உள்ளடக்கத்துக்குச் செல்

செரார்டு தெபர்டியு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செரார்டு தெபர்டியு
தெபர்டியு 2015 கேன்ஸ் பட விழாவில்
பிறப்புசெரார்டு சேவியர் மார்சல் தெபர்டியு
27 திசம்பர் 1948 (1948-12-27) (அகவை 75)
சதியுரக்ஸ், இந்த்ரே, பிரான்ஸ்
குடியுரிமைபிரான்ஸ் மற்றும் உருசியா
பணிநடிகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1964–தற்போது வரை
துணைவர்கரோல் பக்குவத் (c. 1997; செப். 2005)
கிளமென்டின் இகு(c. 2005)
வாழ்க்கைத்
துணை
எலிசபெத் தெபர்டியு (தி. 1971⁠–⁠1996)
பிள்ளைகள்கில்லமே தெபர்டியு (இறப்பு), சூலி தெபர்டியு, ரோசான, சீன்

செரார்டு சேவியர் மார்சல் தெபர்டியு (Gérard Xavier Marcel Depardieu (பிரெஞ்சு மொழி: [ʒeʁaʁ dəpaʁdjø] (கேட்க);

(பிறப்பு 27 திசம்பர் 1948),[1] என்பவர் பிரெஞ்சு நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொழில் முனைவோர் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டு முதல் சுமார் 170 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1980 ஆம் ஆண்டில் இவர் தி லாஸ்ட் மெட்ரோ எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பிற்கு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தன. மேலும் சிறந்த நடிகருக்கான சீசர் விருதும் கிடைத்தது.

1985 இல் போலீஸ் எனும் திரைப்படத்தில் நடித்ததற்காக வெனிசு திரைப்படத் திருவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார். சீன் தி புலோரெட் (1986) மற்றும் சைரனோ தி பெர்கெராக் (1990), ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக கான் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார். மேலும் இரண்டாவது முறையாக சீஸர் விருதும் , அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

இவர் பீட்டர் வெயிருடன் 1990 ஆம் ஆண்டில் கிரீன் கார்டு [2] எனும் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்ததற்காக கோல்டன் குளோப் விருது பெற்றார். அதன் பிறகு பல பெரிய நிதித் தயாரிப்பு உள்ள ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ரிட்லி ஸ்காட்டின் 1492:கான்குவெஸ்ட் ஆப் பேரடைஸ் (1992), கென்னத் பிரனக்கின் ஹேம்லெட் (1996),[3] ராண்டல் வாலசின் தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க் (1998) மற்றும் ஆங் லீயின் பையின் வரலாறு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இவர் செவாலியே விருது பெற்றுள்ளார். இவர் உருசியா நாட்டின் குடியுரிமையை ஜனவரி, 2013 இல் பெற்றார். பின் 2013 , ஜனவரியில் மொண்டெனேகுரோவின் பண்பாட்டுத் தூதரானார். நகைச்சுவைத் திரைப்படமான ஆஸ்டிரிக்ஸ் படங்களில் ஓபிலிக்ஸாக நடித்துள்ளார்.[4]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

செரார்டு தெபர்டியு பிரான்ஸ் நாட்டில் உள்ள இன்ட்ரே, சாட்டௌரொக்கில் டிசம்பர் 27, 1948 இல் பிறந்தார். இவரின் தந்தை ரெனே மேக்ஸைம் லியோனல் டிபர்டியு, தாய் அன் ஜெனெ ஜோசப் (நெய் மார்லியர்). இவரின் தந்தை ஒரு உலோகத் தொழிலாளி மற்றும் தன்னார்வத் தீயணைப்பாளர் ஆவார்.[5][6] இவர்களுக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள் பிறந்தனர். தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்தவுடன் பதிப்பகத்தில் பணிபுரிந்தார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]
தெபர்டியு 2015 ஆம் ஆண்டின் கான் திரைப்பட விழா

செரார்டு தெபர்டியுவின் பதினாறாவது வயதில் பாரிஸ் நகரம் சென்றார். அங்கு கபே டி லா கர் எனும் புதிய நகைச்சுவைத் திரையரங்க நிறுவனத்தில் சேர்ந்து பாட்ரிக் டெவேரே, ரொமேன் பாட்டேய், சோதா, கோலூச், மற்றும் மியூ-மியோ ஆகியோருடன் இணைந்து நடித்தார்.[7] பின் ஜீன்-லாரென்ட் கோஷெட் என்பவரிடம் நடனம் பயின்றார். 1974 ஆம் ஆண்டில் பெர்ட்ரண்ட் பிளியர்சின் இயக்கத்தில் லெஸ் வால்செஸஸ் எனும் திரைப்படத்தில் ஜீன் கிளாட் எனும் கதாப்பத்திரத்தில் நடித்தார்.[8] இவரின் திரை வாழ்க்கையில் இது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 1976 ஆம் ஆண்டில் பெர்னார்டோ பெர்டோலூச்சியின் இயக்கத்தில் வரலாற்றுத் திரைப்படமான 1900 எனும் திரைப்படத்தில் ரொபேர்ட் டி நீரோவுடன் இணைந்து நடித்துள்ளார்.[9] பின் 1980 இல் தெ லாஸ்ட் மெட்ரோ எனும் திரைப்படத்தில் நடித்தார்.[10] இந்தத் திரைப்படத்திற்காக முதல்முறையாக சிறந்த நடிகருக்கான சீஸர் விருதினைப் பெற்றார்.

