செயற்கை நுரையீரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செயற்கை நுரையீரல் (Artificial lung) இரத்தத்தின் ஆக்சிசனேற்றத்தையும், இரத்தத்திலிருந்து கார்பனீராக்சைடை அகற்றுவதையும் வழங்குகின்ற ஒரு செயற்கை உறுப்பாகும். இது இயற்கையான உயிரியல் நுரையீரலின் சில செயல்பாடுகளை எடுத்துக்கொள்ளும் நோக்கம் கொண்டது. இதய-நுரையீரல் இயந்திரத்திலிருந்து இது வேறுபட்டதாகும். இவ்வியந்திரம் வெளிப்புறமிருந்து செயல்படுகிறது. நுரையீரலின் செயல்பாடுகளை தற்காலிக அடிப்படையில் அல்லாமல் நீண்ட காலத்திற்கு மேற்கொள்ள வடிவமைக்கப்படுகிறது.

இதய-நுரையீரல் இயந்திரம் செயற்கை நுரையீரல் சாதனங்களின் வடிவமைப்பை ஊக்குவித்தது. நவீன செயற்கை நுரையீரல்கள் நோயாளியின் புற அதிர்ச்சியைக் குறைக்க உகந்ததாக உள்ளன. வளர்ச்சி மேலும் தொடர்ந்து உடலுக்கு வெளியே சவ்வு ஆக்சிசனேற்றம் என்ற நிலையை எட்டியது. உடலுக்கு வெளியே இரத்தம் இதய-நுரையீரல் இயந்திரத்திற்கு செலுத்தப்பட்டு கார்பனீராக்சைடை நீக்கி, உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்சிசன்  நிரப்பப்பட்ட இரத்தத்தை மீண்டும் அனுப்புவது இத்தொழில் நுட்பமாகும்.[1] நன்கொடையாளர் நுரையீரல் கிடைக்கும் வரை காத்திருக்கும் நோயாளிகளின் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இம்முறை பாலமாகப் பயன்படுத்தப்பட்டது. இயந்திர சுவாசமுறை கூட இதற்காக பயன்படுத்தப்பட்டது. நீண்ட காலத்திற்கு இயந்திர சுவாசம் பயன்படுத்தினால் நோயாளியின் நுரையீரல் சேதப்படும். இந்த இரண்டு சிகிச்சைகளும் விலை உயர்ந்தவை மற்றும் மோசமான வாழ்க்கைத் தரத்துடன் தொடர்புடையவையாகும். மேலும் இந்த நுட்பங்கள் வேலை செய்வதற்கு தேவையான இரத்த சுற்றுகளும் சிக்கலானவையாகும். .

புற உடல் சவ்வு ஆக்சிசனேற்ற அமைப்பை எளிதாக்குவது மற்றும் நுரையீரல் சிற்றறைகளின் செயல்பாட்டை தூண்ட 380 மைக்ரான் அகல வெற்று இழைகளைப் பயன்படுத்தும் சாதனங்கள் உருவாக்கியது உள்ளிட்டவை சமீபத்திய முன்னேற்றங்களாகும். பல ஆய்வுக் குழுக்கள், குறிப்பாக, பிட்சுபர்க் பல்கலைக்கழகம், [2] மிச்சிகன் பல்கலைக்கழகம், மேரிலாந்து பல்கலைக்கழகம் மற்றும் பாசுட்டன் சார்ந்த ஆய்வுக் குழுக்கள் நோயாளிகளுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய செயற்கை நுரையீரல் சாதனங்களை உருவாக்கி வருகின்றன. [3] [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "செயற்கை இதயம், நுரையீரல் இயந்திரத்தை பயன்படுத்தி இதய நோயாளிக்கு சிகிச்சையளித்து சிம்ஸ் மருத்துவமனை சாதனை" (ta).
  2. "Wearable Artificial Lung to Be Developed at Pitt Through $3.4 Million Grant".
  3. "UMHS News Release". மூல முகவரியிலிருந்து 14 June 2007 அன்று பரணிடப்பட்டது.
  4. "Artificial lung mimics real organ’s design and efficiency - think:blog". மூல முகவரியிலிருந்து 2012-01-07 அன்று பரணிடப்பட்டது.
  5. "Artificial lungs could offer real hope to future transplant patients".

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்கை_நுரையீரல்&oldid=3248617" இருந்து மீள்விக்கப்பட்டது