உள்ளடக்கத்துக்குச் செல்

செம்மஞ்சேரி (கேரளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்மஞ்சேரி
கிராமம்
செம்மஞ்சேரி is located in கேரளம்
செம்மஞ்சேரி
செம்மஞ்சேரி
கேரளத்தில் செம்மஞ்சேரியின் அமைவிடம்
செம்மஞ்சேரி is located in இந்தியா
செம்மஞ்சேரி
செம்மஞ்சேரி
செம்மஞ்சேரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°24′42″N 75°44′06″E / 11.411590°N 75.734990°E / 11.411590; 75.734990
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோழிக்கோடு
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்32,532
மொழிகள்
 • அலுவல்மலையாளம், English
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

செம்மஞ்சேரி (Chemancheri) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும்.[1]

மக்கள்தொகை

[தொகு]

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, செம்மன்சேரியின் மக்கள் தொகை 32,532 என்ற எண்ணிகையில் இருந்தனர். இதில் 15,281 ஆண்களும் 17,251 பெண்களும் உள்ளனர்.[2]

செம்மஞ்சேரி குஞ்ஞிராமன் நாயர்

[தொகு]

புகழ்பெற்ற கதகளி கலைஞர் குன்னிராமன் நாயர் செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர். அவர் தனது வாழ்க்கையின் கடைசிவரை கதகளி கற்றுக்கொள்வதிலும் கற்பிப்பதிலும் கழித்தார். கிருஷ்ணர் வேடத்தில் ஆயிரம் முறை நடித்துள்ளார். இந்திய அரசு இவருக்கு 2017 ஆம் ஆண்டில் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதானபத்மசிறீ விருதை வழங்கியது.[3]

போக்குவரத்து

[தொகு]

செம்மஞ்சேரி கிராமம் கோயிலாண்டி நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகிறது. கண்ணூர் மற்றும் கோழிக்கோடு ஆகியவை அருகிலுள்ள விமான நிலையங்கள். செம்மஞ்சேரி தொடருந்து நிலையமும், செம்மஞ்சேரி தொடருந்து நிலையமும் அருகில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 66 கொயிலாண்டி வழியாகச் சென்று மங்களூர், கோவா மற்றும் மும்பை போன்ற வடக்குப் பகுதிகளை இணைக்கிறது. மேலும், தெற்கே கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. குற்றியாடி வழியாக செல்லும் கிழக்கு தேசிய நெடுஞ்சாலை எண் 54 மானந்தவாடி, மைசூர் மற்றும் பெங்களூரை இணைக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. Retrieved 2008-12-10.
  2. ↑ "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. Retrieved 2008-12-10.
  3. ↑ "Padma Awards: 2017". Ministry of Home Affairs (India). 25 January 2017. Archived from the original (PDF) on 27 January 2017. Retrieved 25 January 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மஞ்சேரி_(கேரளம்)&oldid=4636717" இலிருந்து மீள்விக்கப்பட்டது