93,235 (2023)[1] |
| முன்னாள் தொகுதி | |
| உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
| கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
| சட்டமன்ற உறுப்பினர் | அபாசு சலிமி அசுமி |
| முதல் தேர்தல் | 2004 |
| இறுதித் தேர்தல் | 2023 |
| மக்கள் தொகை | 244,929 |
செரி செர்டாங் சட்டமன்றத் தொகுதி (N29) (மலாய்: Bahagian Pilihan Raya Seri Serdang; ஆங்கிலம்: Seri Serdang State Constituency; சீனம்: 沙登州选区系列) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்தத் தொகுதி சிப்பாங் மக்களவைத் தொகுதியில் (P113) அமைந்துள்ளது.
செரி செர்டாங் சட்டமன்றத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2023-ஆம் ஆண்டில் மாநிலத் தேர்தல் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து செரி செர்டாங் சட்டமன்றத் தொகுதி, சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது அபாசு சலிமி அசுமி (Abbas Salimi Azmi) என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார். 30 மார்ச் 2018 அன்று வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின்படி, செரி செர்டாங் தொகுதி 14 வாக்குச் சாவடித் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]
செர்டாங்
[தொகு]சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள ஒரு பழைமையான நகரம் ஆகும். தற்போது செரி கெம்பாங்கான் என அழைக்கப்படுகிறது. செர்டாங் நகரம் பழைய செர்டாங் மற்றும் புதிய செர்டாங் (Serdang Baharu) என பிரிவுகளாக இருந்தது.
கோலாலம்பூருக்கு தெற்கே 15 கிமீ தொலைவில் சுங்கை பீசி விரைவுச்சாலைக்கு அருகில் அமைந்து இருந்த இந்த நகரத்திற்கு கிழக்கே பாலக்கோங்; வடக்கே செரி கெம்பாங்கான் ஆகிய நகரங்கள் உள்ளன. 1960-ஆம் ஆண்டுகளில் ஒரு புதுக்கிராமமாக இருந்த பழைய செர்டாங் கிராமம், தற்போது செரி கெம்பாங்கான் என்று அழைக்கப்படுகிறது.[3]
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]செரி செர்டாங் சட்டமன்றத் தொகுதியின் 2023-ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கை 93,235:[5][6]
தொகுதி வரலாறு
[தொகு]| செரி செர்டாங் சட்டமன்ற உறுப்பினர்கள் | |||
|---|---|---|---|
| சட்டமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
| பூச்சோங் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்ட தொகுதி | |||
| 11-ஆவது | 2004–2008 | முகமது சதிம் திமான் | பாரிசான் (அம்னோ) |
| 12-ஆவது | 2008–2013 | ||
| 13-ஆவது | 2013–2018 | நூர் அனிம் இசுமாயில் | பாரா (பாஸ்) |
| 14-ஆவது | 2018–2023 | சித்தி மரியா மகமூத் | பாரா (அமாணா) |
| 15-ஆவது | 2023–தற்போது வரையில் | அபாசு சலிமி அசுமி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
|---|---|---|---|---|---|
| அபாசு சலிமி அசுமி | பாக்காத்தான் அரப்பான் | 37,411 | 56.77 | 2.94 ▼ | |
| முகமது சுகோர் முசுதபா | பெரிக்காத்தான் நேசனல் | 26,659 | 40.45 | 40.45 | |
| அமீர் அரிரி அப்துல் அடி | மலேசிய ஐக்கிய மக்களாட்சி கூட்டணி | 1,834 | 2.78 | 2.78 | |
| மொத்தம் | 65,904 | 100.00 | – | ||
| செல்லுபடியான வாக்குகள் | 65,904 | 99.33 | |||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 444 | 0.67 | |||
| மொத்த வாக்குகள் | 66,348 | 100.00 | |||
| பதிவான வாக்குகள் | 66,348 | 16.02 ▼ | |||
| Majority | 10,752 | 16.32 | 15.34 ▼ | ||
| பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF) (in மலாய்). மலேசிய தேர்தல் ஆணையம். 2018-04-16. p. 12. Retrieved 2018-04-25.
- ↑ "NOTICE OF POLLING DISTRICTS AND POLLING CENTRES FOR THE FEDERAL AND STATE CONSTITUENCIES OF THE STATES OF MALAYA". www.scribd.com. Retrieved 7 February 2026.
- ↑ "Serdang, Selangor, Malaysia". Find Latitude and Longitude (in ஆங்கிலம்). Retrieved 25 October 2025.
- ↑ "15th Selangor State Election - Results Overview". live.chinapress.com.my. Retrieved 2023-08-11.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
- ↑ "Notis Mengenai Daerah Mengundi Dan Pusat Mengundi Bagi Bahagian-bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Bagi Negeri-negeri Tanah Melayu / Notice of Polling Districts and Polling Centres for the Federal and State Constituencies of the States of Malaya; Federal Government Gazette" (PDF). Berita RTM. 30 March 2018. P.U. (B) 157(/2018); SPR(R)60 Jld. 21; PN(PU2)178C/LXXXVII. Retrieved 23 March 2026.
- ↑ "Warta Kerajaan Persekutuan - Keputusan Pilihan Raya Yang Dipertandingkan Dan Penyata Pengundian Selepas Penjumlahan Rasmi Undi Bahagian Pilihan Raya Negeri Bagi Pahang" (PDF). Jabatan Peguam Negara. 2022-12-14. Retrieved 2024-05-13.
{{cite web}}: CS1 maint: date and year (link)