உள்ளடக்கத்துக்குச் செல்

செம்பழுப்பு மார்பு குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பழுப்பு மார்பு குயில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
காகோமேண்டிசு
இனம்:
கா. காசுடனேவென்ட்ரிசு
இருசொற் பெயரீடு
காகோமேண்டிசு காசுடனேவென்ட்ரிசு
கெளல்டு, 1867

செம்பழுப்பு மார்பு குயில் (Chestnut-breasted cuckoo) என்பது குயில் குடும்பமான குக்குலிடேவினைச் சேர்ந்த ஒரு சிற்றினமாகும் (காகோமேண்டிசு காசுடனேவென்ட்ரிசு). இது ஆத்திரேலியா, இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல வறண்ட காடுகள் மற்றும் மிதவெப்பமய அல்லது வெப்ப மண்டலச் சதுப்புநிலக் காடுகள் ஆகும்.

வகைப்பாட்டியல்

[தொகு]

இச்சிற்றினத்தின் கீழ் மூன்று துணையினங்கள் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]

விளக்கம்

[தொகு]

செம்பழுப்பு மார்பு குயில் சுமார் 22-25 சென்டிமீட்டர்கள் நீளம் வரை வளரக்கூடியது. முதிர்ச்சியடைந்த குயில்கள் அடர் சாம்பல்-நீல நிறத் தலை, முதுகு மற்றும் இறக்கைகளுடனும், ஆழ்ந்த செம் மார்பகம், அடிப்பகுதியுடன், கருப்பு மற்றும் வெள்ளை வாலுடன் காணப்படும். இளம் வயதுடைய குயில்களின் கால்கள், தலை மற்றும் இறக்கைகள் மந்தமான சாம்பல் நிறத்துடன் இறக்கைகளின் வெளிப்புறப் பகுதிகளில் மந்தமான நடுத்தரப் பழுப்பு நிறமாகவும், மார்பகம் மற்றும் கீழ் பகுதிகளில் வெளிர் அல்லது இலவங்கப்பட்டை நிறமாகவும் இருக்கும். வால் நடுவில் பழுப்பு பட்டையும் வெள்ளை நிறக் கோட்டுடன் காணப்படும். முதிர்ச்சியடைந்த மற்றும் முதிர்ச்சியடையாத பறவைகளின் கண்களைச் சுற்று மஞ்சள் வளையம் காணப்படும்.

செம்பழுப்பு மார்பு குயில், தூரிகை குயில் (கா. வேரியோலோசசு மற்றும் விசிறி-வால் குயில் (கா. பிளபெல்லிபார்மிசு) ஆகியவற்றை விட சற்றே சிறியது. ஆனால் முதிர்ச்சியடைந்த செம்மார்பு பழுப்பு குயிலின் மார்பகம் மற்றும் அடிப்பகுதி மிகவும் அடர் வண்ணத்தில் காணப்படும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Cacomantis castaneiventris". IUCN Red List of Threatened Species 2016: e.T22683932A93008289. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22683932A93008289.en. https://www.iucnredlist.org/species/22683932/93008289. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Chestnut-breasted Cuckoo (Cacomantis flabelliformis)". Handbook of the Birds of the World Alive. பார்க்கப்பட்ட நாள் 11 January 2020.