உள்ளடக்கத்துக்குச் செல்

செம்பழுப்பு மறிமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Teleostomi
செம்பழுப்பு மறிமான்
Roan antelope
தென்னாப்பிரிக்காவின் ஸ்வாலு கலஹாரி ரிசர்வ் ஈக்வினசில் எச். இ. ஈக்வினஸ்
செனிகலில் எச். இ. கோபா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
H. equinus
இருசொற் பெயரீடு
Hippotragus equinus
(É. Geoffroy, 1803)
     range
வேறு பெயர்கள்
List
  • Antilope equina É. Geoffroy Saint-Hilaire, 1803
  • H. aethiopica (Schinz, 1821)
  • H. aurita (C. H. Smith, 1827)
  • H. barbata (C. H. Smith, 1827)
  • H. docoi கிரே, 1872
  • H. dogetti de Beaux, 1921
  • H. gambianus Sclater and தாமசு, 1899
  • H. jubata (Goldfuss, 1824)
  • H. rufopallidus Neumann, 1899
  • H. truteri (J. B. Fischer, 1829)
  • H. typicus Sclater and Thomas, 1899

செம்பழுப்பு மறிமான் ( Roan antelope ) என்பது மேற்கு, நடு, தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு சவன்னா மறிமான் ஆகும்.[2] இதன் ரோன் நிறத்திற்காக (செம்பழுப்பு) ரோன் மறிமான் என அழைக்கப்படுகிறது. இதன் அடிவயிறு வெளுத்ததகாவும், புருவங்களிலும், கன்னங்களிலும் வெள்ளையாக இருக்கும். இவதன் முகம் கருப்பாக இருக்கும் பெண் மான்களின் நிறம் சற்று இளநிறத்தில் இருக்கும். இது பெரிய மறிமான்களில் ஒன்றாகும். இது குதிரையைப் போன்ற உடலும், தலை அமைப்பும் கொண்டது. குதிரைக்கு இருப்பதுபோல் பிடரிமயிர் இதற்கும் உண்டு. ஆண் மானிற்கும் பெண் மானிற்கும் கொம்புகள் உண்டு. ஆனால் ஆண் மானின் கொம்புகள் நீண்டவையாகவும், உறுதியானவையாகவும் இருக்கும். இது தலையிலிருந்து வால் நுணிப்பகுதி வரை 190–240 செமீ (75–94 அங்குலம்) நீளம் இருக்கும். இதில் வாலின் நீளம் 37–48 செமீ (15–19 அங்குலம்) ஆகும். ஆண் மான்களின் எடை 242–300 கிலோ மற்றும் பெண் மான்கள் 223–280 கிலோ எடை கொண்டவை. தோள்பட்டை வரை இவற்றின் உயரம் சுமார் 130–140 செமீ (51–55 அங்குலம்) ஆகும்.[3][4][5]

வகைப்பாடு

[தொகு]

blesbok (Damaliscus pygargus phillipsi)

bontebok (Damaliscus pygargus pygarus)

bluebuck (Hippotragus leucophaeus)†extinct

செம்பழுப்பு மறிமான் (Hippotragus equinus)

sable antelope (Hippotragus niger)

கிளையினங்கள்

[தொகு]

இதில் ஆறு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:

சிறப்பியல்புகள்

[தொகு]

உடல் விளக்கம்

[தொகு]

செம்பழுப்பு மறிமானானது குதிரை போன்ற உடலமைப்பைக் கொண்ட ஒரு பெரிய மறிமானாகும். இது ஹிப்போட்ராகஸ் பேரினத்தைச் சேர்ந்த மிகப்பெரிய மரிமான் மற்றும் உலகின் மிகப்பெரிய மறிமான்களில் ஒன்றாகும். செம்பழுப்பு மறிமான் நிற்கும்போது தோள் வரை 135–160 சென்டிமீட்டர்கள் (53–63 அங்குலம்) உயரம் இருக்கும். மேலும் 230–320 கிலோகிராம் (510–710 பவுண்டுகள்) எடையுள்ளது. பொதுவாக தலை மற்றும் உடல் நீளம் 235 மற்றும் 285 சென்டிமீட்டர்கள் (93 மற்றும் 112 அங்குலம்) வரை இருக்கும். இதன் வால் கருமையாக முனையில் மயிர் குஞ்சத்தோடு 54 செமீ (21 அங்குலம்) நீளம் கொண்டதாக இருக்கும். .

