செராஸ் நெடுஞ்சாலை
| செராஸ் நெடுஞ்சாலை | |
|---|---|
| Cheras Highway Lebuhraya Cheras | |
| வழித்தடத் தகவல்கள் | |
| பயன்பாட்டு காலம்: | கட்டுமான தொடக்கம்: 1988 – |
| வரலாறு: | கட்டுமான நிறைவு: 1991 |
| முக்கிய சந்திப்புகள் | |
| வடக்கு முடிவு: | எடின்பர்க் சுற்று, கோலாலம்பூர் |
| கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 1
| |
| தெற்கு முடிவு: | பிளாசா பீனிக்சு, செராஸ் |
| அமைவிடம் | |
| முதன்மை இலக்குகள்: | புடு; சுங்கை பீசி; பண்டார் துன் ரசாக்; செராஸ்; காஜாங்; சிரம்பான் |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
செராஸ் நெடுஞ்சாலை அல்லது செராஸ் சாலை–லோக் இயூ சாலை எனும்
மலேசிய கூட்டரசு சாலை 1; (ஆங்கிலம்; Cheras Highway, Federal Route 1 அல்லது Cheras Road–Loke Yew Road; மலாய்: Lebuhraya Cheras, Laluan Persekutuan 1; Jalan Cheras–Jalan Loke Yew) என்பது மலேசியா, கோலாலம்பூர் தென்கிழக்கு பகுதியில் ஒரு முதனமை நெடுஞ்சாலையாகும்.[1] இது கோலாலம்பூரின் செராஸ் வழியாகச் செல்லும் முக்கியமான சாலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நெடுஞ்சாலை கோலாலம்பூர் மாநகராட்சியால் (DBKL) பராமரிக்கப்படுகிறது.
முன்பு காலத்தில் அங்கிருந்த செராஸ் கிராமத்திலிருந்து செராஸ் சாலை அதன் பெயரைப் பெற்றது. செராஸ் எனும் சொல் மலாய் சொல்லான தெராஸ் (Teras) எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டதாக அறியப்படுகிறது. தெராஸ் என்பது ஒரு மரத்தின் மையப் பகுதியைக் குறிப்பிடுவதாகும்.[2]
வரலாறு
[தொகு]இந்த நெடுஞ்சாலை 1988-ஆம் ஆண்டு மெட்ராமாக் கார்ப்பரேசன் (Metramac Corporation) நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டது. செராஸ் சாலை சுங்கச்சாவடி 1990 செப்டம்பர் 1 முதல் செயல்படத் தொடங்கியது. ஓராண்டு கழித்து சுங்கச்சாவடியின் செயல்பாடுகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டன. இருப்பினும் 1991 செப்டம்பர் 15 அன்று மீண்டும் செயல்படத் தொடங்கியது.
அதன் பின்னர், சுங்கச்சாவடிக் கட்டணம் வழக்கமான மலேசிய ரிங்கிட் RM 1-இல் இருந்து 50 விழுக்காடு குறைக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல்கள்; மற்றும் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற பல முறையீடுகளுக்குப் பிறகு, 14 செப்டம்பர் 2003-இல் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பது ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் சூலை 17, 2017-இல் சுங்கச்சாவடி வளாகத்தில் KG24 CC22 தாமான் மிடா எம்ஆர்டி நிலையம் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த நெடுஞ்சாலை கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது.
மாநகராட்சியின் திட்டங்கள்
[தொகு]செராஸ் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக, கோலாலம்பூர் மாநகராட்சி இரண்டு திட்டங்களை முன்னெடுத்தது. செராஸ்–காஜாங் விரைவுச்சாலையிலிருந்து தாமான் கோனாட் (Taman Connaught) வரையிலான ஒரு சுரங்கப்பாதை கட்டுவது; மற்றும் தாமான் லென் செங் (Taman Len Seng); ஆலாம் டாமாய் (Alam Damai) வரையிலான மேம்பாலங்கள் கட்டுவது; அந்த இரண்டு திட்டங்கள் ஆகும். சுரங்கப்பாதை ஏப்ரல் 14, 2008 அன்று திறக்கப்பட்டது.
மற்ற திட்டங்களில், புலாத்தான் செராஸ்–பண்டார் துன் ரசாக் வட்டச்சுற்று (Bulatan Cheras–Bandar Tun Razak) கீழ்ப்பாதை கட்டுவது; செராஸ் நெடுஞ்சாலையின் பழைய செராஸ் கூட்டரசு சாலையை மேம்படுத்துவது; மற்றும் 2010-ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட தெந்தராம் சாலை (Jalan Tenteram) ஆகியவை அந்தத் திட்டங்களில் அடங்கும். செராஸ் நெடுஞ்சாலையின் பெரும்பகுதியில் 9 சுங்கை பூலோ-காஜாங் எம்ஆர்டி வழித்தடம் இணைந்து செல்கிறது.
மேலும் காண்க
[தொகு]- செராஸ்
- செராஸ் மக்களவைத் தொகுதி
- செராஸ்–காஜாங் விரைவுச்சாலை
- செராஸ் எல்ஆர்டி நிலையம்
- பத்து 11 செராஸ் எம்ஆர்டி நிலையம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Grand Saga Expressway, Cheras-Kajang Expressway (E7)". klia2.info. 2017-10-21. Retrieved 2025-07-27.
- ↑ "Jalan Cheras got its name from the village of Cheras, which is believed to have gotten its name from the Malay word teras, meaning the core of the tree". Penang Travel Tips (in ஆங்கிலம்). Retrieved 3 October 2025.
