செரின் ஷிருங்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செரின்
Sherin
பிறப்புசெரின் ஷிரிங்கார்
2 மே 1984 (1984-05-02) (அகவை 39)
இந்தியா, கர்நாடகம், பெங்களூர்
மற்ற பெயர்கள்Shririn, Shireen, Shirin
செயற்பாட்டுக்
காலம்
2002 - தற்போதுவரை
பெற்றோர்
  • அலி
  • யசோதா

செரின் ஷிரிங்கார் (Sherin Shringar) இவரது திரைப்பெயர் செரின் அல்லது ஷெரின் என்று அறியப்படுகிறது. இவர் வடிவழகியாக இருந்து பின்னர் நடிகையானவர். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் தனது 16 வயதில் தர்ஷன் என்ற படத்தில் 2002 இல் அறிமுகமானார். [1] [2] [3]

வாழ்கை[தொகு]

செரின் கருநாடகத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோருக்கு ஒரே மகளாக பெங்களூரில் பிறந்தார். இவர் தன் பள்ளிப்படிப்பை பெங்களூரில் உள்ள காவேரி பள்ளியில் மேற்கொண்டார். பின்னர் பால்ட்வின் மகளிர் மெதடிஸ்ட் கல்லூரியில் இணைந்து படித்தார். பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்டு தனது பதின்பருவத்தில் வடிவழகியாக பணிபுரியத் தொடங்கினார். இவரது 16 வயதில் இவருக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு, இந்தி, தமிழ் மலையாள திரைப்படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இவரது முதல் தமிழ் படமான துள்ளுவதோ இளமை மூலம் புகழ் பெற்றார். இதைத் தொடர்ந்து துள்ளூவதோ இளமை படத்தின் தெலுங்கு மறு ஆக்கமான ஜூனியர்ஸ் படத்தில் நடித்தார், ஆனால் இப்படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது. பின்னர், 2005 இல், கிருஷ்ண வம்சி இயக்கிய டேஞ்சர் படத்தில் நடித்தார்; அல்லரி நரேசுடன் இவர் நடித்த இரண்டு படங்களில் தற்செயலாக இந்தப் படம் பாராட்டுக்களைப் பெற்றது. பின்னர் இவர் சிபிராஜின் முதல் படமான ஸ்டூடண்ட் நம்பர்.1 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். விசில் படத்தில் நடித்ததற்காக செரின் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார். ஜெயராம், ஜோதிர்மாயி, வினீத் ஆகியோருடன் இணைந்து நடித்த மலையாள திரைப்படமான மூன்னமத்தோரலில் சமீபத்தில் [when?] தோன்றினார். உற்சாகம் படத்துக்காக நந்தாவுடன் இணைந்து நடித்தார். 29 ஏப்ரல் 2011 அன்று வெளியான பூவா தலையா படத்திலும் ஷெரின் நடித்தார்.[4] சிறிது கால இடைவெளிக்குப் பிறகு இவர் 2015 ஆம் ஆண்டில் நண்பேண்டா படத்தின் வழியாக மீண்டும் நடிக்க வந்தார். இப்படத்தில் இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ஒரு துணை வேடத்தில் நடித்தார்.[5] 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் அசல் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று முழு அளவிலான மறுபிரவேசம் செய்தார்.[6].

திரைப்பட வரலாறு[தொகு]

ஆண்டு திரைப்படம் பங்கு மொழி குறிப்புக்கள்
2002 துருவா கன்னடம்
துள்ளுவதோ இளமை பூஜா தமிழ்
ஜெயா பிரியா தமிழ்
2003 ஜூனியர்ஸ் பூஜா தெலுங்கு
ஸ்டூடண்ட் நம்பர் 1 அஞ்சலி தமிழ்
விசில் மாயா / நாக தமிழ்
கோவில்பட்டி வீரலட்சுமி சீதா தமிழ்
2005 டேஞ்சர் ராதிகா ரெட்டி தெலுங்கு
2006 மூனாமத்தூரில் ரீஹீல் மலையாளம்
2007 பூபதி இசிரி கன்னடம்
உற்சாகம் ஜென்சி தமிழ்
ஹரீந்திரன் ஒரு நிஷ்கலங்கன் பூஜா வாசுதேவன் மலையாளம்
2008 பீமா ரங்கம்மா தமிழ் சிறப்பு தோற்றம்
2010 ஷிங்களி ஜீவி கன்னடம்
பூவா தலையா தமிழ்
2012 ஏ.கே 56 கன்னடம்
2015 நண்பேன்டா பிரீத்தி தமிழ்

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு நிரல் / காட்சி பங்கு அலைவரிசை மொழி குறிப்புக்கள்
2019 பிக் பாஸ் தமிழ் 3 பங்கேற்பாளர் விஜய் தொலைக்காட்சி தமிழ் ரியாலிட்டி டிவி தொடர்

குறிப்புகள்[தொகு]

  1. Sherin Profile
  2. "Shedding the past: Interview with sherin". Archived from the original on 2011-06-06. பார்க்கப்பட்ட நாள் 2019-07-02.
  3. "Vibrant ... almost all the way - Urchaagam". Archived from the original on 2011-06-06. பார்க்கப்பட்ட நாள் 2019-07-02.
  4. "Poova Thalaiya Tamil movie review starring Sherin". Get Cinemas.
  5. https://www.onlykollywood.com/santhanam-romance-sherin-nanbenda/
  6. https://www.hindustantimes.com/tv/bigg-boss-tamil-3-with-kamal-haasan-launched-sri-lankan-model-malaysian-singer-and-13-others-enter-the-house/story-J0hCWDW0Vgfx0aaKXxzINI.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செரின்_ஷிருங்கார்&oldid=3555714" இலிருந்து மீள்விக்கப்பட்டது