செரியால் சுருள் ஓவியங்கள்
செரியால் சுருள் ஓவியங்கள் ( Cheriyal scroll painting ) என்பது நகாஷி கலையின் பகட்டான பதிப்பாகும். இது தெலங்காணாவின் தனித்துவமான உள்ளூர் வடிவங்களில் நிறைந்துள்ளது. இவை தற்போது இந்தியாவின் ஐதராபாத்து, தெலுங்காணாவில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. சுருள்கள் ஒரு திரைப்படக் கதை வடிவத்தில் வரையப்படுகின்றன. மேலும் இந்தியப் புராணங்களின் கதைகளையும் சித்தரிக்கிறது, பொதுவான கருப்பொருள்களாக கிருஷ்ண லீலை, இராமாயணம், மகாபாரதம், சிவபுராணம், மார்கண்டேய புராணம் மற்றும் கௌடா, மதிகா போன்ற சமூகங்களின் கதைகள்" இதில் வரையப்படுகின்றன.
முன்னதாக, இந்த ஓவியங்கள் ஆந்திரா முழுவதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக இருந்தன. செரியல் சுருள்கள் முந்தைய காலங்களில் தெலுங்காணா முழுவதும் பிரபலமாக இருந்திருக்க வேண்டும். இருப்பினும் தொலைக்காட்சி, திரைப்படங்கள் மற்றும் கணினிகளின் வருகையால் செரியால் நகரத்திலேயே சுருங்கிவிட்டது. [1]


இக்கலை ஒரிசாவின் பட்டாசித்திரத்தைப் போலவே அமைந்துள்ளது. மேலும், வாரங்கலின் செரியலில் பயிற்சி பெற்ற நகாஷி ஒரு தனித்துவமான கலை வடிவமாக உருவானது. இக்கலை வடிவம் மற்றும் நுட்பத்தில் மிகவும் பகட்டானதாக உள்ளது.
வடிவங்கள்
[தொகு]முன்பு நாகாஷி சுருள்கள் மற்றும் பொம்மைகள் கதை சொல்ல பயன்படுத்தப்பட்டது. கலைஞர்கள் அவற்றை உருவாக்கி கதைசொல்லிகளுக்கு வழங்குவார்கள். இப்போது அவை வீடுகளில் சுவர்களை அலங்கரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மேலும், முன்பெல்லாம் 60-70 அடி சுருள்கள் உருவாக்கப்பட்டது. தற்காலத்தில் இவ்வளவு பெரியவற்றைத் தொங்கவிட அதிக இடவசதி இல்லாததால், அளவு குறைக்கப்பட்டுள்ளது. எனவே, இப்போது சுருள்கள் முழு உரையை விட ஒரு குறிப்பிட்ட காவியம் அல்லது உரையிலிருந்து சில அத்தியாயங்களை சித்தரிக்கின்றன.[2]
நவீன காலம்
[தொகு]இன்று உள்ளூர் புராணங்களில் இருந்து எடுக்கப்படும் நீண்ட கதைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஏனெனில் நீண்ட சுருள்களுக்கான பாரம்பரிய புரவலர்கள் இல்லை. கலைஞர்கள் தங்கள் வடிவங்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இப்போதெல்லாம் அவர்கள் சுருள்களின் சிறிய பதிப்புகளை வரைகிறார்கள். பாரம்பரிய கதைகளில் இருந்து ஒரு அத்தியாயம் அல்லது பாத்திரத்தைமட்டுமே சித்தரிக்கின்றனர். இவை நவீன வீடுகளின் சுவர்களில் தொங்கவிடப்படலாம். மேலும், பாரம்பரிய முறையில் வண்ணங்கள் இப்போது தயாரிக்கப்படுவதில்லை. முன்னதாக, அவர்கள் கடல் ஓடுகளில் இருந்து எடுக்கப்பட்ட இயற்கையான வெள்ளையையும், விளக்கெண்ணெய்யிலிருந்து கருப்பு மற்றும் மஞ்சளிலிருந்து மஞ்சள் நிறத்தையும் பயன்படுத்தினர்.
அறிவுசார் சொத்து உரிமை
[தொகு]செரியால் சுருள் ஓவியங்கள் 2008 இல் அறிவுசார் சொத்து உரிமைகள் பாதுகாப்பு அல்லது புவியியல் குறியீட்டுத்[1] தகுதியைப் பெற்றது.
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Das, Arti. "Moving from scrolls to key chains, an art form from Telangana fights to stay relevant". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
- ↑ {{Cite web|url=https://https பரணிடப்பட்டது 2020-06-25 at the வந்தவழி இயந்திரம்https://web.archive.org/web/20110716165719/http://www.hinduonnet.com/thehindu/mp/2004/05/20/stories/2004052001190300.htm /
உசாத்துணை
[தொகு]- British Museum; Anna Libera Dallapiccola (2010). South Indian Paintings: A Catalogue of the British Museum Collection. Mapin Publishing Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7141-2424-7.
மேலும் படிக்க
[தொகு]- Kossak, Steven (1997). Indian court painting, 16th-19th century. New York: The Metropolitan Museum of Art. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0870997831. (see index: p. 148-152)