உள்ளடக்கத்துக்குச் செல்

செரினியன் பெண்மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செரினியன் பெண்மான்
(செரினியன் பெண்மான்)
ஹெரக்கிள்ஸ் செரினியன் மானின் தங்க்க் கொம்புகளை உடைக்கிறார், அதே சமயத்தில் அதீனா (இடது) மற்றும் ஆர்ட்டெமிஸ் (கருப்பு-நிற அம்ப்போரா, கி.மு. 540-30)
குழுபழங்கதை உயிரினம்
தொன்மவியல்கிரேக்கத் தொன்மவியல்
நாடுகிரேக்கம்
பிரதேசம்கெரினியா, கிரேக்கம்

கிரேக்கத் தொன்மங்களில், குறிப்பிடப்படும் செரினியன் பெண்மான் (Ceryneian Hind, கிரேக்கம்: Κερυνῖτις ἔλαφος Kerynitis elaphos, லத்தீன்: Elaphus Ceryniti கள்), என்பது ஒரு தொன்மவியல் உயிரினமாகும். இது கிரேக்கத்தின், செரினியாவில் வாழ்ந்ததாக குறப்பட்டது. இது ஒரு பெரிய அளவிலான பெண் மானாகும். இது காளையை விட பெரியது. [1] தங்க கொம்புகளையுடையது, [2] இதன் கொம்புகள் கலைமனின் கொம்களை ஒத்தவை. [3] குளம்புகள் வெண்கலம் அல்லது பித்தளையால் ஆனவை. [4] இது மனிதர்களின் கண்ணுக்கு எளிதில் புலப்படாதாது. [5] மிக வேகமாக ஓடக்கூடியது. [6] இது ஆர்ட்டிமிஸ் என்ற தேவதையின் உடமையாகவும் இருந்தது. இதைப் பிடித்து வருவது ஹெராக்ளிசுக்கு வழங்கப்பட்ட மூன்றாவது வேலை ஆகும்.

இதற்கான பிற பெயர்களும் விளக்கங்களும்: தங்கக் கொம்புகள் கொண்ட கூடிய டோ, [7] கோல்டன்-ஹார்ன்ட் பெண் மான், [5] செரீனியா பெண் மான், [4] செரினிடியன் பெண் மான், [2] தங்க கொம்புள்ள மிருகம், [8] பர்ஹாசியன் ஹிண்ட், [9] மேனலஸின் வேகமான பெண் மான் [10] மற்றும் மேனலஸின் மிருகம். [11] பிரேசர் கூறுகையில், செரினைட்ஸ் நதியிலிருந்து இதற்கு பெயர் வந்தது, "இது ஆர்கேடியாவில் தோன்றி அக்கீயா வழியாக கடலுக்குள் பாய்கிறது".

ஒரு பாரம்பரியத்தின் படி, ஆர்ட்டெமிசு தேவதை ஐந்து செரீனிய பெண் மான்களின் வலிமைமிக்க மந்தையானது பர்ஹேசிய மலையின் அடிவாரத்தில் "கறுப்பு-கூழாங்கல் அனாரஸ்" கரையிலிருந்து வெகு தொலைவில் விளையாடுவதைக் கண்டார். [1] ஆர்ட்டெமிஸ் அவற்றின் பின்னங்கால்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார், அவற்றில் நான்கை தனது தங்கத் தேருக்கு பூட்டி, தங்கக் கடிவாளங்களை போட்டார். ஆனால் ஹெராக்கிள்ஸின் எதிர்கால வேலைக்காக என்று வேண்டுமென்றே ஒன்றை செரீனிய மலைக்கு தப்பிச்செல்ல அனுமதித்தார். இந்த மான் செரீனியாவில் இருந்தபோது, திராட்சைத் தோட்டங்களிலிருந்து விவசாயிகளைத் துரத்தியது. [3]

ஆர்ட்டெமிசால் செரினியன் பெண்மான் புனிதமானது. [4] "டெய்கீட் [என்னை] ஆர்ட்டெமிசுக்கு அர்ப்பணித்தார் 'என்று பெண்மான் கூறியதாக கல்வெட்டில் கூறப்படுகிறது." [2] இதன் புனிதத்தன்மை காரணமாக, ஹெராக்கிள்ஸ் இந்த பெண்மானுக்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை, எனவே ஓனோவிலிருந்து ஹைபர்போரியா வரை, [7] ஆர்ட்டெமிசியஸ் என்ற மலைவரை (ஆர்கோலிஸை மாண்டினியாவின் சமவெளியில் இருந்து பிரிக்கும் ஒரு மலை) கடைசியாக லாடன் நதிக்கு அருகில் இதைக் கைப்பற்றும் வரை. ஒரு ஆண்டுக்கும் மேலாக துரத்திச் சென்றார்.