இதன் ஒரு சிறப்பு அம்சமாக, கழுத்தின் பின்புறம் முதல் முதுகின் நடுப்பகுதி வரை நீளமான சாம்பல்பழுப்பு நிறத்தில் பிடரி மயிர் இருக்கும். இதன் கருப்பு முகத்தில் கண்கள் மற்றும் வாயைச் சுற்றி வெள்ளைத் திட்டுக்கள் இருக்கும். இதற்கு நீளமான காதுகள் உண்டு. காது மடல்கள் 3-5 செமீ (1.2-2.0 அங்குலம்) நீளம் இருக்கும். இதன் நீண்ட கொம்புகள் பின்னோக்கி வளைந்திருக்கும். ஆண்களின் கொம்புகள் 100 செமீ (39 அங்குலம்) நீளம் வரை இருக்கும். பெண் மான்களின் கொம்பு சற்று சிறியதாக இருக்கும். இதன் நீண்ட கால்கள் பெரிய குளம்புகளைக் கொண்டதாக இருக்கும். குட்டையான, வழுவழுப்பான இதன் உரோமம் பழுப்பு முதல் அம்பர் நிறம் வரை இருக்கும். இதன் உடல் அடிப்பகுதி மஞ்சள் முதல் வெள்ளை வரையிலும், கழுத்து சாம்பல் முதல் கருப்பு வரை இருக்கும்.

வாழ்விடம் மற்றும் நடத்தை

[தொகு]

செம்பழுப்பு மரிமான்கள் வனப்பகுதி, புல்வெளி, சவன்னாவில் காணப்படுகின்றன. முக்கியமாக வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல புல்வெளிகள், சவன்னாக்கள் மற்றும் புதர்க் காடுகள் பயோம், இவை மரங்கள் அடர்த்தியாக உள்ள காடுகளில் இருந்து புல்வெளியுடன் கூடிய (மத்திய ஜாம்பேசியன் மியோம்போ வனப்பகுதிகள் போன்றவை) மரங்கள் நிறைந்த புல்வெளிகள் நிலப்பகுதிகளில் வாழ்கின்றன. அங்கு இவை நடுத்தர நீளமுள்ள புற்களை சாப்பிடுகின்றன.

இவை சிறிய மந்தைகளாக வாழ்கிறன. ஒரு மந்தையில் 5 முதல் 15 மரிமான்கள் இருக்கும். கூட்டத்தை ஒரு ஆண் மான் வழிநடத்திச் செல்லும். பொதுவாக ஆண் மான்கள் தங்கள் மந்தையை மேலாதிக்கம் செய்ய தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறன. இரண்டு மான்களும் கால்களால் தாக்கியும், கொம்புகளால் முட்டியும் சண்டையில் ஈடுபடும். இனப்பெருக்க காலத்தில் கூட்டத்தில் இருந்து ஒரு பெண் மானை ஆண் மான் அழைத்துச் சென்றுவிடும். கொஞ்ச காலம் இவை இரண்டும் சேர்ந்து வாழும். பின்னர் பிரிந்துவிடும். இனச்சேர்கையின் பொருட்டே இவை இணைகின்றன.

இதன் கர்ப்ப காலம் ஒன்பது மாதங்களாகும். ஒரு முறைக்கு ஒரு குட்டியை ஈனும். குட்டி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பாலியல் முதிர்ச்சி அடைகிறது.

குறிப்புகள்

[தொகு]
  1. IUCN SSC Antelope Specialist Group (2017). "Hippotragus equinus". IUCN Red List of Threatened Species 2017: e.T10167A50188287. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T10167A50188287.en. https://www.iucnredlist.org/species/10167/50188287. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. "Roan Antelope". World Association of Zoos and Aquariums. Archived from the original on 29 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. ANIMAL BYTES – Roan Antelope பரணிடப்பட்டது 2013-11-02 at the வந்தவழி இயந்திரம்.
  4. Burnie D and Wilson DE (Eds.
  5. Roan antelope videos, photos and facts – Hippotragus equinus பரணிடப்பட்டது 14 சூன் 2012 at the வந்தவழி இயந்திரம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பழுப்பு_மறிமான்&oldid=3930225" இலிருந்து மீள்விக்கப்பட்டது