உள்ளடக்கத்துக்குச் செல்

செம்படி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Chrysophyllum|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

செம்படி
புளோரிடாவில் இலைகளும் பழங்களும்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Chrysophyllum
இனம்:
இருசொற் பெயரீடு
Chrysophyllum oliviforme
L.[2]
வேறு பெயர்கள் [2]
  • Cynodendron oliviforme (L.) Baehni
  • Dactimala oliviformis (L.) Raf.
  • Guersentia oliviformis (L.) Raf.

தாமிர இலை அல்லது செம்படி[3] (Chrysophyllum oliviforme, commonly known as the satinleaf[4]) என்பது புளோரிடா, பஹாமாஸ், பெரிய அண்டிலிசு, பெலிஸ் ஆகியவற்றை பூர்வீகமாகக் கொண்ட ஒரு நடுத்தர அளவிலான மரம் ஆகும். இது டாம்சன் பிளம்[4], காட்டு நட்சத்திர ஆப்பிள்[4] , குங்குமப்பூ மரம் என்றும் அழைக்கப்படுகிறது.[5] இம்மரத்து இலைகளின் தனித்துவமான நிறங்களிலினால் இதற்கு "சாடின் லீஃப்" என்ற பெயர் வந்தது. இதன் இலையின் மேற்பகுதி அடர் பச்சை நிறத்திலும், அடிப்பகுதி வெளிர் பழுப்பு அல்லது செம்பு நிறத்தில் இருக்கும். இந்த தனித்துவமான தோற்றம், இதை மிகவும் அழகியல் ரீதியாக விரும்பத்தக்க மரமாக ஆக்குகிறது, இது பொதுவாக முற்றங்கள் மற்றும் பொது இடங்களில் ஒரு அலங்கார மரமாகப் பயன்படுத்தப்படுகிறது.

வகைப்பாடு

[தொகு]

லின்னேயஸ் விவரித்த பல இனங்களில் செம்படி ஒன்றாகும், இது 1759 ஆம் ஆண்டில் அவரது சிஸ்டமா நேச்சுரேயின் பத்தாவது பதிப்பில் முதன்முறையாக விவரிக்கப்பட்டது.

விளக்கம்

[தொகு]

இந்த இனத் தாவரம் பொதுவாக 3 முதல் 5 மீ (9.8 ) உயரம் கொண்ட புதர் அல்லது சிறிய மரமாக வளருகின்றது. இருப்பினும் சாதகமான சூழலில் இவை 10 மீட்டர் (33 அடி) உயரம் வரை எட்டும். இவற்றின் தண்டுப்பகுதி சுமார் 30 செமீ (12 அங்குலம்) விட்டம் கொண்டதாக இருக்கக்கூடும். மரப்பட்டை மெல்லியதாகவும், பிளவுகள் மற்றும் செதில்களுடனும், சாம்பல்-பழுப்பு நிறத்திலும் காணப்படுகிறது. பொதுவாக இவை ஒற்றைத் தண்டுடன் காணப்படுகின்றன. இவற்றின் சிறு கிளைகள் மெல்லியதாகவும் பழுப்பு நிறத்திலும் இருக்கும். மரம் முதிர்ச்சியடையும் போது கிளைகள் சற்று கீழ்நோக்கித் தொங்கும். இலைகள் மாற்று அடுக்கமைவு கொண்டவை. இவற்றின் மேற் பகுதி அடர் பச்சை நிறத்திலும், அடிப்பகுதி வெளிர் பழுப்பு அல்லது வெளிர் தாமிர நிறத்திலும் இருக்கும். இவை இறகு வடிவ நரம்பமைப்பைக் கொண்ட எளிய இலைகளாகும். இலைகள் முட்டை வடிவமாகவும், 3 முதல் 11 செ.மீ (1.2 - 4.3 அங்குலம்) நீளமும், 2 முதல் 5 செ.மீ (0.79 - 1.97 அங்குலம்) அகலமும் கொண்டவை. இவை பசுமைமாறாத் தாவரங்கள் என்பதால், ஆண்டு முழுவதும் இலைகள் காணப்படும். புளோரிடா போன்ற சில இடங்களில் இவை ஆண்டு முழுவதும் பூக்கின்றன, ஆனால் இவை மற்ற இடங்களில் சூலை முதல் அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் பூக்கின்றன, பிப்ரவரியில் முதிர்ந்த பழங்களை உருவாக்குகின்றன. புவேர்ட்டோ ரிக்கோவில், ஆண்டின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே பூக்கின்றன. இவற்றின் பூக்கள் பூக்கள் சிறியதாகவும், வெண்ணிற மஞ்சள் நிறத்திலும் இருக்கும். [6] இவை 5 இதழ்களையும், 5 மகரந்தத்தாள்களையும் கொண்டுள்ளன. பூக்கள் கொத்தாக அமைந்திருக்கும். நன்கு பழுத்த பழங்கள் அடர் ஊதா நிறத்தில் இருக்கும். இவற்றின் தோல் பிசின் போன்ற தன்மையுடன், உள்ளே உள்ள வெண்மையான சதைப்பகுதியை மூடியிருக்கும். இவை அளவில் ஆலிவ் பழத்தை ஒத்திருக்கும். இப்பழங்கள் உண்ணதக்கவை, ஆனால் மென்று உண்பதற்குச் சற்று கடினமாக இருக்கும். இவற்றில் பல கருப்பு நிற விதைகள் காணப்படுகின்றன. [7]