1986 இல் ஜேன் தெ ஃபுளோரட் எனும் திரைப்படத்தில் நடித்ததில் இருந்து சர்வதேச அளவில் பிரபலமடைந்தார்.[11] 1990 இல் இவர் நடித்த சைனாரோ டிபெர்கராக் எனும் திரைப்படத்திற்காக பலரின் பாராட்டினைப் பெற்றார்.[12] மேலும் இரண்டாவது முறையாக சீஸர் விருது சிறந்த நடிகருக்கான விருதினை கான் திரைப்பட விழாவில் பெற்றார். மேலும் சிறந்த நடிகருக்கான அகாதமி விருதிற்கும் இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

1990 இல் பீட்டர் வீர் இயக்கிய ஆங்கில காதற், நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார். இதில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது பெற்றார். இதன் பிறகு சில ஆங்கிலத் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 1992 இல் ரிட்லி ஸ்காட் இயக்கிய 1492: கான்குவெஸ்ட் ஆப் பேரடைஸ் , 1996 இல் கென்னத் பிராணஸ் இயக்கிய ஹேம்லெட் மற்றும் 2012 இல் வெளியான ஆங் லீ இயக்கிய லைஃப் ஆஃப் பை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விருதுகள்

[தொகு]
  • 1980 சிறந்த நடிகருக்கான சீசர் விருது (தி லாஸ்ட் மெட்ரோ ).
  • 1985 இல் போலீஸ் எனும் திரைப்படத்தில் நடித்ததற்காக வெனிசு திரைப்படத் திருவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார்
  • 1985 செவாலியே விருது பெற்றுள்ளார்.
  • 1986 ஜேன் தெ ஃபுளோரட் எனும் திரைப்படத்திற்காக இரண்டாவது முறையாக சீஸர் விருது. மேலும் சிறந்த நடிகருக்கான அகாதமி விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

சான்றுகள்

[தொகு]
  1. "Gérard Depardieu", IMDb, பார்க்கப்பட்ட நாள் 2018-04-19
  2. Weir, Peter (1991-02-01), Green Card, Gérard Depardieu, Andie MacDowell, Bebe Neuwirth, பார்க்கப்பட்ட நாள் 2018-04-19
  3. Branagh, Kenneth (1996-12-25), Hamlet, Kenneth Branagh, Julie Christie, Derek Jacobi, பார்க்கப்பட்ட நாள் 2018-04-19
  4. Lichfield, John (10 February 2003). "This Europe: Confessions of Depardieu". The Independent (UK) இம் மூலத்தில் இருந்து 17 January 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090117012434/http://www.independent.co.uk/news/europe/this-europe-confessions-of-depardieu-597202.html. பார்த்த நாள்: 26 February 2010. 
  5. "Gerard Depardieu Biography (1948–)". Filmreference.com. பார்க்கப்பட்ட நாள் 26 February 2010.
  6. "Les ancêtres de Gérard Depardieu (1948)" (PDF). Archived from the original (PDF) on 30 October 2008.
  7. 30th Anniversary of Café de la Gare பரணிடப்பட்டது 2013-11-04 at the வந்தவழி இயந்திரம், L'Express, 15 August 2002, (in French)
  8. Blier, Bertrand (1974-05-13), Going Places, Gérard Depardieu, Patrick Dewaere, Miou-Miou, பார்க்கப்பட்ட நாள் 2018-04-19
  9. Bertolucci, Bernardo (1977-11-04), 1900, Robert De Niro, Gérard Depardieu, Dominique Sanda, பார்க்கப்பட்ட நாள் 2018-04-19
  10. Truffaut, François (1981-02-19), The Last Metro, Catherine Deneuve, Gérard Depardieu, Jean Poiret, பார்க்கப்பட்ட நாள் 2018-04-19
  11. Berri, Claude (1987-08-28), Jean de Florette, Yves Montand, Gérard Depardieu, Daniel Auteuil, பார்க்கப்பட்ட நாள் 2018-04-19
  12. Rappeneau, Jean-Paul (1990-12-01), Cyrano de Bergerac, Gérard Depardieu, Anne Brochet, Vincent Perez, பார்க்கப்பட்ட நாள் 2018-04-19

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரார்டு_தெபர்டியு&oldid=3620301" இலிருந்து மீள்விக்கப்பட்டது