செயல்வல்லமை அணுகுமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செயல்வல்லமை அணுகுமுறை (Capability approach) என்பது ஒரு சமூகத்தை விருத்தி செய்ய பயன்படும் ஒர் அணுகுமுறை ஆகும். இது ஒரு பூரண அணுகுமுறையாக இந்திய பொருளியலாளர் அமார்த்ய சென் அவர்களாலும், அவரோடு இணைந்து பணியாற்றியோராலும் அறிமுகப்படுத்தப்பட்டது. சிக்கல்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், ஒருவரிடையே இருக்கக்கூடிய வளங்களையும் திறங்களையும் கருத்தில் கொண்டு, பொருளாதார விருத்தியை மட்டும் கருத்தில் கொள்ளாமல் ஒருவருக்கு தேவையான உண்மையான சுதந்திரங்களையும், வாழ்வின் இறுதி நோக்கங்களையும் கருத்தில் கொண்டு இந்த அணுகுமுறை வளர்ச்சி பெற்றது. இன்றைய பொருளாதார வளர்ச்சியல் திட்டங்களில் இது ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.