செயிண்ட் மைக்கெல் செயிண்ட் ஜார்ஜ் விருது

செயிண்ட் மைக்கெல் செயிண்ட் ஜார்ஜ் விருது (Order of St Michael and St George) என்பது ஏப்ரல் 28, 1818 அன்று; வேல்ஸ் இளவரசர் ஜார்ஜ் (George, Prince of Wales); (ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் ஜார்ஜ்) (George IV) அவரின் தந்தை மூன்றாம் ஜார்ஜ் (George III) மன்னருக்கு இளவரசராகச் செயல்பட்டபோது, நிறுவப்பட்ட ஒரு பிரித்தானிய வீர விருதாகும்.[1] இரு இராணுவ வீரர்களான மைக்கெல் மற்றும் புனித ஜார்ஜ் என்பவர்களின் நினைவாக இந்த விருதிற்குப் பெயரிடப்பட்டது.
நெப்போலியப் போர்களில் கையகப்படுத்தப்பட்ட நடுநிலக் கடல் பகுதிகளில் உயர்ப் பதவிகளை வகித்த கட்டளை அதிகாரிகள் அல்லது உயர்ப்பதவி அதிகாரிகளுக்கு செயிண்ட் மைக்கெல் செயிண்ட் ஜார்ஜ் விருது முதன்முதலில் வழங்கப்பட்டது.[1] பின்னர் பிரித்தானிய பேரரசின் பிற பிரதேசங்களில் அதே போன்று கட்டளை அதிகாரிகள் அல்லது உயர்ப்பதவிகளில் பொறுப்பு வகித்தவர்களுக்கும் செயிண்ட் மைக்கெல் செயிண்ட் ஜார்ஜ் விருது வழங்கப்பட்டது.
பொது
[தொகு]தற்போதைய காலத்தில் உள்நாட்டில் உயர்ப் பதவிகளை வகிப்பவர்களுக்கும் அல்லது வெளிநாட்டில் ஐக்கிய இராச்சியத்திற்கு ஆதரவாக, இராணுவம் அல்லாத முக்கியச் சேவைகளை வழங்கும் தனிநபர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. அத்துடன், பொதுநலவாய நாடுகளில் முக்கியமான அல்லது விசுவாசமான சேவைகளை வழங்குபவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.[2]
மேலும் படிக்க
[தொகு]- The Order of St Michael and St George: 1818 to 2018 part one: its first century by Russell Malloch. [London, The Stationery Office, 2018] at thegazette.co.uk
- The Order of St Michael and St George: 1818 to 2018 part two: its second century by Russell Malloch. [London, The Stationery Office, 2018] at thegazette.co.uk
- "Knighthood and Chivalry", (1911). Encyclopædia Britannica, 11th ed. London: Cambridge University Press.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Duckers, Peter (2009) [2004]. British Orders and Decorations. Oxford: Shire Publications. pp. 26–27. ISBN 978-0-7478-0580-9. கணினி நூலகம் 55587484.
- ↑ "The Order of St Michael and St George". Royal.uk. 6 October 2025.
வெளி இணைப்புகள்
[தொகு]- Order of St Michael and St George – Central Chancery of the Orders of Knighthood
- The Order of St Michael and St George – Royal Household website
- Order of St Michael and St George – UK Cabinet Office
- The British honours system – UK Government