செரிங் வூசர்
செரிங் வூசர் | |
---|---|
2009 மார்ச் 26இல் செரிங் வூசர் | |
பிறப்பு | 1966 லாசா மாவட்டம் |
தொழில் | எழுத்தாளர் |
மொழி | சீனர், திபெத்தியர் |
தேசியம் | சீனக் குடியரசு
|
கல்வி நிலையம் | தேசியங்களுக்கான தென்மேற்கு பல்கலைக்கழகம் |
வகை | சிறுகதை, கவிதை, கட்டுரைகள் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | நோட்ஸ் ஆன் திபெத் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | பிரின்ஸ் கிளாஸ் விருது; சர்வதேச வீரதீரப் பெண்மணி விருது |
துணைவர் | வாங் லியோங் |
செரிங் வூசர் (Tsering Woeser, பிறப்பு:1966) இவர் ஓர் திபெத்திய எழுத்தாளரும், சமூக ஆர்வலரும், வலைப்பதிவில் எழுதுபவரும், கவிஞரும், கட்டுரையாளருமாவார்.
சுயசரிதை
[தொகு]கால் பகுதி ஆன் சீனரும் முக்கால்வாசி திபெத்தியருமான இவர் லாசாவில் பிறந்தார். இவரது தாத்தா, சீன, தேசியவாத இராணுவத்தில் குவோமின்டாங் அதிகாரியாக இருந்தார். இவரது தந்தை மக்கள் விடுதலை இராணுவத்தில் உயர் பதவியில் இருந்த இராணுவ அதிகாரியாவார். இவர் மிகவும் இளமையாக இருந்தபோது, இவரது குடும்பம் மேற்கு சிச்சுவான் மாகாணத்தின் காம் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. 1988 ஆம் ஆண்டில், செங்டூவில் உள்ள தேசியத்திற்கான தென்மேற்கு பல்கலைக்கழகத்தில் சீன இலக்கியத்தில் பட்டம் பெற்றார். இவர் கார்ட்சோவிலும் பின்னர் லாசாவிலும் ஒரு நிருபராக பணிபுரிந்தார். அரசியல் பிரச்சினைகளின் விளைவாக 2003 முதல் பெய்ஜிங்கில் வசித்து வருகிறார். இவர் திபெத்தைப் பற்றி அடிக்கடி எழுதும் புகழ்பெற்ற எழுத்தாளர் வாங் லியோங் என்பவரை மணந்தார். எல்லைகளற்ற செய்தியாளர்களின் கூற்றுப்படி, "சீன மொழியில் எழுதும் சில திபெத்திய எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களில் இவரும் ஒருவர்." [1] இவருக்கு கடவுச் சீட்டு கொடுக்க அரசாங்கம் மறுத்தபோது, இவர் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்ந்தார்.[2]
தொழில்
[தொகு]இவர், நோட்ஸ் ஆன் திபெத் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். செப்டம்பர் 2003 இல் இந்த புத்தகம் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டதாக பெயரிடப்படாத ஆதாரங்களை திபெத் தகவல் வலையமைப்பு மேற்கோளிட்டுள்ளது.[3]
பிரதிநிதித்துவமற்ற நாடுகள் மற்றும் மக்கள் அமைப்பு என்ற நிறுவனத்தின்படி தடை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட சிறிது காலத்திலேயே இவர் தனது வேலையிலிருந்து நீக்கப்பட்டார். மேலும், இவரது தனது பணியையும் இழந்தார்.[4] ரேடியோ ஃப்ரீ ஆசியா என்ற வானொலி இவரது இரண்டு வலைப்பதிவுகளில் பலவிதமான கவிதைளையும், கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டுள்ளதாக அறிவித்தது: மெரூன் மேப் (oser.tibetcul.net), இது ஆசிரியரின் கூற்றுப்படி, முதன்மையாக திபெத்தியர்களால் பார்வையிடப்பட்டது. வூசரின் வலைப்பதிவு (blog.daqi.com/weise), இது முதன்மையாக ஆன் இனத்தைச் சேர்ந்தவர்களால் பார்வையிட்டது. ஆர்.எஃப்.ஏ தரவுகளின்படி, 2006 சூலை 28 அன்று, இரு வலைப்பதிவுகளும் அரசாங்கத்தின் உத்தரவின்படி மூடப்பட்டன. வெளிப்படையாக இவர் தலாய் லாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, பிற முக்கிய தலைப்புகளையும் எழுதினார். இவர் எழுதுவதிலும், பேசுவதிலும் தான் தொடர்ந்து ஈடுபடப்போவதாக கூறினார்.[5]
2008 ஆம் ஆண்டு திபெத்திய அமைதியின்மையின் போது, இவரும் இவரது கணவரும் செய்தியாளர்களிடம் பேசிய பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் உரிமைச் சாசனம் 08 என்பதில் அசல் கையொப்பமிட்ட 303 நபர்களில் முதன்மையானவர்களாவர்.[6] இப்போது இதில் ஆயிரக்கணக்கானோர் இணைந்துள்ளனர்.[7] சாசனம் 08 இன் ஆசிரியரான லியு சியாபோவுக்கு பதினொரு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், இவருக்கு மேலும், 2010 அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது .[8] 2009 சூலையில் இவரும், இவரது கணவரும் 100 க்கும் மேற்பட்ட கையெழுத்திட்டவர்களில் ஒருவராக இருந்தனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள இன- உய்குர் பொருளாதார பேராசிரியர் இல்ஹாம் தோஹ்தியை விடுவிக்குமாறு சீன அதிகாரிகளை கேட்டு ஒரு மனுவில் கையெழுத்திட்டனர். 2011 இல் பிரின்ஸ் கிளாஸ் விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டபோது, இடாய்ச்சு தூதரகத்தில் பரிசு பெற இவர் தடைசெய்யப்பட்டார்.[9]
