செயல்முறைக் கட்டுப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Example of control system of a continuous stirred-tank reactor.
அணுக்கரு உலையின் கட்டுப்பாட்டகம்.

செயல்முறைக் கட்டுப்பாடு (Process Control) என்பது ஒரு பொறியியல் துறையாகும். இது குறிப்பிட்ட செயல்முறையின் வெளீயிட்டை ஒரு விரும்பத்தகுந்த எல்லைக்குள் தொடர்ச்சியாக பராமரிக்க கட்டமைப்புகள்(architechture), இயங்குமுறைகள்(mechanism) மற்றும் நெறிமுறைகள்(algorithm) ஆகியவற்றைப் புரிந்தணர்ந்து கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக, ஒரு பொருளின் ஒத்த தயாரிப்புகளுக்காக இரசாயன உலையின் வெப்பநிலை தொடர்ச்சியாக பராமரிக்கப்படுவது செயல்முறைக் கட்டுப்பாடு ஆகும்.

செயல்முறைக் கட்டுப்பாடு பரவலாக இன்று அனைத்து தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது, இதன் மூலம் தொடர்ந்து இயக்கப்படும் செயல்முறைகளிலிருந்து ஒத்தப் பொருட்களை அதிகளவில் உற்பத்திசெய்யப்படுவது சாத்தியமாகிறது. செயல்முறைக் கட்டுப்பாடானது தன்னியக்கமாக்கலை(automation) ஏதுவாக்குகிறது, இதன் மூலம் ஒரு சிக்கலான செயல்முறையானது, மத்திய கட்டுப்பாட்டு அறையிலுள்ள குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டே இயக்க முடியும்.

செயல்முறைக் கட்டுபாடானது பின்னுட்டக் கட்டுபாட்டினையோ அல்லது திறந்த நிலையாகவோ செயற்படும். பின்னுட்டக் கட்டுப்பாடானது தொடர்ச்சியாகவோ அல்லது தொடர்ச்சியற்றோ இருக்கலாம்.

செயல்முறைக் கட்டுப்பாட்டினை பயன்படுத்தும் பல்வேறு செய்முறைகள்[தொகு]

  • தொடர்ச்சியற்ற (Discrete) : இது பல்வேறு உற்பத்தி, இயக்கம், பேக்கேஜிங் பயன்பாடுகளில் காணப்படுகின்றது.[1]
  • கூறு (Batch) : சில பயன்பாடுகளில், குறிப்பிட்ட அளவு மூலப்பொருட்கள் குறிப்பிட்ட கால அளவு, குறிப்பிட்ட வழிகளில் இணைந்து ஒரு இடைநிலை அல்லது இறுதி விளைவை ஏற்படுத்தவேண்டும். எ.கா; ஒட்டுப்பொருள்(glue) தயாரிப்பின்பொழுது, அதன் வேதியியல் மூலப்பொருட்கள் குறிப்பிட்ட அளவு குறிப்பிட்ட கால அளவில் ஒரு வெப்பகலனுள் வைத்து இறுதியாக வெளீயிடப்படுகிறது. கூறு செயல்முறைக்கு மற்றுமொரு உதாரணம் உணவுப்பொருட்கள், பானங்கள், மருந்துப் பொருட்கள் உற்பத்தியாகும். கூறு செயல்முறையானது ஒரு ஆண்டுக்கு குறைந்த அல்லது மிதமான உற்பத்தி தேவைப்படும் இடங்களில் பயன்படுகின்றது.[2]
  • தொடர்ச்சியான (Continuous) : தொடர்ச்சியான செயல்முறை ஒர் ஆண்டுக்கு அதிக அளவிலான உற்பத்தி தேவைப்படும் இடங்களில் பயன்படுகின்றது. பெட்ரோலியம், நெகிழி, வேதியியல் தொழிற்சாலை போன்றவை தொடர்ச்சியான செயல்முறைக்கு எடுத்துக்காட்டாகும்.

சான்றுகள்[தொகு]

  1. "தனித்த செயல்முறை". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 15, 2015.
  2. "கூறு செயல்முறை". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 15, 2015.