செயற்படு பெருக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செயல்படு பெருக்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செயல்படு பெருக்கி தொகுச்சுற்று சில்லுகள்

செயற்படு பெருக்கி (Operational Amplifer) இலத்திரனியல் மின்சுற்றுக்களில் பயன்படும் ஒரு மிகமுக்கிய அடிப்படைக் கூறாகும். தமிழில் இதைச் செயற்படு மிகைப்பி, செயற்பாட்டு விரியலாக்கி, சைகை வேறுபாட்டு நுட்பப் பெருக்கி என்றும் குறிப்பிடுவர்.

செயற்படு பெருக்கி ஒரு குறிகையின் வீச்சளவை பெருக்கி (amplify) அல்லது மிகைப்படுத்தி தரும். மேலும், செயல்படு பெருக்கி கொண்டு கூட்டல், தொகையிடல், வகைப்பிடல் போன்ற கணிதச்செயற்பாடுகளையும் வேறு பல செயற்பாடுகளையும் செய்யலாம். ஆகையால்தான் செயல்படு பெருக்கி மின்சுற்று கூறுகளில் மிகவும் அடிப்படையான ஒன்று.

செயற்படு பெருக்கி வரலாறு[தொகு]

ஒரு திரிதடையம் பெருக்கியாக செயல்பட முடியும். இன்றைய குறைகடத்தி திரிதடையத்துக்கு செயல்பாட்டு இணையாக அதற்கு முன் இருந்தது வெற்றிடக்குழல் (vacume tube) ஆகும். வெற்றிடக்குழலை கண்டுபிடித்தவர் DeForest ஆவார், அவரே பின்னூட்டு பெருக்கியையும் கண்டுபிடித்தார் என்பர். எனினும் பின்னூட்டு பெருக்கி Armstrong என்பவரின் கண்டுபிடிப்பு என்ற கோரிக்கையும் உண்டு.

இன்று செயற்படு பெருக்கி தொகுசுற்று சில்லாக கிடைக்கின்றது. செயல்படு பெருக்கி சில்லுக்கள் 1960 களில் பரவலான பயன்பாட்டுக்கு வந்தன. இச்சில்லுக்களுக்கு தரப்படுத்தப்பட்ட வடிவமைப்பு உண்டு.

செயற்படு பெருக்கி தொகுச்சுற்று சில்லு[தொகு]

செயற்படு பெருக்கி பல திரிதடையங்களால் ஆன ஒரு மின்சுற்றே ஆகும்.

நுட்பியல் சொற்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்படு_பெருக்கி&oldid=1931006" இருந்து மீள்விக்கப்பட்டது