செயப்படுபொருள்-பயனிலை-எழுவாய்
மொழியியல் உருவியத்தில், செயப்படுபொருள்-பயனிலை-எழுவாய் என்பது ஒரு வகை சொற்றொடர் அமைப்பைக் குறிக்கும். இந்த சொற்றொடர் அமைப்பில் செயப்படுபொருள் முதலாகவும், பயனிலை இரண்டாவதாகவும் எழுவாய் மூன்றாவதாகவும் அமையும். வீட்டுக்கு போகிறான் கண்ணன் என்ற வடிவம் இந்த வகையைச் சார்ந்தது.
செ.ப.எ மொழிகள்
[தொகு]சொல் ஒழுங்கு |
தமிழ் ஒப்புமை |
மொழிகளின் வீதம் |
எ.கா மொழிகள் | |
---|---|---|---|---|
எ.செ.ப | "அனுமன் சீதையை கண்டான்." | 45% | பஷ்தூ, இலத்தீன், சப்பானியம், ஆப்பிரிக்கானாசு | |
எ.ப.செ | "அனுமன் கண்டான் சீதையை." | 42% | ஆங்கிலம், அவுசா, மாண்டரின், உருசியம் | |
ப.எ.செ | "கண்டான் அனுமன் சீதையை." | 9% | விவிலிய எபிரேயம், ஐரியம், பிலிப்பினோ, துவாரெக் | |
ப.செ.எ | "கண்டான் சீதையை அனுமன்." | 3% | மலகாசி, பவுரே | |
செ.ப.எ | "சீதையை கண்டான் அனுமன்." | 1% | அப்பாலை?, இக்சுக்காரியானா? | |
செ.எ.ப | "சீதையை அனுமன் கண்டான்." | 0% | வராவோ |
உலக மொழிகளிலுள்ள சொல் ஒழுங்கின் அலையெண் பரம்பல்
1980ல் ரஸ்செல் எஸ். தொம்லின் என்பவரால் அளவிடப்பட்டது.[1][2]
குவாரிஜியோ, ஹிக்ஸ்கார்யானா, உராரினா, ஓரளவுக்கு தப்பிராப்பே ஆகிய மொழிகள் செ.ப. எ சொற்றொடர் ஒழுங்கமைப்புக்கொண்ட மொழிகள்.
முதன்மை சொற்றொடர் அமைப்பாக இல்லாவிட்டாலும், செயப்படுபொருளுக்கு அழுத்தம் கொடுக்கும் தேவைக்காக வேறு சில மொழிகளிலும் செ.ப.எ ஒழுங்கு பயன்படுவது உண்டு. குறிப்பாக வேற்றுமை உருபுகளைக் கொண்ட மொழிகளில் இதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அரபி, உரோமானியம், குரோசியம், பாஸ்க்கு, எசுப்பெரான்டோ, அங்கேரியம், பின்னிசு, உருசியம் ஆகிய மொழிகளிலும், ஓரளவுக்கு செருமன், டச்சு ஆகிய மொழிகளிலும் இந்த அமைப்புடன் கூடிய சொற்றொடர்களைக் காணலாம்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- மொழியியல் உருவியம்
- எழுவாய்-செயப்படுபொருள்-பயனிலை (எ.செ.ப)
- பயனிலை-எழுவாய்-செயப்படுபொருள் (ப.எ.செ)
- பயனிலை-செயப்படுபொருள்-எழுவாய் (ப.செ.எ)
- எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள் (எ.ப.செ)
- செயப்படுபொருள்-எழுவாய்-பயனிலை (செ.எ.ப)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Introducing English Linguistics International Student Edition by Charles F. Meyer
- ↑ Russell Tomlin, "Basic Word Order: Functional Principles", Croom Helm, London, 1986, page 22