செம்பழுப்பு மார்பு சிலம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பழுப்பு மார்பு சிலம்பன்
மேகோ வனவிலங்கு சரணாலயம், அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து (இந்தியா)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
திமாலிடே
பேரினம்:
சையனோடெர்மா
இனம்:
சை. ரூபிப்ரான்சு
இருசொற் பெயரீடு
சையனோடெர்மா ரூபிப்ரான்சு
(ஹியூம், 1873)

செம்பழுப்பு மார்பு சிலம்பன் (rufous-fronted babbler) என்ற சையனோடெர்மா ரூபிப்ரான்சு (Cyanoderma rufifrons) என்பது பழைய உலக சிலம்பன் குடும்பத்தினைச் சேர்ந்த ஒரு சிலம்பன் சிற்றினமாகும். இது இமயமலையின் கிழக்குப் பகுதியின் அடிவாரத்திலிருந்து கிழக்கு ஆசியா வரை 120–2,100 m (390–6,890 அடி) உயரப்பகுதியில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

செம்பழுப்பு மார்பு சிலம்பன் பழுப்பு மற்றும் வெளிர் பழுப்பு நிறத்தில் கீழ்ப் பகுதியினையும் மற்றும் மந்தமான பழுப்பு தலைப் பகுதியினையும் கொண்டது. இதன் மேல் இறக்கைகள், வால், புருவம் மற்றும் முகட்டுப் பகுதிகள் வெண்மை கலந்த சாம்பல் நிறத்தில் காணப்படும். செம்பழுப்பு மார்பு சிலம்பன் 12 cm (4.7 அங்) நீளமும் 9–12 g (0.32–0.42 oz) எடையும் கொண்டது. இதன் ஓசை துஹ் துஹ்-துஹ்-துஹ்-துஹ்-துஹ் என்பதாகும்.

வகைப்பாட்டியல்[தொகு]

1873ஆம் ஆண்டில் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் முன்மொழிந்த விலங்கியல் பெயர் இசுடாச்சிரிசு ருபிப்ரான்சு என்பதாகும். இவர் மியான்மரில் உள்ள பெகு மலைத்தொடரிலிருந்து வெளிறிய பழுப்பு நிறத்திலும், ஒரு செந்தலை மற்றும் வெள்ளை முகட்டினைக் கொண்ட சிறிய சிலம்பன் ஒன்றை விவரித்தார்.[2] 1914ஆம் ஆண்டில் ஹெர்பர்ட் ஹேஸ்டிங் ஹாரிங்டன் என்பவரால் இசுடாச்சிரிடோப்சிசு ருபிப்ரான்சு அம்பிகுவா ஒரு துணையினமாக முன்மொழியப்பட்டது. இது மஞ்சள் முகட்டினைக் கொண்ட ஒரு செம்பழுப்பு மார்பு சிலம்பனாகும். சிக்கிம், பூட்டான் தோர்சு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் இவைக் காணப்படுகிறது.[3] செம்பழுப்பு மார்பு சிலம்பன் பின்னர் இசுடாச்சிரிடோப்சிசு பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டது.[4][5]

தாய்லாந்தில் உள்ள டோய் சியாங் டாவோவில் சேகரிக்கப்பட்ட மூன்று சிலம்பன் மாதிரிகளுக்காக 1939-ல் ஹெர்பர்ட் கிர்டன் டீக்னனால் இசுடாச்சிரிசு ரோடோல்பி முன்மொழியப்பட்டது. இது செம்பழுப்பு பழுப்பு மார்பு சிலம்பனுடன் ஒத்த சிற்றினமாகக் கருதப்படுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Cyanoderma rufifrons". IUCN Red List of Threatened Species 2016: e.T103895265A94483478. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103895265A94483478.en. https://www.iucnredlist.org/species/103895265/94483478. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. Hume, A. O. (1873). "Novelties – Stachyris rufifrons, Nov. Sp..". Stray Feathers 1 (6): 479–480. https://archive.org/details/strayfeathersjou11873hume/page/479. 
  3. Harington, H. H. (1914). "Notes on the Indian Timeliides and their allies (laughing thrushes, babblers, &c.) Part IV. Family Timeliidæ". Journal of the Bombay Natural History Society 23: 614–657. https://archive.org/details/journalofbombayn231914bomb/page/630. 
  4. Moyle, R. G.; Andersen, M. J.; Oliveros, C. H.; Steinheimer, F. D.; Reddy, S. (2012). "Phylogeny and Biogeography of the Core Babblers (Aves: Timaliidae)". Systematic Biology 61 (4): 631–651. doi:10.1093/sysbio/sys027. பப்மெட்:22328569. 
  5. Collar, N. J.; Robson, C. (2016). "Rufous-fronted Babbler (Cyanoderma rufifrons)". Handbook of the Birds of the World. 12. Picathartes to Tits and Chickadees. Barcelona: Lynx Edicions. https://www.hbw.com/species/rufous-fronted-babbler-cyanoderma-rufifrons. Collar, N. J.; Robson, C. (2016).
  6. Collar, N. J. (2006). "A partial revision of the Asian babblers (Timaliidae)". Forktail (22): 85–112. https://orientalbirdclub.org/wp-content/uploads/2012/09/Collar-Babbler.pdf. 

வெளி இணைப்புகள்[தொகு]

  • BirdLife International (2019). "Rufous-fronted Babbler Cyanoderma rufifrons".