இலைகள் முட்டை வடிவமானவை மற்றும் இறகு போன்ற நரம்பமைப்பைக் கொண்டவை.
இலையின் மேற்பகுதி

பூக்களும் பழங்களும்

[தொகு]

இதன் பூக்கள் சிறியவை, பொதுவாக 3 முதல் 5 மிமீ (0.12 முதல் 0.20 அங்குலம்) விட்டம் கொண்டவை. வெளிறிய மஞ்சள் நிறத்தில் காணப்படும்.[6] இவை பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கை செய்கின்றன. புளோரிடாவில், ஆண்டு முழுவதும் பூக்களையும், பழங்களையும் காணலாம். ஆனால், புவேர்ட்டோ ரிக்கோ போன்ற சில இடங்களில், ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் மட்டுமே பூக்கள் காணப்படுகின்றன. பழங்கள் முதிர்ச்சியடையப் பல மாதங்கள் ஆகின்றன; பொதுவாக பிப்ரவரி மாதத்திற்குள் அவை பழுத்துவிடுகின்றன. ஆலிவ் பழத்தின் அளவிலேயே இப்பழங்கள் இருக்கும். இப்பழங்கள் பச்சை நிறத்தில் இருக்கும். முதிர்ச்சியடைந்த பிறகு, அடர் ஊதா நிறத்திற்கு மாறுகின்றன. பொதுவாக ஒரு பழத்தில் பல கருப்பு நிற விதைகள் காணப்படும். இரப்பர் அல்லது பிசின் போன்ற தன்மையுள்ள ஒரு மேலுறையால் சூழப்பட்ட, வெள்ளை நிறச் சதைப்பற்றுள்ள பகுதிக்குள் இந்த விதைகள் இருக்கும். இவற்றை வெட்டும்போது விதைகளில் பால் வெள்ளை நிறத் திரவம் கசிகிறது. பறவைகள் மூலம் இந்த விதைகள் பரப்பப்படுகின்றன; பறவைகள் இந்தப் பழங்களை உண்டு, அவற்றின் எச்சத்தின் வழியாக விதைகளை வெளியேற்றுகின்றன. இம்ரங்கள் தங்கள் வளர்ச்சிப் பருவத்தில் மிக மெதுவாகவே வளர்கின்றன.[7]

செம்படி-பழங்கள்

பயன்பாடு

[தொகு]

உணவு

[தொகு]

செம்படி மரத்தின் பழங்கள் உண்ணதக்கவை. அவை பொதுவாக புத்தம்புதிதாக உண்ணப்படுகின்றன.[7][6]

பிற பயன்பாடுகள்

[தொகு]

இதன் மரக் கட்டைகள் கடினமும், வலுவும் கொண்டவை. இதனால் இந்த மரம் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. செதுக்கு வேலைப்பாடுகள் செய்வது கடினம் என்றாலும், வேலித் தூண்கள், கூரைச் சட்டங்கள், உறுதியான உத்திரம் தேவைப்படும் பிற இடங்களுக்கு இது மிகவும் ஏற்றது.[7]

வீட்டு முற்றங்கள், நடைபாதைகள் மற்றும் பிற பொது இடங்களில் அலங்கார மரமாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Botanic Gardens Conservation International (BGCI); IUCN SSC Global Tree Specialist Group (2021). "Chrysophyllum oliviforme". IUCN Red List of Threatened Species 2021. doi:10.2305/IUCN.UK.2021-1.RLTS.T62407A150107536.en. https://www.iucnredlist.org/species/62407/150107536. பார்த்த நாள்: 12 May 2022.
  2. 1 2 "Chrysophyllum oliviforme". Plants of the World Online (in ஆங்கிலம்). அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ. Retrieved 12 May 2022.
  3. ↑ அர.செல்வமணி (2026-08-01). "இலை வரைந்த ஓவியம் | காட்டு வாழ்க்கை 16". Hindu Tamil Thisai. Retrieved 2026-08-30.
  4. 1 2 3
  5. ↑ "Chrysophyllum oliviforme". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
  6. 1 2 3 Gann, George. "Satinleaf". The Institute for Regional Conservation. Retrieved 30 June 2012.
  7. 1 2 3 4 Francis, John (February 2016). "Chrysophyllum oliviforme L." (PDF). International Institute of Tropical Forestry. Archived from the original (PDF) on 29 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்படி&oldid=4632568" இலிருந்து மீள்விக்கப்பட்டது