செயிண்ட் மேரித் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செயிண்ட் மேரித் தீவுகள்
தேங்காய்த் தீவுகள்
தீவுகள்
DR0085DSC 1767.jpg
செயிண்ட் மேரித் தீவுகள் is located in கருநாடகம்
செயிண்ட் மேரித் தீவுகள்
செயிண்ட் மேரித் தீவுகள்
Location in Karnataka, India
ஆள்கூறுகள்: 13°22′46″N 74°40′23″E / 13.3795°N 74.6730°E / 13.3795; 74.6730ஆள்கூறுகள்: 13°22′46″N 74°40′23″E / 13.3795°N 74.6730°E / 13.3795; 74.6730
நாடுஇந்தியா
இந்திய மாநிலம்கர்நாடகா
மாவட்டம்உடுப்பி
ஏற்றம்10 m (30 ft)
மொழி
 • Officialதுளு, கன்னடம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
நான்கு தீவுகள் -தேங்காய்த் தீவு, வடக்குத் தீவு, தர்யாபகதுர்கர் தீவு, தெற்குத் தீவு

தேங்காய் தீவுகள் அல்லது தொன்செப்பர் என்று அழைக்கப்பட்டும் செயின்ட் மேரி தீவுகள், இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் உடுப்பியில் உள்ள மால்பே கடற்கரையில் அரேபிய கடலில் உள்ள நான்கு சிறிய தீவுகளின் தொகுப்பாகும். தனித்துவமான பாசால்ட் எரிமலைக் குழம்பினால் உருவான ஒரு புவியியல் உருவாக்கத்தால் (படம்)அவை அறியப்படுகின்றன. [1]

செயின்ட் மேரி தீவுகள் பாசால்ட் எரிமலையின் வெடிப்பினாலும் காற்றின் கீழ்நோக்கிய அழுத்தத்தாலும் நிலப்பரப்பில் பொங்கி, பரவி வரும் நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது, ஏனெனில் அந்த நேரத்தில் மடகாஸ்கர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருந்தது. மடகாஸ்கரின் பிளவு சுமார் 88 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. [2]

கருங்கல் எரிமலைக்குழம்பு நிரல் படிவானது கர்நாடக மாநிலத்திலுள்ள நான்கு புவியியல் நினைவுச்சின்னங்களுள் ஒன்றாகும். மேலும் இந்தியப் புவியியல் நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்கவும் அவற்றைப் பராமரிக்கவும் மேலும் புவிசார் சுற்றுலாவினை மேம்படுத்தவும் அவற்றை உயர்த்தவும், இந்தியப் புவியியல் ஆய்வுக் கழகத்தால் 2016 ஆம் ஆண்டுஅறிவிக்கப்பட்ட முப்பத்து இரண்டு தேசிய நினைவுச்சின்னங்களுள் இதுவும் ஒன்றாகும். [3] [4] [5] [6] புவியியல் நினைவுச்சின்னமான "செயிண்ட் மேரித் தீவுகள்" ஒரு முக்கியமான புவிசார் சுற்றுலாவுக்கான தளமாக கருதப்படுகிறது.

வரலாறு[தொகு]

குந்தாபூரைச் சேர்ந்த ரஞ்சன் பலேகராவின் கூற்றுப்படி, 1498 ஆம் ஆண்டில், வாஸ்கோடகாமா போர்ச்சுகலில் இருந்து கேரளாவில் கோழிக்கோடு, செல்லுமுன்.தனது பயணத்தில் செயின்ட் மேரி தீவுகளை வந்தடைந்து, தீவில் ஒரு சிலுவையை நிறுவினார். இந்த தீவுகளில் ஒன்றான ஓ பத்ராவ் டி சாண்டா மரியா என்ற ஒரு தீவினை மரியன்னைக்கு அர்ப்பணிக்கும் விதமாக அப்பெயரினை இட்டார். [7] இந்த பெயரிலிருந்தே தீவுகளுக்கு அவற்றின் தற்போதைய பெயர் கிடைத்தது.

புவியியல் மற்றும் இடவியல்[தொகு]

நான்கு தீவுகளில், வடக்கு திசையில் ஒரு அறுகோண வடிவத்தில் ஒரு பாசால்டிக் பாறை உருவாக்கம் உள்ளது, இதே போன்ற தொரு உருவாக்கம் மால்பேயின் பிற இடங்களிலும் இந்தியாவில் வேறெங்கும் காணப்படவில்லை. இந்த தீவு சுமார் 500 மீ (1640 .4 சதுர அடி) நீளமும், 100 மீ.(328.1 சதுர அடி)பரப்பளவையும் கொண்டுள்ளது . இத்தீவுகளில் தனித்துவமான தென்னை மரங்கள் நிறைந்துள்ளன. தென்கடலின் நீலநிறம் இம்மரங்களில் பிரதிபலிப்பதால் நீல நிறத்தால் அம்மரங்கள் மூடப்பட்டது போன்ற தோற்றத்தைத் தருகின்றன. எனவே இத்தீவுகள் ”தேங்காய்த் தீவுகள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் தீவுகளில் வசிப்பிடம் எதுவும் இல்லை.

வடக்கு-தெற்காக அமைந்துள்ள தீவுகள் தொடர்ச்சியற்ற ஒரு சங்கிலிப்பிணைப்பை உருவாக்குகின்றன. இதன் நான்கு பெரிய தீவுகள் தேங்காய் தீவு, வடக்கு தீவு, தர்யபஹதர்கர் தீவு மற்றும் தெற்கு தீவு என்பனவாகும். [8]

தீவுகள் பொதுவாக கடற்கரைக் கோட்டிற்கு இணையாக அமைந்துள்ளன. இது இந்தியாவின் மேற்கு கடற்கரையானது பல்லாயிரம் ஆண்டுகளாக உயர்ந்து வருவதற்கான சான்றாகத் தடயங்களை வழங்குகிறது. மேலும் இத்தீவுகளின் நிலவோடானது இதன் தெற்கேயுள்ள சிப்பிக் கடற்கரை மற்றும் சூரத்கல் ஆகியவிடங்களில் படிந்துள்ள கடற்கரைப்படிவுகள், நிலமட்ட உயர்வுகள் மற்றும் அலை அளவீட்டுத் தரவுகள் ஆகியவை கடல் மட்டமானது ஆண்டுக்கு 1 மிமீ. அளவு குறைந்துகொண்டே வந்துள்ளதற்கான சான்றாக விளங்குகிறது. [2]

புவியியலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே ஆர்வத்தை உருவாக்கிய தேங்காய் தீவின் மிக அதிக உயரம் சுமார் 10 மீ (32.8 ச. அ) + 6 மீ (19.7 ச.அடி) [2]

மேற்கோள்கள்[தொகு]