உள்ளடக்கத்துக்குச் செல்

செம்புள்ளி தொற்றுநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செம்புள்ளி (Roseola) என்பது சில வகையான தீ நுண்மங்களினால் ஏற்படும் தொற்று நோய் ஆகும்.[1] பொதுவாக இத்தொற்று நோய் மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கே ஏற்படுகின்றது.[2] காய்ச்சலை தொடர்ந்து சொறி ஏற்படும். காய்ச்சல் பொதுவாக மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். சொறி மூன்று நாட்களுக்கு குறைவாக நீடிக்கும்.[1][2] சில சந்தர்ப்பங்களில கடுமையான காய்ச்சலினால் வலிப்புத் தாக்கங்கள் ஏற்படலாம். கடுமையான நோய்நிலை அரிதாகவே நிகழும்.[2]

செம்புள்ளி தொற்றுநோய்
செம்புள்ளி தொற்றால் பாதிக்கப்பட்ட 21 மாத வயதுடைய குழந்தை
சிறப்புதொற்றுநோய்
அறிகுறிகள்காய்ச்சலை தொடர்ந்து சொறி
வழமையான தொடக்கம்மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்
கால அளவுசில நாட்கள்
காரணங்கள்மனித ஹெர்பஸ்வைரஸ் (HHV-6) or மனித ஹெர்பஸ்வைரஸ் 7 (HHV-7)
நோயறிதல்பொதுவான அறிகுறிகளல் இனங்கணலாம்
ஒத்த நிலைமைகள்தட்டம்மை, ருபல்லா, செங்காய்ச்சல்
சிகிச்சைஆதரவான கவனிப்பு

இந்நோய் நிலை மனித ஹெர்பஸ்வைரஸ் 6  (HHV-6) அல்லது மனித ஹெர்பஸ்வைரஸ் 7 (HHV-7) எனும் தீ நுண்மங்களால் ஏற்படுகின்றது.[1] இத் தீ நுண்மங்கள் பொதுவாக உமிழ்நீர் வழியாக பரவும். கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கு பரவக்கூடும்.[1] இந்நோயை இரத்த பரிசோதனையில் உறுதிப்படுத்தலாம். இந்நோய் நிலையின் போது  வெண்குருதியணுக்களின் எண்ணிக்கை குறையலாம்.[1]

செம்புள்ளிக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள் உள்ளன.[1] ஆண்களும் பெண்களும் சமமாக பாதிக்கப்படுகிறார்கள்.[2] 1910 ஆம் ஆண்டில் இந்நோய் முதன்முதலில் விவரிக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டில் இந்த நோயை ஏற்படுத்தும் தீ நுண்மம் உறுதிப்படுத்தப்பட்டது.[1] நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்களுக்கு இந்த நோய் மீண்டும் செயல்படக்கூடும். மேலும் குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.[1]

அறிகுறிகள்

[தொகு]

செம்புள்ளி தொற்றுநோய் பொதுவாக ஆறு மாதங்கள் முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளை பாதிக்கிறது. திடீரென அதிக காய்ச்சலுடன் (39-40 °C; 102.2-104 °F) ஏற்படுகிறது. அரிதான சந்தர்ப்பங்களில், உடல் வெப்பநிலை திடீரென அதிகரிப்பதன் காரணமாக இது காய்ச்சல் வலிப்புத்தாக்கங்கள் ஏற்படலாம். பெரும்பாலும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவதில்லை. சில நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் தணிந்த பின்னர் இளஞ்சிவப்பு சொறி உடற்பகுதியில் தோன்றி  உடற்பகுதியில் தொடங்கி பின்னர் கைகள், கால்கள் மற்றும் கழுத்து வரையில் பரவுகிறது. அரிப்பை ஏற்படுத்தாத சொறி 1 முதல் 2 நாட்கள் வரை நீடிக்கும்.[3] இதற்கு மாறாக தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தை பொதுவாக நோயுற்றவராகத் தோன்றுவதுடன் சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் சொறி அவர்களின் முகத்தை பாதிக்கும் மற்றும் பல நாட்கள் நீடிக்கும். அரிதான சந்தர்ப்பங்களில் கல்லீரல் செயலிழப்பு ஏற்படலாம்.

