உள்ளடக்கத்துக்குச் செல்

செரானி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செரானி மாவட்டம்
ضلع شیرانی
மாவட்டம்
≈
செரானி மாவட்டத்திலிருந்து சுலைமான் மலைத்தொடர்
பாக்கித்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம்
பாக்கித்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம் பலூசிஸ்தான்
கோட்டம்ஜோப்
நிறுவிய ஆண்டு3 சனவரி 2006
தலைமையிடம்செரானி நகரம்
அரசு
 • வகைமாவட்டம் (நிர்வாகி - துணை ஆணையாளர்
பரப்பளவு
 • மாவட்டம்4,310 km2 (1,660 sq mi)
மக்கள்தொகை
 (2023)[1]
 • மாவட்டம்1,91,687
 • அடர்த்தி44/km2 (120/sq mi)
 • நகர்ப்புறம்
0
 • நாட்டுப்புறம்
1,91,687
சராசரி எழுத்தறிவு
 • எழுத்தறிவு
  • மொத்தம்
    (23.86%)
  • ஆண்:
    (31.53%)
  • பெண்:
    (15.02%)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
வருவாய் வட்டங்கள்1
இணையதளம்www.balochistan.gov.pk

செரானி மாவட்டம் (Sheran District or Shirani District), பாக்கித்தான் நாட்டில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3][4] இது பலூசிஸ்தான் மாகணத்தின் வடகிழக்கில் ஆப்கானித்தான் நாடு மற்றும் கைபர் பக்துவா மாகாணத்தின் எல்லையை ஒட்டியுள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் செரானி நகரம் ஆகும். செரானி நகரம் மாகாணத் தலைநகரான் குவெட்டாவிலிருந்து 373.கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு 1333 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இம்மாவட்டம் சுலைமான் மலைத்தொடரின் ஒரு பகுதியாக உள்ளது.

மாவட்ட எல்லைகள்

[தொகு]

செரானி மாவட்டத்திற்கு வடக்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணம், தெற்கில் ஜோப் மாவட்டம் மற்றும் தென்கிழக்கில் மூசாக்கேல் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 36,100 குடியிருப்புகள் கொண்ட செரானி மாவட்ட மக்கள் தொகை 1,91,687 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 122.02 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 23.86% ஆகும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 75,400 (39.34%) ஆக உள்ளனர். 90% மக்கள் தொகை கிராமப்புறங்களில் உள்ளது.[5] இதன் மக்கள் தொகையில் 99.67% இசுலாமையும், பிற சமய சமயங்களை 0.33% பின்பற்றுகின்றன.[6] இம்மாவட்டத்தில் பஷ்தூ மொழியை 99.87% மக்கள் பேசுகின்றனர்.[1]இம்மாவட்டத்தில் ஹரிபால் மற்றும் செரான் இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]
பலூசிஸ்தான் மாகாணத்தின் மாவட்டங்கள்

செரானி மாவட்டம் 1 வருவாய் வட்டம் மட்டும் 186 கிராமங்களைக் கொண்டுள்ளது.

வருவாய் வட்டம் பரப்பளவு

(km²)[7]

மக்கள் தொகை

(2023)

மக்கள்தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு

(2023)[8]

ஒன்றியக் குழுக்கள்
செரானி வருவாய் வட்டம் 4,310 191,687 44.47 23.86% ...

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "7th Population and Housing Census: Population by Mother Tongue, Sex and Rural/Urban" (PDF). Pakistan Bureau of Statistics.
  2. ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  3. ↑ "Welcome to Balochistan". Government of Balochistan. Archived from the original on 6 April 2009.
  4. ↑ "Districts". Government of Balochistan. Archived from the original on 1 June 2013.
  5. ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  6. ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 9" (PDF). www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
  7. ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  8. ↑ "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரானி_மாவட்டம்&oldid=4307572" இலிருந்து மீள்விக்கப்பட்டது