செம்மலர் அன்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செம்மலர் அன்னம் (Semmalar Annam) லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தமிழ்த் திரைப்படமான அம்மணி (2016) மூலம் புகழ் பெற்ற இந்திய திரைப்பட நடிகையாவார். இவர், கல்லூரியில் படிக்கும் போதே பதினைந்துக்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கி நடித்துள்ளார். பல சமூக மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக கோயம்புத்தூரில் நிகழ்த்தப்பட்ட தெரு நாடகங்களுக்கு செம்மலர் நன்கு அறியப்பட்டவர். [1]

வாழ்க்கை[தொகு]

கோயம்புத்தூரைச் சேர்ந்த செம்மலர் அன்னம், ஏ. வி. கருப்பசாமி - பூவதி ஆகியோரின் மூத்த மகளாவார். இவருக்கு சமரன் என்ற இளைய சகோதரர் உள்ளார்.

கல்வி[தொகு]

கோயம்புத்தூர் கிருஷ்ணம்மாள் மேல்நிலைப்பள்ளியில் படித்த பிறகு பூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரியில் காட்சித்தொடர்பியல் படிப்பில் சேர்ந்தார். பின்னர் அதே கல்லூரியில் மக்கள் செய்தித் தொடர்பியலிலும், இதழியலிலும், முதுகலை பட்டம் பெற்றார். [2] முறையான கல்விக்குப் பிறகு, சென்னையின் இசுடானிசுலாவ்ஸ்கி நடிப்புப் பள்ளியில் நடிப்பு மற்றும் நாடகம் குறித்த படிப்பைப் பெற்றார். [3] இது தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்க இவருக்கு உதவியது.

தொழில்[தொகு]

தனது கல்லூரிக் காலத்தில் சமூக காரணங்களுக்காக பல தெரு நாடகங்களை நிகழ்த்தினார். இந்த பல தெரு நாடகங்களை கல்லூரி சுற்றுச்சூழல் மன்றத்தின் கீழ் இவரது கல்லூரி பேராசிரியர் சி. ஆர். ஜெயப்பிரகாஷ் ஏற்பாடு செய்தார். இந்த தெரு நாடகங்கள் சமூகத்தில் நிறைய விழிப்புணர்வையும் நேர்மறையான மாற்றத்தையும் கொண்டுவருவதற்கும், இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை மாற்றுவதற்கும் கருவியாக இருந்தன. [4]

செம்மலரின் முதல் படமான "மலர்மதி", பாலியல் துன்புறுத்தலுக்கான ஒரு அனாதையைப் பற்றி இருந்தது. மேலும், இது சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் விருதை 2010 இல் வென்றது. சென்னை, சத்யபாமா பல்கலைக்கழகத்தின் காட்சித்தொடர்பியல் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநில அளவிலான குறும்பட விழாவில் திரையிடப்பட்டது.[5]

"அம்மணி" படத்தில், இவர் விரக்தியடைந்த மருமகளான அமுதா என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இவர் திரைபடங்கள் தவிர, பல விளம்பரங்களிலும், ஆவணப்படங்களிலும் நடித்துள்ளார்.

2021இல் "நீஸ்டீரீம் ஓ.டி.டி" தளத்தில் வெளியிடப்பட்ட "மாடத்தி" என்றத் தமிழ்ப் படத்தில் வேணி என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார்.

விருதுகள்[தொகு]

கலைஞர் தொலைக்காட்சியில் 2012இல் நடந்த ஒரு உண்மைநிலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்று ஒரு காரைப் பரிசாகப் பெற்றார். நடனம், நடிப்பு போன்ற பல கலை வடிவங்களில் தங்களது திறமையை நிரூபிக்கக்கூடிய நபருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nath, Parshathy J. (26 October 2016). "Young and restless". பார்க்கப்பட்ட நாள் 8 November 2016 – via The Hindu.
  2. Nath, Parshathy J. (5 March 2013). "The right angle". பார்க்கப்பட்ட நாள் 8 November 2016 – via The Hindu.
  3. "Konkanworld - Young and restless". konkanworld.com. Archived from the original on 8 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 November 2016.
  4. "Coimbatore city falls in love with street plays | Covaipost".
  5. Nath, Parshathy J. (6 March 2013). "The right angle" – via www.thehindu.com.
  6. http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=3514&id1=84&issue=20161101
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மலர்_அன்னம்&oldid=3555628" இலிருந்து மீள்விக்கப்பட்டது