1905 திபெத்திய கிளர்ச்சியில் திபெத்திய நடவடிக்கைகளை இவர் ஆதரித்தார். சாவோ செய்த கொடுமைகளை பட்டியலிட்டு, "திபெத்திய ஆர்ப்பாட்டங்களை மிருகத்தனமாக நிறுத்த சாவோ எர்பெங் இப்பகுதியை ஆக்கிரமித்தார் என்று கூறினார்.[10]
விருதுகள்
[தொகு]- 2007 ஆம் ஆண்டில், இவருக்கு நோர்வே ஆசிரியர்கள் சங்க விருது வழங்கப்பட்டது.[11]
- 2007 ஆம் ஆண்டில், திபெத்திய ஊடகவியலாளர்கள் சங்கத்தால் இவருக்கு பேச்சு சுதந்திர பதக்கமும் வழங்கப்பட்டது.[12]
- 2010 ஆம் ஆண்டில், சர்வதேச மகளிர் ஊடக அறக்கட்டளை இவருக்கு இதழியலில் தைரியம் என்ற விருதினை வழங்கியது.[13][14]
- 2011 இல், பிரின்ஸ் கிளாஸ் விருது வழங்கப்பட்டது.
- 2013 ஆம் ஆண்டில், இவருக்கு சர்வதேச வீரதீர பெண்கள் விருது வழங்கப்பட்டது [15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Reporters sans frontières - China". En.rsf.org. Archived from the original on 2013-12-19. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.
- ↑ Tibetan writer, a rare outspoken voice against Beijing's policies, sues Chinese government Herald Tribune July 23, 2008 p. 1 (iht.com)
- ↑ "TAR Authorities Ban Book by Tibetan Author (TIN)". Tibet.ca. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.
- ↑ "Tibet: China persecuting Tibetan Writer for Pro-Dalai Lama Opinion". Unpo.org. 2004-10-28. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.
- ↑ "Banned, Blocked Tibetan Writer Vows to Speak Out in China". RFA. Archived from the original on 2008-07-06. பார்க்கப்பட்ட நாள் 2020-11-01.
- ↑ "Charter 08". High Peaks Pure Earth. 12 December 2008. Archived from the original on 5 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2020.
- ↑ "Charter 08 Signers urged to join Liu Xiaobo's Trial". phayul.com. 19 December 2009. Archived from the original on 26 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "'Liu Xiaobo must be freed' - Nobel prize committee". BBC. 10 October 2010. பார்க்கப்பட்ட நாள் January 3, 2013.
- ↑ Tsering Woeser - Writer/Blogger - Lhasa, China பரணிடப்பட்டது 2012-03-03 at the வந்தவழி இயந்திரம் Prince Claus Awards 2011 (princeclausfund.org) Retrieved January 3, 2013
- ↑ Woeser (September 15, 2011). "The Hero Propagated by Nationalists". High Peaks Pure Earth. High Peaks Pure Earth has translated a blogpost by Woeser written in July 2011 for the Tibetan service of Radio Free Asia and posted on her blog on August 4, 2011. Radio Free Asia. பார்க்கப்பட்ட நாள் 24 April 2014.
- ↑ "Norwegian Authors Union awards Freedom of Expression Prize 2007 to Tsering Woeser". www.phayul.com. Archived from the original on 2017-02-26. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.
- ↑ Tibetan journalists’ body honours Woeser on its 10th Anniversary பரணிடப்பட்டது 2017-02-26 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "Tibetan writer Woeser wins 'Courage in Journalism award'". Phayul.com. Archived from the original on 2017-02-26. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.
- ↑ "Press release". Archived from the original on 2010-05-27. பார்க்கப்பட்ட நாள் 2020-11-01.
- ↑ "International Women of Courage Award". Voatibetanenglish.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.
வெளி இணைப்புகள்
[தொகு]- டுவிட்டரில் འོད་ཟེར།唯色Woeser
- "They Have Guns, and I, a Pen": Highly Valuable New Source on the Tibetan Rebellion
- Woeser's blog
- High Peaks Pure Earth, English translations of writings by Woeser பரணிடப்பட்டது 2017-03-13 at the வந்தவழி இயந்திரம்
- Introduction to Woeser, See "Secret Tibet" on this web page, from the website Tibet Writes
- An Eye from History and Reality — Woeser and the Story of Tibet
- An Analysis of the Woeser Incident பரணிடப்பட்டது 2005-03-30 at the வந்தவழி இயந்திரம் by Wang Lixiong
- Article from Woeser பரணிடப்பட்டது 2017-01-22 at the வந்தவழி இயந்திரம் about the film Dreaming Lhasa
- Lone Tibetan Voice, Intent on Speaking Out பரணிடப்பட்டது 2017-02-26 at the வந்தவழி இயந்திரம்