செயிண்ட்-சுசான், ரீயூனியன்
செயிண்ட்-சுசான் | |
|---|---|
செயிண்ட்-சுசான் நகரமண்டபம் | |
| ஆள்கூறுகள்: Lua error in package.lua at line 80: module 'Module:ISO 3166/data/FR' not found. | |
| நாடு | பிரான்சு |
| Overseas region and department | ரீயூனியன் |
| பெருநகரம் | Saint-Denis |
| மண்டலம் | Saint-André-1 |
| Intercommunality | Nord de la Réunion |
| அரசு | |
| • நகரமுதல்வர் (2020–2026) | Maurice Gironcel[1] |
| Area 1 | 58.84 km2 (22.72 sq mi) |
| மக்கள்தொகை | வார்ப்புரு:France metadata Wikidata |
| நேர வலயம் | ஒசநே+04:00 |
| INSEE/அஞ்சற்குறியீடு | 97420 /97441 |
| ஏற்றம் | 0–1,449 m (0–4,754 அடி) (avg. 5 m or 16 அடி) |
| 1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. | |
செயிண்ட்-சுசான் (Sainte-Suzanne) என்பது பிரான்சின் கடல்கடந்த பிராந்தியமாக மடகாஸ்கர் தீவிலிருந்து கிழக்கே சுமார் 950 கிமீ (590 மைல்) தொலைவில் அமைந்துள்ள ரீயூனியன் தீவின் தீவின் வடக்கு கடற்கரையில் உள்ள ஒரு கம்யூன் ஆகும்.
புவியியல்
[தொகு]செயிண்ட்-சுசான் கம்யூனின் எல்லைகளாக செயின்ட்-ஆண்ட்ரே, Sசெயின்ட்-மேரி, சலாசி ஆகிய கம்யூன்கள் உள்ளன. செயிண்ட்-ஜீன் ஆற்றானது செயிண்ட்-ஆண்ட்ரே மற்றும் செயிண்ட்-சுசான் இடையே எல்லையாக உள்ளது. குவார்டியர்-ஃபிரான்சாய்ஸ் இந்த கம்யூனில் உள்ள ஒரு கிராமமாகும்.
காலநிலை
[தொகு]செயிண்ட்-சுசான் வெப்பமண்டல மழைக்காடு காலநிலையுடன் ( Af ) நெருக்கமாக இணைந்த ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலையைக் ( கோப்பென் காலநிலை வகைப்பாடு Cfa ) கொண்டுள்ளது. செயிண்ட்-சுசானில் சராசரி ஆண்டு வெப்பநிலை 20.3 °C (68.5 °F) ஆகும். சராசரி ஆண்டு மழைப்பொழிவு 4,385.9 மிமீ (172.67 அங்குலம்) ஆகும். சனவரி மாதம் மிகவும் ஈரப்பதமான மாதமாகும். பிப்ரவரி மாதத்தில் சராசரியாக அதிகபட்ச வெப்பநிலை 23.2 °C (73.8 °F) ஆகவும், ஆகத்தில் மிகக் குறைந்த வெப்பநிலை 17.5 °C (63.5 °F) ஆகவும் இருக்கும். செயிண்ட்-சுசானில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை 2018 மார்ச் 7 அன்று 32.3 °C (90.1 °F) ஆகவும், 2005 ஜூலை 2 அன்று இதுவரை பதிவான மிகக் குளிரான வெப்பநிலை 8.0 °C (46.4 °F) ஆகவும் இருந்தது.
வரலாறு
[தொகு]இந்த நகரம், செயிண்ட்-டெனிசுடன் சேர்ந்தாக இருந்தது. 1667 ஆம் ஆண்டில் தீவின் முதல் ஆளுநரான எட்டியென் ரெக்னால்ட் என்பவரால் நிறுவப்பட்டது.
மக்கள் தொகை
[தொகு]| ஆண்டு | ம.தொ. | ஆ. ±% |
|---|---|---|
| 1967 | 11,151 | — |
| 1974 | 11,984 | +1.03% |
| 1982 | 13,196 | +1.21% |
| 1990 | 14,695 | +1.35% |
| 1999 | 18,144 | +2.37% |
| 2007 | 21,856 | +2.35% |
| 2012 | 22,388 | +0.48% |
| 2017 | 23,505 | +0.98% |
| ஆதாரம்: INSEE[2] | ||
ஆளுமைகள்
[தொகு]பின்வரும் மக்கள் சைன்ட்-சுசானை பூர்வீகமாகக் கொண்டவர்கள்:
- வெண்ணிலாவில் செயற்கை மகரந்தச் சேர்க்கையைக் கண்டுபிடித்த அடிமை எட்மண்ட் ஆல்பியஸ் (1829–1880).
- எலி ஹோராவ் (பிறப்பு 1938), அரசியல்வாதி.
- ரெனே-பால் விக்டோரியா (பிறப்பு 1954), அரசியல்வாதி.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Répertoire national des élus: les maires". data.gouv.fr, Plateforme ouverte des données publiques françaises (in French). 2 December 2020.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ Population en historique depuis 1968, INSEE
