உள்ளடக்கத்துக்குச் செல்

செயற்பாட்டியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆகஸ்ட் 1963 இல் குடிசார் உரிமைகள் இயக்கத்தினரின் வேலை வாய்ப்பு, சுதந்திரத்திற்காக வாசிங்டனில் நடந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட செயற்பாட்டாளர்கள்
ஆகஸ்ட் 1970, வாஷிங்டன், டி.சி.யில் நடைபெற்ற பெண்கள் விடுதலை ஊர்வலம்.

செயற்பாட்டியம் (activism) என்பது சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் விருப்பத்துடன், சமூக, அரசியல், பொருளாதார அல்லது சுற்றுச்சூழல் சீர்திருத்தங்களை ஊக்குவித்தல், தடை செய்தல், இயக்குதல் அல்லது தலையிடுதல் போன்ற முயற்சிகளை மேற்கொள்வது ஆகும். ஒரு சமூகத்தில் அதிகாரத்தைக் கட்டியெழுப்புதல் (செய்தித்தாள்களுக்கு கடிதங்கள் எழுதுதல் உட்பட), தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தல், அரசியல் பிரச்சாரத்தை நடத்துதல் அல்லது பங்களித்தல், வணிகங்களுக்கு முன்னுரிமை அளித்தல் (அல்லது புறக்கணித்தல்), பேரணிகள், தெரு அணிவகுப்புகள், வேலைநிறுத்தங்கள், உள்ளிருப்புப் போராட்டங்கள் அல்லது உண்ணாவிரதங்கள் போன்றவை செயற்பாட்டியத்தின் பொதுவான வடிவங்களாகும்.

வரையறைகள்

[தொகு]

நிகழ்நிலை சொற்பிறப்பியல் அகராதி, "செயற்பட்டியம்" மற்றும் "செயல்பாட்டாளர்" என்ற ஆங்கிலச் சொற்களை முறையே 1920 [1] அல்லது 1915 [2] ஆம் ஆண்டு முதல் அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப்பட்டதாகப் பதிவு செய்கிறது. "செயற்பாட்டியம்" என்ற வார்த்தையின் வரலாறு கூட்டு நடத்தை [3] [4] [5], சமூக நடவடிக்கை ஆகியவற்றின் புரிதல்களிலிருந்து தொடங்குகிறது. [6] 1960 களில் அமெரிக்காவில் "புதிய சமூக இயக்கங்களின்" எழுச்சியைத் தொடர்ந்து, செயற்பாட்டியம் என்பது ஒரு பகுத்தறிவு, சட்டப்பூர்வமான ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினையோ அல்லது முறையீடு செய்வதாகவோ புரிந்து கொள்ளப்பட்டது. [7] [8] [9]

செயல்பாட்டின் வகைகள்

[தொகு]

மனித உரிமைகள்

[தொகு]

மனித உரிமைகள் செயல்பாடு என்பது மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க முயல்வதாகும். இதில், வாழ்க்கை உரிமை, குடியுரிமை, சொத்துரிமை, இயக்க சுதந்திரம்; அரசியலமைப்புச் சட்டப்படி சிந்தனை, கருத்து, மதம், அமைதியான கூட்டம் நடத்துதல் போன்ற சுதந்திரங்கள் அடங்கும். [10] உலகளாவிய மனித உரிமைகள் இயக்கத்தின் அடித்தளங்கள் காலனித்துவம், ஏகாதிபத்தியம், அடிமைத்தனம், இனவெறி, பிரிவினை, ஆணாதிக்கம் மற்றும் பழங்குடி மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பை உள்ளடக்கியது.[11]

அரசியல் செயற்பாட்டியம்

[தொகு]

அரசு நிறுவனங்களை மேற்பார்வை செய்தல், வெளிப்படைத்தன்மைக்கு பொறுப்பேற்க வைப்பதன் மூலம், ஆர்வலர்கள் பொதுக் கண்காணிப்பாளர்களாகவும், தகவல் தெரிவிப்பவர்களாகவும் இருக்க முடியும். [12]

அரசியல் செயற்பாட்டியத்தில், அரசியல் பிரச்சாரம், பரப்புரை, வாக்களிப்பு அல்லது மனுத் தாக்கல் ஆகியவை அடங்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Harper, Douglas. "activism". Online Etymology Dictionary.
  2. Harper, Douglas. "activist". Online Etymology Dictionary.
  3. Park, Robert; Burgess, Ernest (1921). Introduction to the Science of Sociology. Chicago: University of Chicago Press.
  4. Merton, Robert (1945). Social Theory and Social Structure. New York: Free Press.
  5. Hoffer, Eric (1951). The True Believer: Thoughts on the Nature of Mass Movements. New York: Harper & Row.
  6. Parsons, Talcott (1937). The Structure of Social Action. New York: Free Press.
  7. Olson, Mancur (1965). The Logic of Collective Action: Public Goods and the Theory of Groups. Cambridge, Mass.: Harvard University Press.
  8. Gamson, William A. (1975). The Strategy of Social Protest. Homewood, IL: Dorsey Press. ISBN 9780256016840.
  9. Tilly, Charles (1978). From Mobilization to Revolution. Reading, Mass.: Addison-Wesley. ISBN 9780201075717.
  10. "Universal Declaration of Human Rights". United Nations. 1948. Archived from the original on 4 May 2009.
  11. Clapham, Human Rights (2007), p. 19. "In fact, the modern civil rights movement and the complex normative international framework have grown out of a number of transnational and widespread movements. Human rights were invoked and claimed in the contexts of anti-colonialism, anti-imperialism, anti-slavery, anti-apartheid, anti-racism, and feminist and indigenous struggles everywhere."
  12. "Politically Active? 4 Tips for Incorporating Self-Care, US News". US News. 27 February 2017. Archived from the original on 6 April 2019. Retrieved 5 March 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்பாட்டியம்&oldid=4237176" இலிருந்து மீள்விக்கப்பட்டது