செயல்வல்லமை முதிர்ச்சி ஒப்புரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'செயல்வல்லமை முதிர்ச்சிப் ஒப்புரு (Capability Maturity Model) CMM ஒரு வளர்ச்சி மாதிரி ஆகும். இது அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையினரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு வளர்ச்சி ஒப்புரு ஆகும். இந்த மாதிரியையே கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம் மென்பொருள் பொறியியல் நிறுவனம் (SEI) உருவாக்க அடித்தளமாக அமைந்தது. பொதுவாக இது மென்பொருள் உருவாகத்தில் பயன்படும் செயல்முறைகளை மேம்படுத்த உதவுகிறது.

கண்ணோட்டம்[தொகு]

செயல்வல்லமை முதிர்ச்சிப் ஒப்புரு முதன் முதலில் அரசாங்க ஒப்பந்தக்காரர்களின் செயல்முறை திறனை மதிப்பிடும் ஒரு கருவியாக உருவாக்கப்பட்டது. செயல்வல்லமை முதிர்ச்சிப் படிமம் முதலில் வாட்ஸ் ஹம்ப்ரேவின் "மென்பொருள் செயல்முறை நிர்வகித்தல்", 1989 என்ற புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளத செயல்முறை முதிர்ச்சி கட்டமைப்பை அடிப்படையாக கொண்டது.

மென்பொருளுக்கான செயல்வல்லமை முதிர்ச்சிப் படிமம்[தொகு]

வரலாறு[தொகு]

ஆகஸ்ட் 1986ல் மென்பொருள் பொறியியல் நிறுவனம்(SEI) கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் மைதிரி கார்பரேஷனுடன்(MITRE Corporation) இணைந்து நிறுவங்கள் மென்பொருள் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான ஒரு செயல்முறையை வகுத்தனர்.[1]. அமெரிக்காவின் மத்திய அரசாங்கம் மென்பொருள் தயாரிக்கும் ஒப்பந்தக்காரர்களின் திறனை அறிய இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சூன் மாதம் 27ஆம் தேதி மென்பொருள் பொறியியல் நிறுவனம்(SEI) முதிர்ச்சிக்கான கட்டமைப்பை வெளியிட்டது (Humphrey 1987a) மேலும் செப்டம்பர் 1987 அந்நிறுவனம் முதிர்ச்சிக்கான வினாப்பட்டியளையும் வெளியிட்டது (Humphrey 1987b).

மென்பொருள் பொறியியல் நிறுவனம் முதன் முதலில் மென்பொருள் நிறுவனங்களுக்காக முதன் முதலில் உருவாக்கப்பட்ட புத்தகம் செயல்வல்லமை முதிர்ச்சிப் ஒப்புரு:மேம்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல்கள் (SEI 1995).

மூன்று முக்கியமான பரிமாணங்கள்[தொகு]

மென்பொருள் பொறியியல் நிறுவனம் ஒரு நிறுவனம் நல்ல தரமான பொருள் மற்றும் சேவை அளிக்க பல பரிமான்கங்கள் முக்கியமானவை எனக் கருதியது. அதில்

  • மக்கள்
  • நடைமுறைகள் மற்றும்
  • வழிமுறைகள்

ஆகிய மூன்றும் மிக முக்கியமான பரிமாணங்கள் ஆகும்.


மேற்கோள்கள்[தொகு]

  1. http://home.comcast.net/~mark.paulk/papers/p2009c.pdf