உள்ளடக்கத்துக்குச் செல்

செமிதாங்கு

ஆள்கூறுகள்: 27°42′38″N 91°43′48″E / 27.7106891°N 91.7300530°E / 27.7106891; 91.7300530
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செமிதாங்கு
Zemithang
பாங்சென்
கிராமம்
செமிதாங்கு வட்டம்
செமிதாங்கு வட்டம்
செமிதாங்கு Zemithang is located in அருணாசலப் பிரதேசம்
செமிதாங்கு Zemithang
செமிதாங்கு
Zemithang
Location in Arunachal Pradesh, India
செமிதாங்கு Zemithang is located in இந்தியா
செமிதாங்கு Zemithang
செமிதாங்கு
Zemithang
செமிதாங்கு
Zemithang (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°42′38″N 91°43′48″E / 27.7106891°N 91.7300530°E / 27.7106891; 91.7300530
நாட்டு இந்தியா
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்தவாங்கு
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,498
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

செமிதாங்கு (Zemithang) இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். பாங்சென், சிமிதாங்கு கிராமம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இக்கிராமம் பெயரிடப்பட்ட ஒரு வட்டத்தின் தலைமையகமும் ஆகும். திபெத்தில் தோன்றி வடக்கில் இருந்து கின்செமனே என்ற இடத்திற்கு அருகில் இந்தியாவிற்குள் நுழையும் நியாம்யாங்கு சூ என்ற ஆற்றின் கரையில் செமிதாங்கு கிராமம் அமைந்துள்ளது.

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியின் எல்லையிலும், மேற்கில் பூட்டான் எல்லையிலும் அமைந்துள்ள செமிதாங்கு வட்டம் என்பது இந்தியாவின் கடைசி நிர்வாகப் பிரிவு ஆகும்.[1][2][3] 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செமிதாங்கு வட்டத்தின் 18 கிராமங்களில் மொத்தமாக 2,498 பேர் வசித்தனர். செமிதாங்கு வட்டம் மற்றும் இதன் தெற்கே உள்ள துதுங்கர் வட்டம் ஆகியவை இணைந்து ஒரு சமூக மேம்பாட்டுத் தொகுதியை உருவாக்குகின்றன.[4] திபெத்து, நம்கா சூ மற்றும் சும்டோராங் சூ பள்ளத்தாக்குகள் உடனான செமிதாங்கு எல்லை சீனாவுடன் சர்ச்சைக்குரியதாக உள்ளது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sang Khandu (APCS, Circle Officer, Bomdila). "Leaves of Pangchen" (PDF). பார்க்கப்பட்ட நாள் 12 July 2021.
  2. Chowdhary, Charu (2019-07-23). "Zemithang: An Oasis of Calm And Tranquility in Arunachal Pradesh". India.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-12.
  3. "Community from Zemithang Valley bags award for forest conservation". www.wwfindia.org (in ஆங்கிலம்). WWF-India. 10 December 2015. பார்க்கப்பட்ட நாள் 2021-07-12.
  4. Tawang District Census Handbook, Part A (PDF), Directorate of Census Operations, Arunachal Pradesh, 2011, pp. 28, 77
"https://ta.wikipedia.org/w/index.php?title=செமிதாங்கு&oldid=3931228" இலிருந்து மீள்விக்கப்பட்டது