செரிமான நொதி

செரிமானத்தின் வேதியியல் செயல்பாட்டில் செரிமான நொதிகள் பங்கேற்கின்றன. உணவில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளின் பெரிய மூலக்கூறுகள் உள்ளன, அவை இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுவதற்கு முன்பு வாய், வயிறு, கணையம் மற்றும் சிறுகுடல் ஆகியவற்றில் உள்ள செரிமான நொதிகளால் வேதியியல் ரீதியாக உடைக்கப்பட வேண்டும்.[1] மெல்லுதல் (மெஸ்டிகேஷன்) மற்றும் உமிழ்நீரின் செரிமான நொதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் செரிமானம் தொடங்கப்படுகிறது. பிற்கு இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் உணவு கலக்கிறது. செரிமான இரைப்பை நொதிகள் உறிஞ்சுதலுக்குத் தேவையான சில இரசாயன செயல்முறைகளில் பங்கேற்கின்றன. எனவே உறிஞ்சுதல் சிறுகுடலில் நடைபெறுகிறது .[2][3]
செரிமான நொதிகள் விலங்குகளின் (மனிதர்கள் உட்பட) மற்றும் ஊன்உண்ணி தாவரங்களின் செரிமானப் பாதைகளில் காணப்படுகின்றன, அங்கு அவை உணவை ஜீரணிக்க உதவுகின்றன, அதே போல் உயிரணுக்களின் உட்புறத்தில், குறிப்பாக அவற்றின் லைசோசோம்களில், அவை செல்களின் உயிர்ப்புத்தன்மையை பராமரிக்கின்றன.[4][5]
வகைகள்
[தொகு]செரிமான நொதிகள் மனித இரையகக் குடற்பாதையின் பெரும்பகுதிகளில் காணப்படுகின்றன. மனித செரிமானத்தின் முக்கிய இடங்கள் வாய், வயிறு மற்றும் சிறுகுடல் ஆகும். உமிழ்நீர் சுரப்பிகள், இரைப்பை சுரப்பிகள் மற்றும் கணையத்தில் உள்ள சுரக்கும் செல்கள் மற்றும் சிறுகுடலில் உள்ள சுரப்பிகள் உள்ளிட்ட பல்வேறு நாளமுள்ள சுரப்பிகளால் செரிமான நொதிகள் சுரக்கப்படுகின்றன. பெருங்குடலில் மட்டும் எவ்வித செரிமான நொதிகளும் சுரப்பதில்லை. சில ஊனுண்ணித் தாவரங்களில் அவற்றுக்கே உரிய சிறப்பு செரிமான நொதிகள் அவற்றின் இரையை செரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
| செரிமான சுரப்பி | நொதிகள் | மூலக்கூறு | செரிமான விளைபொருள் |
|---|---|---|---|
| உமிழ்நீர் சுரப்பி | உமிழ்நீர் நொதி (அமைலேஸ்) டையலின் | ஸ்டார்ச் | மால்டோஸ் |
| இரைப்பைச்சுரப்பிகள் | பெப்சின் | புரதங்கள் | பெப்டோன்கள் |
| இரைப்பைச்சுரப்பிகள் | ரென்னின் | பால்புரதங்கள் (அல்லது) கேசினோஜென் | பாலை உறையச் செய்து கேசின் தயாரித்தல் |
| கணையம் | கணைய அமைலேஸ் | ஸ்டார்ச் | மால்டோஸ் |
| கணையம் | ட்ரிப்ஸின் | புரதங்கள், பெப்டோன்கள் | பெப்டைடுகள், அமினோ அமிலங்கள் |
| கணையம் | கைமோட்ரிப்ஸின் | புரதங்கள் | புரோட்டியோஸ்கள், பெப்டோன்கள், பாலிபெப்டைடுகள்,மூன்றுபெப்டைடுகள் இருபெப்டைடுகள், |
| கணையம் | கணைய லிபேஸ் | (பால்மமாக்கப்பட்ட) கொழுப்புகள் | கொழுப்பு அமிலங்கள், கிளிசரால் |
| சிறுகுடல் சுரப்பிகள் | மால்டேஸ் | மால்டோஸ் | குளுக்கோஸ் |
| சிறுகுடல் சுரப்பிகள் | லாக்டேஸ் | லாக்டோஸ் | குளுக்கோஸ், காலெக்டோஸ் |
