செம்பிட்டப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செம்பிட்டப்பள்ளி (Chempittapally) இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருக்கும் மேற்கு கொச்சியில் உள்ள ஒரு பழைய பள்ளிவாசலாகும். [1] "செம்பிட்டப்பள்ளி" என்ற பெயர் வெண்கலம் என்ற பொருள் கொண்ட மலையாள மொழி சொல் "செம்ப்" மற்றும் பள்ளிவாசல் என்ற பொருளைக் குறிக்கும் பள்ளி என்ற சொல்லிலிருந்தும் உருவானதாகும்.[2] [3] இந்த புகழ்பெற்ற பள்ளிவாசலின் மேற்கூரை வெண்கல ஓடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.[4] பள்ளிவாசல் சுற்றுச் சுவரில் 3 வாயில்கள் உள்ளன; மேற்கு புறத்தில் இருக்கும் வாயில் பணயாபில்லி கிராமத்தை நோக்கி திறக்கிறது. தெற்கில் உள்ள மற்றொரு வாயில் தங்கமுக்கு மற்றும் கோச்சங்காடி பகுதிகளை நோக்கித் திறக்கிறது. கிழக்கு பக்கத்தில் பிரதான வாசல் அமைந்துள்ளது. வடக்குப் பக்கத்தில் யூதர் தெரு மற்றும் மட்டஞ்சேரி பசார் பகுதிகளும் மற்றும் தெற்கு நோக்கிய பக்கத்தில் சுல்லிகல் பகுதியும் உள்ளன.

மேற்கோள்ககள்[தொகு]

  1. "Chempittapally Masjid". Pilgrimage Ask (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-04-22. பார்க்கப்பட்ட நாள் 2019-02-14.
  2. "bronze - Meaning in Malayalam - bronze in Malayalam - Shabdkosh | ശബ്ദകോശം : English Malayalam Dictionary". www.shabdkosh.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-14.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Odathil Palli Masjid Thalassery Kerala". www.tourmyindia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-14.
  4. "India masjid".
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பிட்டப்பள்ளி&oldid=3246097" இலிருந்து மீள்விக்கப்பட்டது