உள்ளடக்கத்துக்குச் செல்

செரிங் இலாண்டோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செரிங் இலாண்டோல்
2006-இல் இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மசிறீ விருது பெற்றபோது
பிறப்புஇலடாக்கு, ஜம்மு காஷ்மீர் இராச்சியம், இந்தியா
பணிமகப்பேறு மருத்துவர்
வாழ்க்கைத்
துணை
முதிர்கன்னி
பிள்ளைகள்-
விருதுகள்பத்மசிறீ, பத்ம பூசண்

செரிங் இலாண்டோல் (Tsering Landol) என்பவர் இந்திய மகளிர் மருத்துவ நிபுணர் மற்றும் இந்தியாவின் இலடாக்கு ஒன்றிய பிரதேசத்தில் மகளிர் நல முன்னோடிகளில் ஒருவர்.[1] இவர் லேயில் உள்ள சோனம் நோர்பூ நினைவு அரசு மருத்துவமனையில் பணியாற்றினார்.[2] மேலும் பிற மருத்துவக் கல்வி நிறுவனங்களுடனும் தொடர்புடையவர்.[3]

விருது

[தொகு]

மருத்துவத்துறையில்[4] இவருடைய பங்களிப்புகளுக்காக இந்திய அரசாங்கம் 2006-இல் பத்மசிறீ மற்றும் 2020-இல் பத்ம பூசண் விருதை இவருக்கு வழங்கியது.[5] இந்தக் கௌரவத்தைப் பெற்ற முதல் இலடாக்கு பெண் மருத்துவர் இவராவார்.[6] 'வால் ஆப் பேமில்' இவர் இடம்பெற்றுள்ளார். இது இவரின் வாழ்க்கை அல்லது இருப்பு முழுவதும் சிறந்து விளங்கியவர்கள் பெருமை மற்றும் மகத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகும். சிறந்த சாதனைகளை அடைந்த மற்றும்/அல்லது சமூகத்திற்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்த தனிநபர்கள் மற்றும் குழுக்களை இச்சுவர் அங்கீகரிக்கிறது.[7] புகழ்பெற்ற இலடாக்கு நாட்டுப்புற இசைக்கலைஞரான மோருப் நம்கியாலின் வாழ்க்கை குறித்த ஆவணப்படமான தி சாங் கலெக்டரில் லாண்டோல் இடம்பெற்றுள்ளது.[8] 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூசண் இவருக்கு வழங்கப்பட்டது.[9][10]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Real Heroes". the HELP inc Fund. 2015. Archived from the original on 25 ஏப்ரல் 2018. Retrieved 11 December 2015.
  2. "Meet Ladakh's first gynaecologist". 3 February 2020. https://www.thehindu.com/sci-tech/health/meet-ladakhs-first-gynaecologist-dr-tsering-landol/article30724930.ece. 
  3. "List of participants". Chulalongkorn University. 2015. Archived from the original on 22 டிசம்பர் 2015. Retrieved 11 December 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Retrieved 21 July 2015.
  5. "NAMES OF PADMA AWARDEES OF JAMMU AND KASHMIR STATE" (PDF). Government of Jammu and Kashmir. 2015. Retrieved 11 December 2015.
  6. "35 decorated with Padma awards so far". The Tribune. 2 February 2006. Retrieved 11 December 2015.
  7. "Wall of Fame". Proud Ladakh (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-01-19. Retrieved 2019-01-19.
  8. "THE SONG COLLECTOR". thesongcollector.com. 2015. Retrieved 11 December 2015.
  9. "Padma Awards 2020 Conferred To 13 Unsung Heroes Of Medicine". Medical Dialogues. 2020. Retrieved 27 January 2020.
  10. "Full list of 2020 Padma awardees". 2020-01-26. https://www.thehindu.com/news/national/full-list-of-2020-padma-awardees/article30656841.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரிங்_இலாண்டோல்&oldid=4386466" இலிருந்து மீள்விக்கப்பட்டது