யூராகிடிஸ் கூறுகையில், ஹெராக்கிள்ஸ் பெண்மானைக் கொன்று ஆர்ட்டெமிஸுக்குக் கொண்டு வந்தார். என்கிறார்.[5] மற்றொரு பாரம்பரிய கதையில், இது தூங்கும்போது வலைபோட்டு பிடித்தார் அல்லது அதை கீழே ஓட்டினார் என்று கூறப்படுகிறது. [6] மற்றொரு கூற்றில், அது லாடன் நதியைக் கடப்பதற்கு சற்று முன்பு அதை ஒரு அம்பால் வீழ்த்திக் கொன்றார் எனப்படுகிறது. [2] பிரிதொரு கூற்றின்படி ஹெராக்கிள்ஸ் மெல்லிய அம்பு ஒன்றை எடுத்து செலுத்தி, மானின் முன்கால்கள் இரண்டையும் தளை செய்தார். பின்னர் ஆர்ட்டெமிஸ் தேவதை மற்றும் அப்பல்லோவுக்கு ("மான் அந்த தெய்வங்களின் கோயிலில் தஞ்சமடைந்த நிலையில்" ) மானை பிடிக்க வந்த காரணம் குறித்து விளக்கமளித்து, மானுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தமாட்டேன் என்ற பின்னர் அதை யூரிஸ்டியசிடம் உயிரோடு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு எர்குலிஸ் மைசீனாவில், தனது மூன்றாவது பணியை நிறைவு செய்தார்.

ஒரு கொரிந்திய தலைக்கவசத்தில் (கிமு 5 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்) சித்தரிக்கப்பட்டுள்ளபடி, ஹெராக்கிள்ஸ் அப்பல்லோவிடம் பெண்மானுக்காக போராடுகிறார்.

கலை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. 1.0 1.1 "Hymn III (to Artemis). 98 ff.". Callimachus and Lycophron. London; New York: William Heinemann; G. R Putnam's Sons. 1921. pp. 69. ark:/13960/t7qn6bw6r.
 2. 2.0 2.1 2.2 2.3 "The Library 2. 5. 3-4". Apollodorus the Library. New York: G. P. Putnam's Sons. 1921. pp. 191 with the Scholiast. ark:/13960/t00012x9f.
 3. 3.0 3.1 "The Fall of Troy, Book VI. 223 ff.". Quintus Smyrnaeus The Fall Of Troy. London; Cambridge, Massachusetts: William Heinemann Ltd; Harvard University Press. 1984. p. 271. ark:/13960/t2m61f62d.
 4. 4.0 4.1 4.2 Smith, W., ed. (1870). Dictionary of Greek and Roman Biography And Mythology. Boston: Little, Brown, And Company. pp. 395. ark:/13960/t9f47mp93.
 5. 5.0 5.1 5.2 "Madness Of Hercules. 370 ff.". Euripides. London; New York: William Heinemann; G. P. Putnam's Sons. 1930. p. 157. ark:/13960/t6057th3x.
 6. 6.0 6.1 "Book 4. 13". Diodorus of Sicily. London; Cambridge, Massachusetts: William Heinemann Ltd; Harvard University Press. 1967. pp. 385. ark:/13960/t7qn6bw6r.
 7. 7.0 7.1 "Olympian Odes III 28-42. 28 ff.". The Odes of Pindar. London; New York: William Heinemann; The Macmillan Co. 1915. pp. 37 with the Scholiast. ark:/13960/t02z1h76p.
 8. "Hercules Oetaeus 1237 ff". Seneca's Tragedies. London; New York: William Heinemann; G. P. Putnam's Sons. 1929. p. 285. ark:/13960/t7fr0065f.
 9. "Agamemnon 829 ff". Seneca's Tragedies. London; New York: William Heinemann; G. P. Putnam's Sons. 1929. p. 69. ark:/13960/t7fr0065f.
 10. "Hercules Furens 222 ff". Seneca's Tragedies. London; Cambridge, Massachusetts: William Heinemann Ltd; Harvard University Press. 1938. p. 21. ark:/13960/t71v5s15x.
 11. "Hercules Oetaeus 17 ff". Seneca's Tragedies. London; New York: William Heinemann; G. P. Putnam's Sons. 1939. p. 187. ark:/13960/t7fr0065f.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரினியன்_பெண்மான்&oldid=3780354" இலிருந்து மீள்விக்கப்பட்டது