செம்புறழ் புரிசை
Appearance
செம்புறழ் புரிசை என்னும் கோட்டை சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனால் தகர்க்கப்பட்ட செய்தியைப் புலவர் மாறோக்கத்து நப்பசலையார் குறிப்பிட்டுள்ளார்.[1] நிறம், வலிமை, வார்ப்பு ஆகியவற்றால் இது செம்புறழ் புரிசை எனப்பட்டது.
இதன் அகழியில் முதலைகள் இருந்தன. இரவில் காவல் புரியும் வீரனின் கையிலிருந்த விளக்கொளி அகழி நீரில் விழ, அதனைத் தனக்குக் கிடைத்த இரை என்று முதலை பாயும் என்று புலவர் இதன் அகழியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கோள் குறிப்பு
[தொகு]- ↑
சினம் கெழு தானை, செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டு கண் அகழி,
இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி, 10
செம்பு உறழ் புரிசை, செம்மல் மூதூர்,
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின்,
'நல்ல' என்னாது, சிதைத்தல்
வல்லையால், நெடுந்தகை! செருவத்தானே. புறநானூறு 37