செம்மண் மடல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செம்மண் மடல்கள்
நூல் பெயர்:செம்மண் மடல்கள்
ஆசிரியர்(கள்):இரா. மீனாட்சி
வகை:கடித இலக்கியம்
துறை:கட்டுரை
இடம்:புதுச்சேரி
மொழி:தமிழ்
பதிப்பகர்:கபிலன் பதிப்பகம்
பதிப்பு:2012
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

செம்மண் மடல்கள் என்பது கவிஞர் இரா. மீனாட்சியினால் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய நூலாகும். சர்வதேச நகரமான ஆரோவில்லிலிருந்து வெளிவரும் செய்திமடலின் ஆசிரியரான இவர், தமது ஆசிரியர் பக்கக் கடிதங்களைத் தொகுத்து செம்மண் மடல்கள் என்ற தலைப்பில் நூலாக்கியுள்ளார். புதுச்சேரி கபிலன் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

நூல் அறிமுகம்[தொகு]

இந்நூல் 129 தலைப்புகளில் சுமார் 15 ஆண்டுகால வரலாற்றைப் பதிவு செய்யும் விதமாக அமைந்துள்ளது. கூடவே, உரிய புகைப்படங்களும் இணைக்கப் பெற்றுள்ளன. தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் விருதை இந்நூல் பெற்றுள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]

தினமணி மதிப்புரை

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மண்_மடல்கள்&oldid=2803286" இருந்து மீள்விக்கப்பட்டது