செம்மஞ்சேரி குன்னிராமன் நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்மஞ்சேரி குன்னிராமன் நாயர்

செம்மஞ்சேரி குன்னிராமன் நாயர் (26, சூன் 1916) கதகளி நடனக் கலைஞர் ஆவார். கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர்.[1]

வாழ்க்கை வரலாறு[தொகு]

சென்னையில் ஓராண்டு தங்கிப் தஞ்சாவூர் பாலசரஸ்வதியிடம் பரத நாட்டியம் கற்றுக் கொண்டார். 15 ஆம் அகவையில் குரு கருணாகர மேனன் என்பவர் நடத்திக் கொண்டிருந்த கதகளி நடனக் குழுவில் சேர்ந்து கதகளி நடனத்தைக் கற்றுக் கொண்டார்.

தொடக்கக் காலத்தில் திரௌபதி வேடத்தில் நடித்தார். கதகளி நடனத்தில் கிருட்டினராக நடித்து மக்களிடம் பெரும் புகழ் பெற்றார். 1948 இல் கேரளத்தில் கன்னுரில் பரத நாட்டியப்பள்ளி ஒன்றைத் தொடங்கினார். 1948 இல் பேரி சர்க்கசு நிறுவனத்தில் சேர்ந்தார். கிருட்டினா கோபிகா நடனத்தைக் ஆடிக்காட்டினார். 1983 இல் செலிய கதகளி வித்தியாலயம் என்ற பெயரில் செலிய என்ற அவருடைய சொந்த ஊரில் தொடங்கினார். முத்திரை என அழைக்கப்படும் இவருடைய கை நளினங்கள் நடனம் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும் தன்மை கொண்டவை.

பெற்ற விருதுகள்[தொகு]

  • கேரள சங்கீதா நாடக அகாதமி விருது-1979
  • கலா மண்டபம் விருது-2001
  • தர்ப்பணம் நாட்டிய குல்பதி விருது-2002
  • மயில்பீலி விருது
  • கேரளா கலா மண்டலம் கலா ரத்தினம் விருது

சான்றாவணம்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

http://www.hindustantimes.com/morefromlifestyle/meet-the-100-year-old-kathakali-dancer-kunhiraman-nair/story-6wjhZH2a0edhkbQMJz9pFO.html