| சிறுகுடல் சுரப்பிகள் | சுக்ரேஸ் | சுக்ரோஸ் | குளுக்கோஸ், பிரக்டோஸ் |
| சிறுகுடல் சுரப்பிகள் | லிப்பேஸ் | கொழுப்புகள் | கொழுப்பு அமிலங்கள், கிளிசரால் |
மருத்துவ முக்கியத்துவம்
[தொகு]ஆல்பா-குளுக்கோசிடேஸ் தடுப்பான்கள் மற்றும் ஆல்பா அமைலேஸ் தடுப்பான்கள் எனப்படும் நொதிகள் இலவங்கப்பட்டை போன்ற தாவரங்களில் காணப்படுகின்றன. இவை நீரிழிவு நோய்க்கு எதிர்ப்பு மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.[6][7]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Patricia, Justin J.; Dhamoon, Amit S. (2024). Physiology, Digestion. StatPearls Publishing. பப்மெட்:31334962. https://www.ncbi.nlm.nih.gov/books/NBK544242/.
- ↑ "22.10C: Digestive Processes of the Small Intestine". Medicine LibreTexts (in ஆங்கிலம்). 2018-07-22. Retrieved 2023-08-14.
- ↑ Heda, Rajiv; Toro, Fadi; Tombazzi, Claudio R. (2024). Physiology, Pepsin. StatPearls Publishing. பப்மெட்:30725690. https://pubmed.ncbi.nlm.nih.gov/30725690/.
- ↑ Freund, Matthias; Graus, Dorothea; Fleischmann, Andreas; Gilbert, Kadeem J; Lin, Qianshi; Renner, Tanya; Stigloher, Christian; Albert, Victor A et al. (2022-05-23). "The digestive systems of carnivorous plants". Plant Physiology 190 (1): 44–59. doi:10.1093/plphys/kiac232. பன்னாட்டுத் தர தொடர் எண்:0032-0889. பப்மெட்:35604105. பப்மெட் சென்ட்ரல்:9434158. http://dx.doi.org/10.1093/plphys/kiac232.
- ↑ "Enzymes: What Are Enzymes, Pancreas, Digestion & Liver Function". Cleveland Clinic (in ஆங்கிலம்). Retrieved 2023-08-14.
- ↑ Moreira, Fernanda Duarte; Reis, Caio Eduardo Gonçalves; Gallassi, Andrea Donatti; Moreira, Daniel Carneiro; Welker, Alexis Fonseca (2024-10-09). Dardari, Dured. ed. "Suppression of the postprandial hyperglycemia in patients with type 2 diabetes by a raw medicinal herb powder is weakened when consumed in ordinary hard gelatin capsules: A randomized crossover clinical trial" (in en). PLOS ONE 19 (10): e0311501. doi:10.1371/journal.pone.0311501. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. பப்மெட்:39383145.
- ↑ Hayward, Nicholas J.; McDougall, Gordon J.; Farag, Sara; Allwood, J. William; Austin, Ceri; Campbell, Fiona; Horgan, Graham; Ranawana, Viren (2019-08-01). "Cinnamon Shows Antidiabetic Properties that Are Species-Specific: Effects on Enzyme Activity Inhibition and Starch Digestion" (in en). Plant Foods for Human Nutrition 74 (4): 544–552. doi:10.1007/s11130-019-00760-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0921-9668. பப்மெட்:31372918.