செய்யது அப்துல் மாலிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செய்யது அப்துல் மாலிக்
பிறப்பு16 சனவரி 1919
நகரினி, கோலாகாட் மாவட்டம், அசாம்
இறப்பு20 திசம்பர் 2000
ஜோர்காட்
தொழில்நாவல், சிறூகதை எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், தத்துவவியலாளர்
மொழிஅசாம்
தேசியம்இந்தியர்
கல்விமுதுகலை
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது,
பத்மபூசண்,
பத்மசிறீ,[1]

செய்யது அப்துல் மாலிக் (Syed Abdul Malik)(1919-2000) என்பவர் இந்தியாவின் அசாம் மாநிலத்தினைச் சார்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் கோலாகாட்டில் உள்ள நஹோரோனி கிராமத்தில் பிறந்தவர். அசாமிய இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். 1977ஆம் ஆண்டு அபயபுரியில் நடைபெற்ற அசாம் சாகித்ய சபையின் தலைவராகவும் இருந்துள்ளார்.

விருதுகள்[தொகு]

மாலிக் பத்மசிறீ, பத்ம பூசண்,[2] சாகித்திய அகாதமி விருது,[3][4] சங்கர் தேவ் விருது, சாஹித்யாச்சார்யா விருதுகள் உள்ளிட்ட பல பரிசுகளைப் பெற்றுள்ளார். மாலிக் 1972ஆம் ஆண்டில் தனது அகாரி ஆத்மார் கஹினி (ஒரு நாடோடி ஆத்மாவின் கதை) நாவலுக்காக சாகித்திய அகாதமி விருதைப் பெற்றார்.

இறப்பு[தொகு]

மாலிக், 20 திசம்பர் 2000-ல் இறந்தார்.

இலக்கியப் பணி[தொகு]

 • அகாரி ஆத்மார் கஹினி (অঘৰী আত্মাৰ কাহিনী)
 • ஷுருஜ்முகீர் ஷப்னா(সুৰুযমুখীৰ স্বপ্ন)
 • தன்யா நர் தனு பால் (ধন্য নৰ তনু ভাল)
 • ருப்தீர்தர் யாத்ரி(ধন্য নৰ তনু ভাল)
 • ரஜனிகோந்தர் சோகுலோ (ৰাজনগন্ধাৰ চকুলো)
 • பரஷ்மோனி (পৰশমনি)
 • ஆதர்ஷிலா(পৰশমনি)
 • மொரோஹா புல்(मৰহা ফুল)
 • ஷகர்(স্বাক্ষৰ)
 • சோபிகர்(ছবি ঘৰ)
 • ரோங்கா கோரா(ৰঙাগৰা)

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]