செராஸ்–காஜாங் விரைவுச்சாலை
| Expressway 7 | |
|---|---|
| செராஸ்–காஜாங் விரைவுச்சாலை Cheras–Kajang Expressway Lebuhraya Cheras–Kajang | |
செராஸ் பத்து 9 சுங்கச் சாவடி | |
| வழித்தடத் தகவல்கள் | |
| பராமரிப்பு : கிராண்ட் சாகா நிறுவனம் | |
| நீளம்: | 11.5 km (7.1 mi) |
| பயன்பாட்டு காலம்: | தொடக்கம்: 1998 – |
| வரலாறு: | நிறைவு: 1999 |
| முக்கிய சந்திப்புகள் | |
| வடக்கு முடிவு: | |
|
| |
| தெற்கு முடிவு: | காஜாங் புறவழிச்சாலை - காஜாங், சிலாங்கூர் |
| அமைவிடம் | |
| முதன்மை இலக்குகள்: | கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயா, செராஸ், காஜாங், செமினி, சிரம்பான் |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
செராஸ்–காஜாங் விரைவுச்சாலை (மலாய்; Lebuhraya Cheras–Kajang; ஆங்கிலம்: Cheras–Kajang Expressway; சீனம்: 蕉赖—加影大道 என்பது தீபகற்ப மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் 11.5 கிலோமீட்டர் (7.1 மைல்) கட்டுப்படுத்தப்பட்ட விரைவுச்சாலையாகும். இந்த விரைவுச்சாலை கோலாலம்பூர்–சிலாங்கூர் எல்லையில் உள்ள செராஸ் புறநகர்ப் பகுதிக்கும் சிலாங்கூரில் உள்ள காஜாங் நகருக்கும் இடையில் செல்கிறது.
இந்த விரைவுச்சாலை, காஜாங் மற்றும் செராஸ் நகரங்களுக்கு இடையிலான ஒரு பெரிய சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும். விரைவுச்சாலையின் கட்டுமானம் 1998-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முடிவடைந்தது. RM 275 மில்லியன் செலவில் கட்டப்பட்ட இந்த விரைவுச்சாலை 15 சனவரி 1999 அன்று செயல்படத் தொடங்கியது.[1]
பொது
[தொகு]மலேசியாவின் முதல் எட்டு வழி இரட்டைச் சாலைகளில் செராஸ்-காஜாங் விரைவுச்சாலை ஒன்றாகும். இந்த விரைவுச் சாலையில் ஓர் ஓய்வுப் பகுதி; ஒரு சேவைப் பகுதி; மற்றும் ஒன்பது சந்திப்புப் பகுதிகள் உள்ளன. இணைக்கப்பட்ட பகுதிகளின் போக்குவரத்தில், இந்த விரைவுச் சாலை கணிசமான அளவிற்குப் போக்குவரத்தைப் பெற்றுள்ளது.[2]
சுங்கக் கட்டணங்கள்
[தொகு]பத்து 9 மற்றும் பத்து 11 சுங்கச் சாவடிகளில், விரைவான பரிவர்த்தனையை எளிதாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, சனவரி 13, 2016 முதல், செராஸ்-காஜாங் விரைவுச் சாலையில் உள்ள இரண்டு சுங்கச் சாவடிகளின் அனைத்து பரிவர்த்தனைகளும் தொட்டு செல் அட்டைகள் அல்லது திறன் அட்டைகள் (SmartTAG) எனும் மின்னணு முறையில் நடத்தப்படுகின்றன.[1]
(அக்டோபர் 15, 2015 முதல்)
| பிரிவு | வாகனங்களின் வகை | கட்டணம் (மலேசிய ரிங்கிட் (RM)) | ||
|---|---|---|---|---|
| பத்து 9 | பத்து 11 | |||
| 0 | விசையுந்துகள் | இலவசம் | ||
| 1 | தனியார் ஊர்திகள் (2 அச்சுகள் மற்றும் 3 அல்லது 4 சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் (வாடகை உந்து மற்றும் பேருந்து தவிர) |
1.30 | ||
| 2 | கூடு உந்துகள் மற்றும் பிற சிறிய சரக்கு வாகனங்கள் (2 அச்சுகள் மற்றும் 6 சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் (பேருந்து தவிர)) |
2.60 | ||
| 3 | பெரிய சுமையுந்துகள் (3 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகளைக் கொண்ட வாகனங்கள் (பேருந்து தவிர)) | |||
| 4 | வாடகை உந்துகள் | 0.70 | ||
| 5 | பேருந்துகள் | 1.00 | 0.90 | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 admin (2017-10-21). "Grand Saga Expressway, Cheras-Kajang Expressway (E7)". klia2.info (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-06-02.
- ↑ "Lebuhraya Cheras-Kajang E7" (in மலாய்). Blog Jalan Raya Malaysia. 23 November 2011. Retrieved 24 November 2011.