முதன்மை எச்.எச்.வி -6 நோய்த்தொற்றின் போது சுமார் 30% குழந்தைகளில் வெளிக் கொப்பளங்கள் ஏற்படுகிறது.[4] காய்ச்சல் வலிப்பு ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனையைப் பெறலாம். இருப்பினும், காய்ச்சல் வலிப்புத்தாக்கங்கள் தீங்கு விளைவிப்பதில்லை. அரிதான சந்தர்ப்பங்களில் குழந்தைப் பருவத்தில் இந்நோயினால் பாதிப்புற்றவருக்கு HHV-6 செயலில் இருக்கக்கூடும்.[5]

காரணம்

[தொகு]

செம்புள்ளி தொற்றுநோய் மனித ஹெர்பஸ்வைரஸ் 6 (HHV-6) , மனித ஹெர்பஸ்வைரஸ் 7  (HHV-7) ஆகிய இரு வகை தீ நுண்மங்களால் ஏற்படுகின்றன. இவ்விரண்டும் ரோசோலோவைரஸ் என்று குறிப்பிடப்படுகின்றன. HHV-6 தீ நுண்மத்தில் HHV-6a , HHV-6b ஆகிய இரு வகைகள் உண்டு. அமெரிக்கா, ஐரோப்பா, துபாய் மற்றும் யப்பான் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் HHV-6b தீ நுண்மத்தினால் வெளிக்கொப்புளங்கள் (எக்சாந்தேமா சபிட்டம்) ஏற்படுவதாக அறியப்பட்டது. HHV-6 இன் இந்த வடிவம்  90% வீதத்திற்கு அதிகமாக 2 வயதிற்குள் குழந்தைகளுக்கு  தொற்றுகிறது.

தடுப்பு

[தொகு]

எக்சாந்தேமா சபிட்டத்திற்கான குறிப்பிட்ட தடுப்பூசி அல்லது சிகிச்சை இல்லை. இந்நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் தீவிர நோய்வாய்ப்பட்டவர்கள் அல்ல.

சிகிச்சை

[தொகு]

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எச்.எச்.வி -6 நோய்த்தொற்று தானாகவே குணமடையும்.[6] கடுமையான நிலைகளில் இவற்றுக்கான பயனுள்ள மருந்துகள் காணப்படுகின்றன.[7]

வரலாறு

[தொகு]

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த நோயைப் பற்றி விரிவாக ஜான் சஹோர்ஸ்கி எழுதினார். 1913 அக்டோபர் 18 வெளிவந்த  ஜமா என்ற கட்டுரையில் சரும நோய்களில் செம்புள்ளி தொற்றுநோய் முக்கிய இடத்தைப் பெற்றது. இதில் நோயறிதலில் தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டிய ஒரே நிபந்தனை ஜெர்மன் தட்டம்மை (ரூபல்லா) என்று குறிப்பிடுகிறார்.[8]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Campadelli-Fiume, Gabriella (1999). "Human Herpesvirus 6: An Emerging Pathogen". Archived from the original on 2017-09-26.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. 2.0 2.1 2.2 2.3 Stone, RC; Micali, GA; Schwartz, RA (April 2014). "Roseola infantum and its causal human herpesviruses". International Journal of Dermatology. 53(4): 397–403. doi:10.1111/ijd.12310. PMID 24673253.
  3. "Roseola: Symptoms, Causes, and Treatments". WebMD (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-04.
  4. Zerr, D. M.; Meier, A. S.; Selke, S. S.; Frenkel, L. M.; Huang, M. L.; Wald, A.; Rhoads, M. P.; Nguy, L.; Bornemann, R.; Morrow, R. A.; Corey, L. (2005). "A Population-Based Study of Primary Human Herpesvirus 6 Infection". New England Journal of Medicine. 352 (8): 768–776. doi:10.1056/NEJMoa042207. PMID 15728809.
  5. Stoeckle MY (2000). "The spectrum of human herpesvirus 6 infection: from roseola infantum to adult disease". Annu. Rev. Med. 51: 423–30. doi:10.1146/annurev.med.51.1.423. PMID 10774474.
  6. "Clinical impact of primary infection with roseoloviruses". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  7. "Roseolovirus-associated encephalitis in immunocompetent and immunocompromised individuals". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  8. John Zahorsky. Roseola Infantum. Journal of the American Medical Association. Oct 18, 1913 pages 1446-1450
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்புள்ளி_தொற்றுநோய்&oldid=3555610" இலிருந்து மீள்விக்கப்பட்டது